கபாலீஸ்வரர் மூத்த குமாரன்,
கார்த்திகேயன் சஹோதரன்,
கண நாயகன்,
நவகோள்களின் அதிபதி,
நவசித்தி நவ நிதி
தரும் தயாளன்.
கஜவதனன்.
தயாநிதி.
அரசமரத்தடியில்
அமர்ந்து
தன் சக்தியால்.
காப்பாளர்கள் இன்றி
தரணி ஆள்பவன்.
அருகம்புல்
அர்ச்சனையால்
அகம் மகிழ்பவன்.
எளி மையில்
ஏற்றம் பெற்று
ஏழைகளுக்கு
ஏற்ற தெய்வம்.
ஆகையால் தான்
ஆராதனைக்குப்பின்
அலட்சியத்துக்கு
ஆளாகிறான் .
நாட்டு விடுதலைக்கு
மக்களை ஒன்று படுத்த
திலகருக்கு
தூண்டுதல் அளித்து,
இந்து மதத்திற்கு ஒற்றுமை அளித்தவன்.
அதனால் தானோ
இன்று
விடுதலை
இந்தியாவில்
துண்டாடப்படுகிறனோ!!?
ஒற்றுமைக்கு
உறுதுணை அருள் புரிந்தவனுக்கு
தக்க சன்மானம்.
ஆராதனை செய்து
அவனை நடுக்கடலில் ,
ஆற்றில்
போடுவது.
வினாயாகா!!
கணநாயகா !!
நீ படும் சிதைவு ,
என்
நெஞ்சத்தை சிதைக்கிறது.
ஒற்றுமை என்பது,
மதம் வளர்வது,
பதட்டம் பயம் இன்றி
மகிழ்ச்சியால்
வருவது.
அந்நாளில்
விநாயகர் புகழ் பாடலாம்.
கரையும் விரயத்தை,
பக்தி கறுந்தகடில்நிரப்பி ,
நூல்கள் பல அச்சடித்து,
நிலையாக ஒற்றுமை
நிலை நாட்டலாம்.
மற்றவர் புண் படும் தடத்தில் செல்வேன்
என்று ஒரு பதட்டம்.
காவல்துறை பாவம்!!
கொலைகளைத் தடுக்குமா!
கொள்ளைகளைத் தடுக்குமா?
வழிப்பறி தடுக்குமா?
ஷாந்தி அளிக்கும் பக்தி.
அசாந்தி ஆவதை தடுக்குமா/?
அறிவியல் யுகம் .-ஆனால்
ஆண்டவன் பெயரால்
ஆதங்கம்.
அமைதிப்படுத்த பக்தி.
ஆத்திரமூட்ட அல்ல.
பலத்தைக்காட்ட ,
ஒற்றுமை ஏற்படுத்த,
அன்னதானம்,
புனித நூல் தானம்.
கோதானம்,
பூதானம்,
கடவுள் உருவச் சிதைப்பு அல்ல.