வெள்ளி, நவம்பர் 02, 2012

ஹிந்தி பக்தி இலக்கியத்தில் "கவி விருந்த் "நீதிநூல்


ஹிந்தி பக்தி இலக்கியத்தில்   "கவி விருந்த் "நீதிநூல் எழுதுவதில் 
சிறந்தவர். அவர் ஔரங்க ஜீப் அரச கவிஞர்.
அவர் எழுதிய யீரடிகளின்   பதவுரை.


புலி பசித்தாலும் புல்லைத் திங்காது. வீரத்துடன் யானையைத் தாக்கி அதைக் கொன்று   புலி   யானையின் தலை யைச் சாப்பிடும்
.அவ்வாறே  துணிச்சல் உள்ளவர்கள் ,எளிய-பலம்  இல்லாதவர்கள்  போன்று காரியம் செய்யமாட்டார்கள்.
அவர்கள் தங்கள் துணிச்சலும் ,வீரமும் காட்டும் செயலையே செய்ய விரும்புவர்.
இந்நில  உலகில்   இனிய பேச்சு/புகழ் வார்த்தைகளை விட,
வெகுமதி அளித்தால் மக்கள்  அதிக   மகிழ்ச்சி அடைவார்கள்.
 உலகநாதர் சிவன் எருக்கம்பூ /ஊமைத்தைபூவில் அர்ச்சனை செய்தால் மகிழ்கிறார்.
 விஷ்ணு பகவான்  துளசி  இலை  அர்ச்சனையில் மகிழ்கிறார். வெகுமதியால்  தான் சந்தோசம். வீணான இனிமை பேச்சால் அல்ல.

நோய்  உள்ளவர்களுக்கு நோய் தீர மருந்து.
அவ்வாறே  இல்லாத வறியவர்களுக்கு அழிப்பது தான் சிறந்த தானம். இருப்பவர்களுக்கு கொடுப்பதால் தானத்தின் பயன் இல்லை.இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதே  சிறந்த வள்ளல் தன்மை.

சிரிக்காதே.எதற்காக சிரிக்கிறாய். சிரித்ததால் ஒரு அரச குலமே அழிந்துவிட்டது.துரௌபதியின்   சிரிப்பால் அழிந்தது கௌரவர்  குலம்

.மனிதனுக்கு துன்பமோ ,விபத்தோ வந்தால்,மதி கெட்டுப்போகிறது.விதிவசத்தால் விபத்து ஏற்பட்டால்,ஏழைக்கும்,அரசனுக்கும் மேதைக்கும் அறிவு மழுங்கித்தான் போகும்.பொன்மான் பின்னால்  ராமன் சென்றதால்,அவர் தன்  அன்பு சீதையை  பிரிந்தார்.அந்த  மான் மாய மான் என்று அறியவில்லை.

மற்றவர்கள் கூஜா தூக்கிகள். இந்தமுதலாளி இல்லை என்றால் அந்த முதலாளி. வாழ்க ஜனநாயகம்.

பாரத நாட்டு அரசியல்.


பாரதநாட்டின் அரசியல் ,
பாமரனை   குழப்பத்தில் 

வைத்து குளிர்காயும் 
அரசியல்.

இருபெரும் அரசியல் கட்சி.
இரு  பெரும் மாநில கட்சிகள்.

இவர்களின் மேல்  குற்றம் சாட்டும்,

சிறு சிறு அரசியல்  தலைவர்கள்.

சிறு சிறு ஜாதிக்கட்சிகள்.

