வாழும் நெறி
மனிதன் மனித நேயத்துடன் வாழவேண்டும்
.ஒரு நாடு,வீடு,ஊர்,தெரு அனைத்திலும் சுத்தம் அவசியம்.
சுற்றமும் நட்பும் அவசியம். சுத்தம் சோறுபோடும் என்று நாம் பகர்கிறோம்.
சுத்தம் அல்ல.சுற்றம்.சுத்தம் இல்லை என்றால் சோறு சாப்பிட முடியாது.
நோய் பரவும்.
ஆகையால் நமக்கு சுற்றமும் நட்பும் தேவை.சுத்தமும் தேவை
இரண்டும் இல்லை என்றால் மனிதன் வாழ முடியாது.
மனிதனுக்கு மட்டும் தான் தாயின் அரவணைப்புத் தேவைப்படுகிறது.
ஒரு பூச்சி கூட கூட்டுப்புழுவாக இருந்து முழு வளர்ச்சி
அடைந்து வெளிவந்ததும் பறக்கிறது
.மற்ற பிராணிகளும் குட்டி போட்டதும் நிற்கிறது.
மனிதக் குழந்தை நிற்க எட்டுமாதங்கள் ஆகிறது.
பின்னரும் மற்றவர்கள் ஆதரவு இன்றி நிம்மதியாக வளர முடியாது.
ஒட்டு-உறவு இன்றி உலகில் வாழ்வது எப்படி.?
ஆகையால் தான் நம் முன்னோர்கள்
உபதேசங்களுக்கு
முக்கியத்துவம் அளித்து
பழமொழிகள் கூறிச்சென்றனர்.
सत्यं वद .=உண்மை பேசு.------ஊரோடு ஒத்துவாழ்.
பேராசை பெரும் நஷ்டம்.
அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.
அறம் வெல்லும்.பாவம் தோற்கும்.
தர்மம் தலை காக்கும்.
அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்
.
தன் வினை தன்னைச்சுடும்.
மதியை விட விதி பெரிது.
தலை எழுத்து இறைவனால் எழுதப்பட்டது.அதை மாற்ற முடியாது.
மனம் இருந்தால் மார்கமுண்டு.
ஒருவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது.
பிறப்பும் இருப்பும் அறிவும் திறமையும் ஆண்டவன் அழிப்பது.
கலைகள் அனைத்தும் ஆண்டவன் வரப்ப்ரசாதம்.
எண்ணம்,சொல்,செயல் மூன்றும் தூய்மையாக இருந்தால்
எண்ணியது நிறைவேறும்.
இறைவன் கருணை இன்றி அணுவும் அசையாது.
.