வியாழன், டிசம்பர் 10, 2015

nanri ஐயப்பனையும் வேண்டினோம்

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோம் 
வேதனை அச்சம் பிரார்த்தனை 

யானை முகத்தோனை வேண்டினோம் 
ஆறுமுகத்தை வேண்டினோம் 
அல்லாவையும் வேண்டினோம் 
ஏசுவையும் வேண்டினோம் 
எல்லா பேதங்களையும் மறந்தோம் 
மனிதனையும் மனிதநேயத்தையும் 
கண்டோம் ;கண்ணீர் சேர்த்ததா ?
தண்ணீர் சேர்த்ததா ?
தண்ணீர் வீட்டினுள் நுழைந்து 
அக பேதங்களை அழி த்தது.
மத வேறுபாடுகளை அழித்தது. 
கைமாருகருதா உதவிகள்,
முகம்முகவரி தெரியாதோர் உதவிகள் 
அரசைக் குறைகூருவோர் கூறினாலும் 
அரசின்  துரித நடவடிக்கை தூய்மைப்பணி 
துப்புரவு ஊழியர்கள் ஈரோடு வந்து 
ஈ மொய்க்கும் குப்பைகள்  அகன்றன.
ஈடுபாடு கண்டு அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அவர்கள் காட்டிய இரக்கமொழி  கிரங்கவைத்தது.
மன ஈடுபாட்டுடன் இனிய புன்சிரிப்புடன் முகத்தில் வருத்தம் 
அவர்களுக்கு தனி நன்றி. வேளச்சேரி பகுதி 
அண்ணாநகர் இரண்டாவது தெரு குறுக்குத்தெரு என 
சுத்தம் செய்தனர் ஆனால் ப்ளீச்சிங்  பவுடர் அரசு அளித்ததா   இல்லையா ?
விரைவில் அளிக்க வேண்டுகிறோம். 

துப்புரவில் ஈடுபட்ட வர்களுக்கு சிறப்பு நன்றி. வாழ்க !



ஐயப்பனையும் வேண்டினோம்