திங்கள், பிப்ரவரி 06, 2012

kasappum inikkum

மனிதன்  கசப்பை விரும்புவதில்லை.கசப்பான வாழ்க்கை ,இனிப்பான வாழ்க்கை ,இனிமையான வாழ்க்கை அனைவருக்கும் இயல்பாக அமைவதில்லை.பணம் படைத்த வர்களும் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை நிரப்ப தன் செல்வத்தால் ,தன் அதிகாரத்தால்,தன் அந்தஸ்த்தால்
இயலாத போது  கசப்பான அனுபவத்தால் தன் உயிரையும் விட தயாராகிறான்.

நல்ல சிந்தனையாளர்கள் தன் ஆசை நிறைவேற ஆன்மீகத்தை நாடுகின்றனர்.

அமைதியை நாடுகின்றனர்.தர்ம சிந்தனை வளர்க்கின்றனர்.கசப்பான வாழ்க்கையை இனிமை யாக்கு கின்றனர்.

தீய சிந்தனையாளர்கள் தன் விருப்பங்கள் நிறைவேறும் என்று தீய வழியில் முயற்சித்து அமைதி இழக்கின்றனர்.அதர்ம கார்யங்களில் ஈடுபடுகின்றனர்.இவ்வுலகில் இறுதிவரை கசப்பான வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.

நம் முன்னோர்கள் புண்ணிய கர்மங்கள்,பாப கர்மங்கள் என்றெல்லாம் வழிகாட்டி நல்வழியில் செல்ல அறவழி காட்டி உள்ளனர்.



uravukal

புதிய செய்திகள்,புதிய பாடல்கள்,புதிய கண்டுபிடிப்புகள்,புதியவைகள்
எழுத  பலர் விரும்புகின்றனர்.பழமை விரும்பிகள் இன்று பழமை பற்றி எழுதுபவர்களும் அவர்கள் காலத்தில் புதுமையை விரும்புவர்களாகத்தான்
இருந்திருப்பார்கள்.

இளம் வயதில்   விரும்பும் புதுமை ,முதுமையில் வரும் புதுமையை


விரும்பாமல் பழமையின் சிறப்பைப் பாடுகிறது,
காரணம் புதுமைகள் மனித இனத்தை இயந்திரமயமாக்குவதுதான்.
நாளுக்கு நாள் உறவுகளின் அன்பு குறைந்து வருகிறது.தான் அதிகம் சம்பாத்திதால்  உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ்வதை தவிர்த்து நண்பர்களுடன்
பகிர்வதே சிறப்பானது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.
இன்றைய உறவினர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை காரணமாக அந்தஸ்த்திலும்,பொருளாதாரத்திலும் உயர்ந்த உறவினர்களை நாடிச்செல்வதில்லை.உயர்நிலையில் உள்ளவர்கள் உதவ நினைத்தாலும்
அவர்கள் மனம் ஏற்பதில்லை.
மற்றவர்களிடம் அதிக வட்டிக்கு வாங்கி நாணயமாகக் கொடுப்பவர்கள்,உறவினர்களிடம் வாங்கவும் விரும்பவில்லை,வாங்கினாலும்
திருப்பிக்கொடுக்க விரும்பவில்லை.
உறவினர்களின் குறிகிய எண்ணங்கள் பொறாமையிலும் விரோதத்திலும் குரோதத்திலும் தான் முடிகின்றன.விரிசல் ஏற்படுகின்றன.இது புதுமையல்ல என்பதற்கு இராமாயண மகாபாரத மற்றும் வரலாற்று சான்றுகளும் கிடைக்கின்றன.
அதனால் தான் நல்வழிப்படுத்த பல நூல்கள் பழமையில் உள்ளன.
அதை கண்டு மனம் தெளிவது இன்றைய இளம் தலை முறையினர்களுக்கு அவசியம்.
இந்நோக்கில்    பார்த்தால்  இராமாயணம்,மகாபாரதம் கற்பனைக்  கதைகளோ  என தோன்றுகிறது. .