ஞாயிறு, நவம்பர் 25, 2012

வாழ்க ஜனநாயகம்.



அமெரிக்காவில் ஆறுமாதம்,
ஆனந்தமாய்,
கழித்த  பின் இன்று 
இந்தியப் பயணம்.
தாய் நாட்டுப் பற்று,
தாயகம் காணும் 
மகிழ்ச்சி.
செய்தி படித்தேன்.
சென்னையைத் தவிர,
மற்ற நகரங்களில் 
18  மணிநேரம் மின் வெட்டு.
பாவம் என் வயதான அம்மா.
மக்கள் நலம் காக்கும் 
இந்திய நாட்டில்,
 அரசுகள் மாறுவதால்,
திட்டங்களில் மாற்றம்.
ஒருவர் புகைவண்டி மேலே செல்லவேண்டும் என்றால்,
ஒருவர் பூமிக்குள் செல்லவேண்டும் என்பார்.
அவர் பதவி போய் இவர் பதவி வந்தால்,
திட்டங்கள் தூள்-தூள்.
நட்டங்கள் மக்கள் வரிப்பணம்.
அவர்களுக்கென்ன அயல் நாட்டு சேமிப்பு.
வாழ்க ஜனநாயகம்.
ஆறுமுகக்  கடவுள்,
ஆனை முகன் தம்பி,
அறுபடை வீட்டு நாயகன்,
அவன் பதம்  பணிவோம் யாம்.
அவனியில் நம் இச்சைகள் 
அவனருளால் 
விருப்பங்களாகி,
செயலுருப்பெற்று,
உள்ள நிறையுடன்,
ஊக்கம்  பெற்று,
உள்ளம் மகிழ்ந்து ,
நோய்நொடி இன்றி,
நீண்ட காலம்,
இனிதே வாழலாம்.

ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

ஹிந்து புராணங்களின் சர்ச்சைகள் வந்த வண்ணமாக உள்ளன.
மோகினி அவதாரம் பற்றிய சர்ச்சை.
இறைவன் பற்றிய வரலாற்றை ,
விவாதம் செய்வது பாவம் என்றோருவாதம்.
ஆனால் ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

அது ஒரு பூமி.
அதில் சவத்தையும்  புதைக்கலாம்.
சாக்கடையையும் ஓடவிடலாம்.
புனித கங்கையும் ஓடவிடலாம்.
குழியும் தோண்டலாம்.
சுரங்கங்கள் தோண்டலாம்.
தங்கமும் வெட்டி எடுக்கலாம்.
நிலக்கரி எடுக்கலாம்.
வைரமும் எடுக்கலாம்.
எலும்புக் கூடுகளும் கிடைக்கலாம்.
புதையலும் எடுக்கலாம் .
புண்ணியர்களையும் புதைக்கலாம்.
பாவிகளையும் புதைக்கலாம்.
அறிவு,பதவி,அறிவியல் மேதைகள்,
நாஸ்திகர்கள்,ஆஸ்திகர்கள் 
அனைவரும் சங்கமிக்கும் இடம் பூமி.
ஆகையால் இந்துமதம் கர்ம பூமி,
கர்மத்துக்கேற்ற வாழ்க்கையை கொடுக்கும் பூமி.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்.
ஆகையால் இது வினைக்கேற்ற பலன் தரும் 
சனாதன தர்மம் என்ற சகிக்கும் பூமி.
அருவுருவமும் ஆனாய் போற்றி 
அகிலத்திற்கே ஒரு ஆதர்ஷ பூமி.