மனிதன் ஒழுக்க நெறியில் செல்ல பயம் என்பது மிக அவசியமாகிறது.அவனுக்கு இயற்கை பல விதத்திலும் அச்சத்தை அளிக்கிறது.
மரணம் என்பது நிச்சச்சயிக்கப்பட்ட பயம்.அதை இதுவரை எந்த கோடீஸ்வரனும் அறிவியல் மேதையும் வென்றதில்லை. சுவர்க்கம் நரகம் என்பது ,சாத்தான் என்பது அனைத்து மதங்களிலும் கூறப்பட்டுள்ளது.கருட புராணம் இதை நன்கு விளக்குகிறது.
அனைத்து மதங்களும் மனிதர்களுக்குக் காட்டும் ஆசை சுவர்க்கம்.அச்சம் நரகம்.
அராஜகத்தால் சேர்க்கும் பணத்தால் வாரிசுகளுக்கு நமதியில்லை என்பதை விளக்கவே "மாத பித்த செய்யும் பாவம் மக்களுக்கு என்பது.இவை நடப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.வரலாற்றின் பல நிகழ்ச்சிகள் இந்த கூற்றை நிரூபிக்கின்றன.இருப்பினும் பணத்தாசை மனிதனை பாவம் புரிய,கடமை தவற.
தேச துரோகம் செய்ய வைக்கிறது.அதனால் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்பதை மறுத்து.மறந்து ,பாவம் செய்யவில்லை என்றாலும் பாவங்களைக்கண்டும் காணாததுபோல் வாழ்கிறோம்.அவ்வாறு பாவங்களைக்கண்டும் அச்சத்தின் காரணமாக,நட்பின் காரணமாக,உறவின் காரணமாக மௌனம் சாதிக்கிறோம்.இதை எல்லாம் நமது உலகின் அனைத்து மதங்களும் ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றன.
.கருட புராணம்.
கருடன் இறைவனிடம் பாவிகளின் முடிவும் யம மார்கத்தின் துன்பங்களையும் விளக்கும் படி கூற இறைவன் விளக்குவதே முதல் அத்தியாயம்.
ये हि पप्रतास्ताक्षर्य दयाधर्मविवर्जितः I दुष्टसन्गाश्च सच्चास्त्रसत्सङ्ग्तिपरान्मुखाः .
என்று ஆரம்பிக்கும் சுலோகத்தின் பொருள்:
மனிதர்களில் சிலர் எப்பொழுதும் பாவங்களையே செய்கின்றனர்.இரக்கப்படாமல் வாழ்கின்றனர்.அறவழியில் செல்லாமல் கேடுமதிவுள்ளவர் பின் செல்கின்றனர்.நல்ல நீதி நூல்களைப் படிப்பதில்லை.நல்லவர்களுடன் சேர்வதில்லை.தன் அகங்காரத்தால் தன்னையே கௌரவமுள்ள மனிதனாக கருதுகின்றனர்.மோக அலையில் சிக்கி அவர்கள் மனதில் பலவித ஆசைகள் ,செல்வம் சேர்ப்பதே குறிக்கோள்.எப்பொழுதும் மோக போகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இங்கும் நிம்மதியின்றி நரகத்தில் சென்று துன்பங்களை நரக வேதனை அடைகின்றனர்.
மரணம் நெருங்கும் போது யமதூதர்கள் அவர்கள் முன் பயங்கர தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.அப்பொழுது அச்சத்தின் காரணமாக மலமூத்திரம் வெளிப்பட்டு மனம் அடைகின்றனர்.அனைவரும் மரணம் அடைந்தாலும் பாவிகளின் மரணம் வேதனை நிறைந்ததாகவும் மற்றவர்களின் சாபங்களும் அடைவதாக இருக்கும்.