புதன், ஜூலை 11, 2012

கல்விக்கூடங்கள் ஆசிரியர் நிலை --2




ஆசிரியர்கள்  நிலை பற்றி கூறிய பின் ,

ஆசிரியர்கள் செயல்பாடுகள் குறித்தும்

விளக்க வேண்டி உள்ளது.

ஆசிரியர்கள்  பாடம் நடத்தும்  போது

 பாடத் திட்டத்தில்  மட்டுமே  கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

இன்றைய மாணவர்களுக்கு பல விஷயங்கள்

தெரிந்துள்ளன.அவன் கவனம் முழுவதும் வகுப்பறையில் இருக்க வேண்டும்.

அவனுக்கு வீட்டிலும் பல பிரச்சனைகள்  உள்ளன.

சில மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றால் ,

அவன் பெற்றோர்கள் வரும் வரை வீட்டு  வாயிலிலேயே  காத்திருக்க

வேண்டிஉள்ளது.சில நேரங்களில்  பெற்றோர்கள் தாமதமாக

வருகின்றனர்.

மாணவர்களின்  தனிப்பட்ட இவ்வாறான பிரச்சனைகளையும் ஆசிரியர்கள்

கவனிக்கவேண்டும்.


 ஒரு முதலாம் வகுப்பு மாணவன் குறிப்பேட்டிற்கு அட்டை போடவில்லை

என்று  ஆசிரியை  மிகவும் கேவலப்படுத்தியதுடன் ,ஒரு அட்டையில் indicipline

boy  என்று எழுதி அன்று முழுவதும் அவன் நெற்றியில்  கட்டி வைத்து

அவமான  படுத்தி உள்ளார்.
அந்த 5-6 வயது குழந்தை மனம் எவ்வளவு புண் படும் என்று நினைக்கவில்லை.

சிலர் ஒரு மாணவன் செய்யும் தவறுக்கு  அந்த வகுப்பறையில் உள்ள

அனைத்து மாணவர்களுக்கும் தண்டனை அளிக்கின்றனர்.

ஆங்கில வழி  பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கும் அக்கறை தமிழ் வழி

பயிலும் மாணவர்களுக்கு அளிப்பதில்லை.காரணம் அதிகமான பெற்றோர்கள்

படிக்காதவர்கள்  மட்டும் அல்ல ;வறியவர்களும் கூட.

சமுதாயமும் அவர்களை மதிப்பதில்லை.எனக்குத் தெரிந்த தமிழ் வழியில்

எம்.காம்; படித்தவருக்கு வேலைக்கு  நேர்காணல் செல்லும்  பொழுது

அவமானம் தான் ஏற்பட்டது.

தாய்மொழியில்  பேசினாலே அவன் அவமானப்பட  வேண்டிய நிலை.

படத்தலைப்பு  தமிழில் வைத்தால் ,வரி விலக்கு .ஆனால்,பாடல்கள்

ஆங்கிலத்தில்  இருக்கலாம்.

இந்நிலை உள்ளவரை கல்வித்தரம் ,ஏற்றத் தாழ்வுகள்,

கட்டணங்கள் எப்படி  மாறும்.

விடுதலை அடைந்த பின்  நாட்டின் நிலை.ஆங்கிலமின்றி வேலை கிடையாது.

கல்விக்கூடங்கள் ஆசிரியர் நிலை --2
(தொடரும்)

ஆசிரியர்களும் தண்டனைகளும்-pakuthi-1

ஆசிரியர்களும்  தண்டனைகளும்.

     சமீபகாலமாக  ஆசிரியர்கள்  அளிக்கும் தண்டனைகள்  குறித்து சேதிகள்

வந்த வண்ணம்  உள்ளன.


ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு  நல்வழிகாட்டிகளாக  இருந்த காலம்  போய்

,அவர்கள் அரசாங்க ஊதியம் பெரும் தொழிலாளிகளாக  மாற்றிய  பெருமை

 ஆங்கில அரசாங்கத்தையே  சாரும்.அதற்குக்  காரணம்  நமது நாட்டின் 

குருகுலக்கல்வி  முறை.

பக்த பிரகலாதன் கல்வி  பயின்றபோது  குரு  அரசருக்கு பயந்து  கல்வி

போதித்தார். இன்று  ஆசிரியர்கள்  கல்வி அதிகாரிகள்,தனியார் பள்ளி

நிர்வாகிகள்,பள்ளி  முதல்வர்கள்,பயிலும்  மாணவர்கள்,பெரும் ஊதியங்கள்,

தனிவகுப்பு  கட்டண ங்களுக்கு வரும்  பெற்றோர்கள்,இளம் பிராயத்திலேயே

மன வளர்ச்சி ,அறிவுத்திறன் பெற்ற மாணவர்கள்  என அனைவருக்கும்

பயந்தே  கற்பிக்கவேண்டிய  சூழல்.

இவர்களைத்  தவிர  திரைப்படங்கள்,சின்னத்திரைகள்  அனைத்திலும்

ஆசிரியர்கள்  என்றாலே  கேலியும் கிண்டலும் தான்.

இதில் வியக்கத்தக்க  சிந்திக்கத்தக்கது  என்னவென்றால்

 எதிர்கால  நாட்டின் சிற்பிகளை  உருவாக்கும்  கல்வித்துறை,

நாட்டின் சட்ட ஒழுங்கை  நிர்வகிக்கும்  காவல்துறை,

நாட்டின் சட்டங்களை உருவாக்கும் அரசியல் அமைச்சர்கள்

 அனைவரையுமே  கேலியும் கிண்டலும் அவமானப்படுத்துவதும் தான்.

ஒருநாட்டின் முதல்வராக கலைஞராக  இருந்தவர் எடுத்த கதையாகிய

பாலைவன ரோஜாக்கள்  கதையின் முடிவு  நீதி நியாயங்கள்  குழி தோண்டி

புதைக்கப்படும்  என்பதுதான்.

 இந்த பரிதாப   கேலி கிண்டலுக்கு  ஆளான மூன்று துறைகளுமே

 அதாவது  அரசியல்,கல்வி ,காவல் மூன்றுமே இன்று  ஊழலின் 

சாம்ராஜ்யமாக  இருப்பதுதான்.
(தொடரும்)