இறைவன்.
ஆறறிவு படைத்த மனிதன்,
அகந்தையுடன் வாழ்வதால் ,
புற மகிழ்ச்சியில்
மதி மயங்கி,
நிறைவின்றி,
அக மகிழ்ச்சி இன்றி ,
உள்ளத்தில் நிறைவின்றி,
உண்மையின்றி ,
நேர்மை இன்றி,
ஆறடி நிலம் அல்லது ஒரு பிடி
சாம்பலில் அழியும்
விந்தையை படைத்தவன்
இறைவன்.