தங்கள் சுயநலம்  நிறைவேற 
 பெருந்தலைவர்கள்  ஊழல்,ஊழல்,
என்று சொல்லி 
யார் மேல் குற்றம் 
சாட்டினார்களோ  அவர்களையே 
ஆட்சி யாளர்களாக்க ,
வாழ்க போடும் கூட்டம்.
குற்றம் சாட்டி இன்றுவரை எதுவும் 
நிரூபிக்கப் படவில்லை.
யாரும் தண்டனை பெறவில்லை.
கூட்டணியில் 
சிறுகட்சிகள் மாறி மாறி சேருவதும் 
பிரிவதும் ,
மக்களை குழப்பத்தில் 
ஆழ்த்துவதும்,
ஊழல் கட்சிகள்  வாக்குகள் பெற்று 
ஆட்சியில் அமருவதும் 
குற்றம் சாட்டியவர்கள் 
குளிர் காய்வதும் 
அரசியல் தலைவர்களின் 
அற்புத விளையாட்டு.
அனைவரும் போற்றும் தலைவர்கள்,
காந்தி;நேரு,அண்ணா.
தூற்றும் தலைவர்கள் 
சோனியா;அத்வானி;
லாலுஜி,மாயாவதி ,
கலஞரவர்கள்;செல்வி புரட்சித்தலைவி.
அனைவரையும் தூற்றுபவர்கள் 
அவர்கள் மீது   சாட்டும் 
குற்றங்கள் நிரூபிக்க உறுதியுடன் 
இல்லாத சந்தர்ப வாத 
துணிச்சல் காரர்கள்.
நாட்டின் நலம் விரும்பிகளாக 
இல்லாமல் இருப்பதால் இந்நிலை.
வாழ்க ஜனநாயகம்.
வாழ்க சோனியா;அத்வானி;
கருணாநிதி ;ஜெயலலிதா.
மற்றவர்கள் கூஜா தூக்கிகள்.
இந்தமுதலாளி இல்லை என்றால் 
அந்த முதலாளி.
நடுவில் சுப்ரமணிய சாமி.
வாழ்க ஜனநாயகம்.




கபீர். ஞான மார்க்கம் -3


கபீர்.
ஞான மார்க்கம் -3

நீ அறியாமை என்ற முக்காடை நீக்கினால்,

உன் இறைவன் உனக்கு கிடைப்பார்.
அங்குஇங்கு  எனாதபடி 
அகிலத்தில் எங்கும் வியாபித்து 
இருக்கும் இறைவனை ,
நீ சந்தித்து அருள்பெற விரும்பினால்,
கசப்பான வார்த்தைகள் பேசாதே.
செல்வத்தைச் சேர்த்து 
ஆணவமாக இருக்காதே.
பஞ்ச தத்துவங்களால் ஆன,
இவ்வுடல் பொய்யானது.
(நிலம்நீர்நெருப்புகாற்றுஆகாயம்)
அழியக்கூடியது.
ஆகையால் இந்த வெற்று உடலில் 
ஞானம் என்ற விளக்கு ஏற்று.
ஆசனத்தில் அமர்ந்து 
அசையாமல் இரு.
(ஹட யோகம் )
யோக சாதனையில் 
விலைமதிப்பற்ற 
இறைவனை சந்தித்து 
அருள்பெறுவாய்.
அப்பொழுது 
ஆனந்தம் பரமானந்தமே 
உன்னிடம்குடிகொள்ளும்.
உன்மனதில் 
சதா சர்வகாலமும் 
உடலின் ஆறு சக்கரங்களிலும் 
ஆனந்த பேரிகை
 இசைத்துக்கொண்டே 
இருக்கும்.

(குண்டலினி சக்தி ,(அரவ வடிவான இறை ஆற்றல்)
அதுவே பேரானந்தம்.


ஞான மார்க்கம் கபீர் -2


ஞான மார்க்கம் 
கபீர் 

மாயை  மிக மோசக்காரி.
நாங்கள்  அறிந்துகொண்டோம்.(கபீர் )

அது முக்குணங்களை தன்  கையில் 
வலைவிரித்துச்செல்கிறது. 
(சத்வ,ரஜ ,தாமச குணங்கள் )
அது இனிமையான மயக்க மொழி 
பேசிக்கொண்டே சுற்றிக்கொண்டே இருக்கிறது .
விஷ்ணுவிடம் இலக்குமி யாக வும்,
சிவனிடம் பார்வதியாகவும் 
வீற்றிருக்கிறது.
அது பூசாரிகளிடம்
 இறை உருவச் சிலைகளாக,

