நாடு நலம் பெற தேர்தல்.
மக்கள் நலம் பெற தேர்தல்
குடிசைகைள் பெருக்கி
கொசுக்கடியில் வாழவைத்து
கூவம் நாற்றத்தில் வாழவைத்து
மழை வெள்ளம் வந்தால்
முதலைக்கண்ணீர் வடித்து
ரேசன் கார்டழித்து
அடமானம் வைத்து
போதைஅளிக்கும் கடைகள்
தன் தொழிற்சாலை
லாபத்திற்கு வைத்து
கள்ளுக்கடை ஒப்பந்தத்தில்
கொள்ளை அடித்து
தலைவணக்கு பல கோடி
தலைவிக்கு பலகோடி
சொத்துக்கள்
ஆங்கிலப்பள்ளிகள் திறந்து
தமிழ் தமிழ் என்று ஏமாற்றி
தமிழ் வழி படிப்போரை இழிவி படுத்தி
ஆளும் ஆட்சி கழகங்கள் ஆட்சி
பள்ளிகளில் கழிப்பிடமில்லை
வளைவுக்கு பலகோடி
மெட்ரோ ரயிலுக்கு வழி சுற்றல்
எது செய்தாலும் இந்த இரண்டில்
ஒன்று தான் என்பதே தமிழகம் .
சிந்தித்து வாக்காளர்கள்
மாற்றம் ஆட்சிமாற்றம்
கொண்டு வர
ஆண்டவன் தான் நல்ல எண்ணங்கள்
தரவேண்டும்.
தரமில்லா தலைவர்கள்
ஒதுக்கிவைக்க ஓட்டுக்கள்
அளிக்கவேண்டும் .
இறைவனருள் வேண்டும்