வியாழன், டிசம்பர் 22, 2011

God and wealth

செல்வர்கள் ஆணவம்  கொண்டவர்கள். தங்களின் செல்வம் தங்களுக்கு அதிகாரமும் அழிவற்ற வாழ்வும்  தர முடியும் என்று நினைக்கிறார்கள்.செல்வங்களை குவிக்கும் ஆசையில் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.செல்வத்தை  எண்ணிப்பார்கின்றவர்கள் அது நிலையான பாதுகாப்பைத் தரும் என்ற தவறான கருத்து கொண்டுள்ளனர்.குர்ஆனில் இந்த தவறான எண்ணம் கொண்டவர்களை கடுமையாக எச்சரிக்கைக்கான  வசனம் அத்தியாயம் 104 இல் கூறப்பட்டுள்ளது.

மக்களை நேருக்கு நேர் இழித்துரைத்துக்கொண்டும் , பின்னால் நின்று   குறை கூறிக்கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.அவன் பொருளைச் சேர்க்கிறான்.மேலும் அதை எண்ணி எண்ணி வைக்கிறான்.அவன் தன்னுடைய  செல்வம் தன்னை என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று  கருதுகிறான்.அவ்வாறன கருத்துத் தவறானது.சிதைத்து சின்னா பின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா?
அது ஆண்டவனின்  நெருப்பு.
அது  உக்கிரமாக  மூட்டப்பட்டுள்ளது .இதயங்கள் வரை சென்று  பரவுகிறது. பாய்கிறது.
இது சொத்துக்குவிப்புக்கு எதிரான ஒரு வலுவான கண்டனமாகும்.

swaamy vivekaanandarum kadavulum panappeykalum

விவேகானந்தர் ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர்.அவர் கூறுகிறார்:-

உலகத்தில் நீங்கள் கடவுளுக்கும்
பணப்பேயுக்கும்
ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது.
எல்லாவற்றையும் -உன் சொந்த விமோசனத்தையும் கூட --
உதறி எறிந்துவிட்டு   பிறருக்கு உதவி செய்
.நாடு மூழ்கிக் கொண்டிருக்கிறது.
லட்சோப லக்ஷம் மக்களின் சாபம் நம் தலை மீது அழுத்திக்கொண்டிருக்கிறது.
அம்மக்கள் தாகத்தால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வற்றாத ஆற்று நீர் பாய்ந்து கொண்டிருப்பினும்
ஏழைகள் கழிவுநீரைக் குடிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லா வளங்களும் கண்முன் நிறைந்திருக்கும் போதும்
 நாம் அவர்களைப்பட்டினியால் சாகவிட்டோம்.
அவர்களை நாம் அத்வைதத் தத்துவத்தை சொல்லிக்கொண்டே
 நம் முழு பலத்தோடு அவர்களை வெறுத்து வந்துள்ளோம் .
இந்த களங்கத்தை துடைத்தெரியுங்கள்.
எழுமின்,விழுமின்.


விவேகானந்தரின்  இந்த கூற்றுநேரில் காண
மடிப்பாக்கம் குபேர் நகரில் மசூதி பக்கத்தெருவில் செல்லுங்கள்.
சாக்கடைஓட  குழந்தைகள் விளையாடி நோய்வாய் படுகின்றனர். நடுத்தர மக்கள்  வாழும்  சாலைகள் மோசமாக உள்ளது.குண்டும் குழியுமாக உள்ளது. மனசாட்சி  உள்ள அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கவில்லை.
இறைவா! அனைத்து உலகமும் நீ உள்ளாய் என்பதை ஏற்கிறது. உன்பெயரால் ஆட்சி பீடம் ஏற்றவர்கள் மனத்தில் கருணை உண்டாக்கு. அரசு நினைத்தால் உடன் செய்யலாம். அதற்கு நீ அவர்கள் மனத்தில் மனிதாபிமானத்தை உண்டாக்கு.

நான் உன்னை  ஜெபிக்கிறேன். அல்லாவின் பேரால்,ஏசுவின் பேரால்,சிவா விஷ்ணு, முருகன் விநாயக கருணைக்காட்டி அரசு இயந்திரத்தை இயங்கும்படி செய்.

english/tamil/hindi sentenses.

you help them.=nee avarkalukku udhavi sei./neengal avarkalukku udhavi seyyungal=(tamil)=நீ அவர்களுக்கு உதவி செய்./நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
tum unki madad karo ./aap unki madad keejiye.(hindhi)'
तुम उनकी मदद करो./आप उनकी मदद कीजिये.

you try to speak in tamil.=nee tamilil pesa muyarchi sei./neengal tamilil pesa muyarchi seyyungal.=நீ தமிழில் பேச முயற்சி செய்,/நீங்கள் தமிழில் பேச முயற்சி செய்யுங்கள்.
tum tamil mein bolne kee koshish karo./aap tamilmein bolne kee koshish keejiye.
तुम तमिल में बोलने की कोशिश करो.//आप तमिल में बोलने की कोशिश कीजिये.

you pray daily.=nee thinandorum iraivanai valipadu./neengal thinanthorum iraivanai valipadungal.
நீ தினந்தோறும் இறைவனை வழிபாடு./நீங்கள் தினந்தோறும் இறைவனை வழிபடுங்கள்.
tum roz bhagavaan kee prarthna karo.//aap roz bhagavaan kee prarthna keejiye.
तुम रोज़  भगवान की प्रार्थना करो./ आप भगवान की प्रार्थना कीजिये.

bathe daily.=thinanthorum kuli./neegal thinanthorum kuliyungal.=நீ தினந்தோறும் குளி.
நீங்கள் தினந்தோறும் குளியுங்கள்.
tum roz snaan karo./aap roz snaan keejiye.=तुम रोज़ स्नान करो./आप रोज़ स्नान कीजिये.

you go for a tour.=nee sutrula sel./neengal sutrula sellungal.நீ சுற்றுலா செல்./நீங்கள் சுற்றுலா செல்லுங்கள்.
 tum sair karo./aap sai keejiye.तुम सैर करो/आप सैर कीजिये.