புதன், நவம்பர் 07, 2012

ஒபாமா வெற்றியும் நம் நிலை.


ஒபாமா வெற்றியும் நம் நிலைyuம். 

அமெரிக்கத்தேர்தலில்  ஒபாமா வெற்றி. தேர்தல் முடிவு அறிவித்தபின்  ரோமனியின் பெருந்தன்மை. நான்  ப்ரெசிடென்ட் மற்றும் அமெரிக்காவின்  நலனிற்காக பிரார்த்தனை செய்வேன்.
 ஒபாமா அவர்களின் பெருந்தன்மை.ரொமனி என்னை எதிர்த்துப்போட்டி இட்டார் என்றால்,அவர் அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காக  போட்டி இட்டார். நான் அவருடன் பேசினேன், அவருடன் சந்திக்க ஏற்பாடு செய்வேன்.அவருடன் இணைந்து கலந்து அமெரிக்காவின் முன்னேற்றத்திற்குப்  பாடுபடுவேன். என்வெற்றிக்கு ரொம்னியின் போட்டியே  காரணம்.எத்தகைய  பெருந்தன்மை. .என்னே  நாட்டுப்பற்று. வாழ்க ஒபாமா.
நம் நாட்டில் நாட்டின் நலத்தை விட ஊழல் அதிகம்.
உண்மையாளர்கள் நம் நாட்டில்  ஓரம் கட்டப்படுகிறார்கள்.
நேர்மையான அதிகாரிகள் வேலையை விட்டு விடுகிறார்கள். அல்லது பணி   மாற்றம்,அல்லது இடமாற்றம்.
சிறு-சிறு கட்சித்தலைவர்களை ஊக்கப்படுத்தி,ஜாதி,மதம்,சம்பிரதாயம் ஒழிப்போம் என்று கூறி வளர்க்கிறார்கள்.
இறைவனின்  அழகான உருவங்களுக்கு பூஜை செய்து ப்ரானப்ரதிஷ்டை என்ற உயிரோட்டம் கொடுத்து பின்னர் அவைகளை அவமானப்படுத்தி,கடலில் எரிகிறார் கள் . காளி   சக்தியே உருவானவள்.விநாயகர் முழுமுதற்கடவுள்.இரண்டிற்கும் அவமரியாதை. இது எந்த வேதத்தில்  ,எந்த உபநிஷத்தில் உள்ளது. கடவுளின் அவமானம்  ஹிந்து தர்மத்தினரின்  உச்ச கட்ட  மூட நம்பிக்கை. ஒருக்காலும் இந்த ஈனச்செயலை  கடவுள் மன்னிக்க மாட்டார்.புத்தர் சிலை உடைத்தவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு.கோடிக்கணக்கில் பணம் வீண்.பயம்.பதட்டம்.ஆக்கப் பணி புரியும் காவல் துறை.சாமி சிலைக்கு பாதுகாப்பு. இதைவிட கேவலம் எதுவும் இல்லை. சிந்தித்து செயல் படுங்கள். துன்பங்கள் தீரும்.வெறி யைத்தூண்டும்  வெறியர்களுக்குத் துணைபோகாதீர்.
ஞானத்துடன்  யோசியுங்கள். ஹிந்து மதத்தினர் தான் அதிக அளவில் மதமாற்றம். காரணம் கண்டு பிடியுங்கள். சாமி சிலைகளை அவமானப்படுத்துதல் 
ஒரு கேலிக்கூத்து .சாமிசிலைகளை  செருப்பால் அடித்தவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு. அலைகடலில் கால் தலை முண்டம் என்ன கேவலமான பக்தி.