ஞாயிறு, ஜூலை 15, 2012

எல்லாமே நன்மைக்கே.யாருக்கு?


எல்லாமே நன்மை  யாருக்கு ?

மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள்,பொது சொத்தை அளிக்காமலிருத்தல்,

சட்ட விதிகளை மீறாதிருத்தல்,

 கல்விக்கூடங்களை  மதித்தல் ,

ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தல்,

ஆட்சி செய்பவர்களை மதித்தல்,

காவல் துறையைப் போற்றுதல் ,

பொது இடங்களை அசுத்தா மாக்காமல்  இருத்தல்,

வாக்களித்தலில் பெறுவதில் நேர்மை காட்டுதல்,

இவை  நமது  நாட்டில்  இல்லை  என்று கூறமுடியாது.

காரணம்  தர்ம தேவதையின்  தண்டனைகள் அதிகம்.

அதே நேரத்தில்  அவைகளை

 உணரா ,உணர்ந்தும் கடைப்பிடிக்க முடியாமல் தவிப்போர் பட்டியல் அதிகம்
.
அந்த பட்டியல்   கலியுக  தர்மம்   என்ற  மூட நம்பிக்கையில்

  நீண்டு கொண்டே செல்கிறது.

அதர்ம  வழியில் செல்வதே தர்ம  வழியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அரசாங்கம்  ஒரு விண்ணப்பம் பெற்று அதற்கு அனுமதி பெற மக்களை

அலைய வைக்கிறது.அதனால் மக்கள் நேரடியாக தங்கள் அலுவல்களை

விட்டுவிட்டு அலைவதால் நேரம்,பணம்  அனைத்தும் விரைய மாகிறது.

வேலை முடிவதில்லை.

அதற்கென  சில முகவர்களை அணுகினால் உடன்  பணி முடிந்து  விடுகிறது.

ஆட்டோவிற்கு  கொடுக்கும் பணம் முகவருக்கு.

இதில் பணம் இல்லாமல் நேர்மையாளர்களுக்கும் நியாயம்

கிடைக்கிறது.
அவனின் ஆயுள் காலம் முடியும் பொழுது அல்லது  ஆயுள் முடிந்த பின்.

இது அவன்  "அவன் தலை எழுத்து" என்ற மூட நம்பிக்கையால்

 மறைக்கப்படுகிறது.

நிர்வாகம் சரியில்லை என்று யாரும் கூறுவதில்லை.

சட்டம் ஓர் இருட்டறை என்ற அறிஞர்  அண்ணாவின் கூற்று மெய்யாகிறது.

அனால் அவர்  நாமம் கூறி மக்களுக்கு நாமம் போடும்  ஆட்சி

தொடர்கிறது.
ஏழைகள் எப்பொழுதும் போல் வெயிலில் நியாயவிலைக்கடைகளின்

 முன் நிற்பது  ஏழைகளின் தலை எழுத்து.

அந்த  நியாயவிலைக்கடைகள் பரிதாமமான இடத்தில்.

ரசீது போடுபவருக்கு வசதியாக அமர இடம் இருக்காது.

மூட்டைகள் இடிக்கும்.பக்கத்தில் திராசு.

.அங்கு நிறுத்துப்போடும் ஊழியர்  நிமிர்ந்து நிற்க இடம் இருக்காது.

அங்கு ஒரு சிறிய  ரவுடிகளின் சாம்ராஜ்யம்.

இது அனைவருக்கும் தெரிந்த ராஜ்ஜியம்.

அங்கு கூட்டம் சேரும் வரை பில்  போடமாட்டார்கள்.

கூட்டம் சேர்ந்த பின் தான் நிறுத்துப்போடுவார்கள்.

அது அவர்களுக்கு வசதி. பொதுமக்களுக்கு அவதி.

எல்லாம்  பொதுமக்கள்  தலைவிதி.

 இந்த நம்பிக்கை உள்ளவரை

அநீதி இழைப்போருக்கு நல்லதுதான்.

எல்லாமே நன்மைக்கே.யாருக்கு?