சனாதன தர்மம் "ஹிந்து ' என்ற வெளிநாட்டார் இட்ட பெயரால் வளர்கிறது .
இந்த ஹிந்து என்ற பெயர் சிந்து நதியின் மாற்றமே என்று அறியாமலேயே
சனாதன தரம் வாதிகள் தங்களை ஒரு ஹிந்து என்று சொல்லிக்கொள்வதில்
எத்தனை பெருமை கொள்கிறார்கள். இது தான் இந்துக்களின் பெருந்தன்மை.
இந்து என்றால் திருடன் என்று மாநில முதல்வர் கூறினாலும் பெரும் போராட்டங்கள் நடக்கவில்லை.
பகுத்தறிவுவாதிகள் தன எதிர்ப்பை இறைவனின் படங்களை செருப்பால் அடித்து ஊர்வலமாக சென்றதையும்,கடவுள் இல்லை இல்லவே இல்லை
என்று சிலைகள் வைத்தாலும், இன்று ஆலயங்கள் வளர்கின்றன.அந்த ஊர்வலத்தை ரசித்தவர்கள் ஹோமங்கள் ,பூஜைகள் ,ஆலய தரிசனங்கள்,பரிகாரங்கள் செய்வதையும் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
உலகில் மிகவும் கேவலப்படுத்தப்பட்ட,பரிகசிக்கப்பட்ட,தைரியமாக யாருக்கும் அஞ்சாமல் எள்ளி நகையாடும் மதம் ஹிந்து மதம்.
ஆனால் பக்தர்களாலும்,ஆட்சியாளர்களாலும் ,மஹரிஷிகளாலும் வளர்கின்ற மதம் ஹிந்து மதம்.
சற்று ஒரு இரண்டு நிமிடங்கள் ஓம் கணேசாய நமஹ/ஓம் முருகா /ஓம் நமசிவாய,/ஹரே ராம் /ஹரே கிருஷ்ண/சாய் ராம் என்று தங்களுக்கு பிடித்த
நாமத்தை ஜபம் செய்யுங்கள்.பத்துநாட்களில் நீங்கள் ஒரு ஆத்ம திருப்தி ,சந்தோசம்,மன ஷாந்தி அடைவீர்கள்.நீங்கள் எந்த ஆஷ்ராமங்களுக்கும் ,ஆலயங்களுக்கும்,பிராயச்சித்தம் என்ற பெயரில்
ஏமாற்றும் போலிகளையும் தேடிச்செல்லவேண்டாம் .
ஒரு இறை சக்தி ,ஈஸ்வரானுபூதி உணர்வீர்கள்.இதைதான் ஹீரா குகையில்
முஹம்மது நபிகள் செய்தார்.சனாதன தர்மம் ஏகாந்த ஜப-தபத்தால் வளர்ந்தது.
ஹிந்து மதம் ஒவ்வொருவரின் ஆத்மானுபாவத்தால் உன்னத நிலை அடைகிறது.
அதனால் தான் இங்கு கடவுள் பெயர்கள் அதாவது இறை நாமங்கள்.உருவங்கள் அதிகம்.
நமக்கு இன்னல் நேரும்போது ஒருவர் உதவினால் நாம் என்ன சொல்கிறோம் .
கடவுள் மாதிரி உதவி செய்தார் என்கிறோம் .சிலர் அந்த உதவி செய்தவரின் பெயரை கடவுளின் நாமமாக சபிக்கிறார்கள்.உதவி செய்தவர் பெயர் கணேசனாக இருக்கலாம் ,முருகனாக இருக்கலாம் துர்காவாக இருக்கலாம்.
அப்பொழுது அத்தனை உபாசகர்கள்,அத்தனை நாமங்களில் கடவுள்கள்.
தேவி உபாசகர்,முருகதாஸ்,கண்ணதாஸ்,தாசானுதாசர்கள் ஹனுமத் தாசர் ராமதாசர் .சிவ பக்தர்கள்.
நாட்டுக்கு நன்மை செய்தவரின் பெயரால் அண்ணா நாமம் வாழ்க என்கிறோம்.
அவ்வாறே வீட்டுக்கும் நாட்டிற்கும் தனிப்பட்ட மனிதர்களுக்கும்
மனநிறைவு,மகிழ்ச்சி ,முன்னேற்றம் தர இறைநாம ஜபம் கலியுகத்தில்
அவசியம் ,
பணம் சம்பாதிக்க நேரம் அதிகம் சிலவாகும் யுகம் கலி யுகம்.
மணிக்கணக்கில் உட்கார்ந்து ஜப்=தபமோ ,சந்தியா வந்தனமோ சொல்ல முடியாது
அதற்குத்தான் கலியுகத்தில் நாம ஜபம் முக்கியம் ,பிரதானம்
அரசியல் வாதிகள் தன தலைவரின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
கட்சி மாறும் சூழ்நிலையில் புதிய கட்சித் தலைவருக்கு
நாம ஜபம் செய்கின்றனர்
முதல்வரின் காலில் விழுகின்றனர்
அது லௌகீகம் .இவ்வுலக இன்பம் பின்னர் ஊழல் விசாரணை.மன அமைதி இல்லை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் முன் ஜாமீன் வழக்கறிஞர் பாதுகாப்பு.
நீதிமன்ற அலைக்கழிப்பு.
ஆனால் இறை நாம ஜெபத்தால் இறுதிவரை மன அமைதி.நாம ஜபம் செய்யுங்கள்.மன சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்.நேர்மையாக சத்தியத்தைக் கடைபிடியுங்கள் .தான -தர்மங்கள் செய்யுங்கள்.
45 நாட்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் நாம ஜபம் போதும் .அஹம் பிரம்மாஸ்மி
என்ற ஷங்கரரின் அத்வைத்துவம்.வைஷ்ணவர்களின் துவைத்துவம்,
உருவ அருவ இறை சக்தி உணர்வீர்கள்.
நாம