ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

aandavaa ketpaayaa

 நலம் 
 நகைப்பது   உடலுக்கு நலம்.
புகைப்பது ?
மது அருந்துவது,?
அரசாங்கத்திற்கும்,
அது தயாரிக்கும் தொழிலாளி,
முதலாளிக்கு நலம்.
வருமானம் 
தரும் தொழில்கள்.

உண்மை நம்பா  உலகில்,
பொய் மாயை விரும்பும்
நம்பும் உலகில்,
பால் தெரு-தெருவாக
விற்க அலைகிறான்
 பால் வியாபாரி.
மது வியாபாரி அமர்ந்த இடத்தில்,
ஆனந்தமாய் விற்கிறான்.
கபீர் கவிஞனின் ஈரடி இது.

தீயவைகள் அரசுத் தடைகள்
மீறி அரங்கில் நடனமாடுகின்றன.
கறுப்புப் பணம் கோடி -கோடியாய்
வெளி நாட்டு வங்கிகளில்,
தெரிந்தும் நடவடிக்கை எடுக்க,
நடுங்கும் மக்கள் பிரதிநிதிகள்.
எங்கும் எதிலும் கறுப்புப் பணம்,
நடை பாதைக்கடைகள்,
அதை பாதுகாக்கும் காவல்துறை,
அரசாங்கம்,அங்கு நடமாடும் கை ஓட்டுகள்,
அன்றாடக் காட்சிகள்.
மக்கள் நடக்க இடமில்லை.
வாகனங்கள் நிறுத்த இடமில்லை,
ஆம்\,அங்கு கடைகள் நடத்த அனுமதி உண்டு,
ஒரு சிறு மிதிவண்டி ஐந்து நிமிடம்
நிறுத்தினால்,அதிகாரத்துடன்,
நிறுத்தக்கூடாது,என காவலர்
munbe  கூறும் நடை பாதை வியாபாரிகள்,
அங்கு பொதுமக்களுக்கு நியாயமில்லை.
வங்கி முன் தரமணி இணைப்புசாலையில்
ஓரத்தில் நருத்தும் இருசக்கர வாகனத்திற்கு,
சாலை அகலமாக இருந்தும் காவலர்கள் பூட்டு.
அனால் குறிகிய சாலையில் ஹோட்டல் முன் நிறுத்தி
சாலையை மிகவும் ஒடுக்குமிடத்தில்
அனுமதி. வெளிப்படை அநியாயம்.நீதி உறங்குகிறது.
தொப்பை நிறைகிறது. ஆண்டவா!கேட்பாயா?
,