புனித இடங்களில் 
புனித நீராக,
ரிஷிகளிடம் ரிஷியாக,
அரசினிடம் அரசியாக,
மயக்கிக் கொண்டு இருக்கிறது.
அது செல்வந்தனிடம் வைரமாகவும்,
ஏழைகளிடம் காசுகளாகவும் 
பக்தனிடம் பக்தியாகவும்,
பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும் 
அமர்ந்து மாயை புரிகிறது.
இந்தமாயை உலகை 
ஆட்டிபடைக்கிறது.
இந்த மாயையின் 
மயக்கும் கதை 
வர்ணனைக்கு அப்பாற்  பட்டது.

ஞான மார்க்கம்-1



கபீர்  ஒரு கல்வி அறிவற்ற  கவிஞர்.
 ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக 
அவர்  பாடிய ஈரடிகள், பத்  என்ற பாடல்கள் .

அவர் இறந்தபின் இந்துக்களும் ,முஸ்லிம்களும் 
அவரது உடலை தத்தம் மதச் சடங்குகள் படி 
அடக்கம் செய்ய விரும்பினர்.
ஆனால் அவர் உடல் மறைந்து 
பூக்களாக மாறின.

அவர் இறைவனை அடைய ஞானம் தான் முக்கியம் என்ற 
ஞான மார்க்கம் தோற்றுவித்தவர்.
அவர் கடவுள் ஒன்றே என்ற தத்துவத்தை 
உணர்த்த பாடல் எழுதியவர்.

அவரின் ஒரு பாடல் கருத்துரை கேளுங்கள்:

இரண்டு கடவுள் எங்கிருந்து வந்தார்?
உன்னை, கடவுள்   இரண்டு என்ற பிரம்மையில் 
ஆழ்த்தியவர்  யார்.?
அவருக்கு அல்லா,கேசவன்,ஹரி,ஹஜ் ரத் என்று 
நாமங்கள் வைத்து இருக்கிறார்கள்..
தங்கத்தால் பலவித பெயரில்  நகைகள். 
.
அந்த நகைகளுக்கு தங்கம் தான் மூலப்பொருள்.

அவ்வாறே கடவுளுக்கு ,
பல நாமங்கள் இருந்தாலும்,
கடவுள் ஒருவரே.
ஒருவர் தொழுகை என்றால்,
மற்றவர் பூஜை-அர்ச்சனை. 
இருவரும் ஒருவரே.
அந்த இறைவனை சிலர் மகாதேவன்,
சிலர் முஹம்மது ,
 என்கின்றனர்.
சிலர் பிரம்மம், 
சிலர் ஆதம் என்கின்றனர்.
சிலரை ஹிந்து, 
சிலரை முஸ்லிம் என்கின்றனர்.
எல்லோரும் ஒரே மண்ணில் வாழ்கின்றனர்.
ஒருவருக்கு வேதம் புனித நூல் .
ஒருவருக்கு  குரான்  புனிதநூல்.
ஒருவருக்கு தர்ம குரு  மௌலானா.
ஒருவருக்கு தர்ம குரு பூஜாரி.
ஆனால் எல்லோரும் ஒருவரே.
ஒரே மண்ணில் செய்யப்பட்ட,
பலவித மட்பாண்டங்கள்.
அவைகளுக்குப் பலவித  பெயர்கள்.
ஆனால், ஹிந்து முஸ்லிம் இருவரும்,
கடவுள் ஒருவரே  என்ற உண்மை 
தத்துவத்தை மறந்துவிட்டனர்.
அதனால் இருவரும் 
இறைவனை அ டையவில்லை.
முஸ்லிம் பசுவதை செய்கிறான்/
ஹிந்து  வெள்ளாட்டை வதம் செய்கிறான்.
அதனால் இருவரும்  
தங்கள்  குறிக்கோளை அடையவில்லை.
இந்த வேறுபாட்டினால் இருவரும் 
தங்கள்  வாழ்க்கையை 
வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.