மனிதனும் மதமும்
மதம் பிடித்த யானையும்
மதப்பற்றுள்ள மனிதனும்
மனித நேயம் மறுப்பவர்கள்.
மதங்கள் தோன்றியதே
அன்பை வளர்க்க.
சத்தியத்தை காக்க.
அஹிம்சை வளர்க்க.
நேர்மை செழிக்க.
அறம் வளர,
தானங்கள் வளர.
பற்றற்ற வாழ்க்கை வாழ.
**************************
ஆண்டவன் பெயரால்
ஆஸ்திகள் சேர்க்க அல்ல.
தன் தெய்வம் தான்
தன் மதம் தான் உயர்ந்தது
என்று மனிதர்களுக்குள்
சண்டை போட வைத்து
மதத்தலைவர்கள்
மமதையுடன்
மன்மத லீலையில்
மகிழ்ந்திருக்க,
வீடியோக்கள்
அனைத்து ஆஸ்ரமங்களிலும்
வைத்தால் தெரியும் என்று
எதிர்கால ஆதீனம் பேட்டி கூற,
அரசியலின் சுயநலத்திற்கும்
ஆஸ்திக சுயநலத்திற்கும்
அதிகாரிகள் சுயநலத்திற்கும்
அகலா ஒற்றுமை.
மதங்கள் ஊழல் செய்தால் புது மதம்
உதயமாகிறது.
அரசியல் ஊழலால்
புதிய கட்சிகள்
உதயமாகிறது.
உதயசூரியன்
சுட்டேரிக்கும்போது
இரட்டை இலை.
முடிவு
ஊழல்கள் மலியும் போதும்
கேடுகள் அதிகரிக்கும்போதும்
சங்கரர்,இயேசு ,முஹம்மது நபி,ஜைனர்புத்தர்
போன்ற இறை தூதர்கள்
தோன்றுகின்றனர்.
அவர்கள் மறைந்த பின்
மதங்கள் துண்டாடப்படுகின்றன.
அரசியல் தலைவர்கள் இறந்த பின்,
கட்சிகள் துண்டாடப்படுகின்றன.
சயனவாதிகள் கைகளில்
கோடிகள் புரள் கின்றன.
அப்பாவி ஜனங்கள் அவர்கள்
மயக்கும்மொழிகளில்
மயங்கி
போதையில் தன் வயம் இழக்கின் றனர்.
போதை ஏற்றுபவர்கள்
ஆனந்தப் படுகின்றனர்.
அடிமையானவர்கள் அல்லலுறுகின்றனர்.
அமானுஷ்ய சக்தி தான்
மக்களை காக்க வேண்டும்.