வியாழன், டிசம்பர் 15, 2011

todays education .

நாட்டில்  தமிழ் நாட்டில் சமச் சீர் கல்வி என்று ஆரம்பித்து வெற்றி என்று கூறினாலும் அனைத்து மாநில தனியார் பள்ளிகள் சி.பீ.எஸ். ஈ பள்ளிகள் துவக்கவும் பெற்றோர்களும் அவ்வகையான கல்விக்கூடங்களை விரும்புவதும்
அங்கு கல்விக்கட்டணம்  பற்றி பொதுமக்கள் எதுவும் குறை கூறாமல் இருப்பதும்,மெட்ரிக் குலேசன் பள்ளிக்கட்டணம் பற்றி மட்டும் எதிர்ப்பதும்
அடிப்பதுபோல் அடிக்கிறேன் அழுவது போல் அழு என்று அரசு அரசுப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதும் மூடுவதும்
ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவதும் அரசுக்கு கல்வித்துறை சிலவுகள் குறைவதும் தமிழாசிரியர்கள் வேலைப்பளு அதிகரிப்பதும் மம்மி   டாடி கலாசாரம் வளர்வதும் உண்மை நிலை.அரசு நினைத்தாலும் பொதுமக்கள் தனியார் பள்ளிகளையே விரும்புகின்றனர்.
ஒரே குழந்தை பெற்று வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வித்தரத்தையே  விரும்புவர்.அரசு கட்டணம் என்பது கட்டுபடியாகுமா/?
மனம் என்று ஒன்று இருந்து சாட்சியாக இருப்பவர்கள் கட்டண நிர்ணயம் நியாய மில்லை என்று அறிந்தவர்கள்.
ஒரு இட்லி ஒரு ரூபாயிக்கும் விற்கிறது.இருபது ரூபாயிக்கும் விற்கிறது.
காரணம் வசதிகள்.அவ்வாறு தான் பள்ளிகளும்.கட்டடம்,மைதானம்,குளிர்சாதனம்,ஆயாக்கள்,ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை  சிந்திப்பீர்.
சமச்சீர் கல்வி கொண்டுவந்தவர்கள் நடத்தும் பள்ளிகள் மத்திய அரசுப்பள்ளிகள்.கல்வி மாநில அரசு உரிமை.
மக்கள் அச்சத்தால் அமைதி காக்கின்றனர்.உண்மை நிலை உணருங்கள்.
கல்வி பெறுவது மக்களுக்கு சுதந்திரமாக இருக்கவேண்டும்.

jealous poraamai ramachandra shukla.

மனித மனம் நிம்மதியின்மைக்கும் அந்த நிம்மதியின்மையை வெளியிட முடியாததிற்கும்  அவன் மனதில் எழும் உணர்வுகள் தான்.அதில் அவன் அன்பு,காதல்,கோபம் கருணை   ,பக்தி, வெட்கம்,தயக்கம்,வெறுப்பு,சிரிப்பு,முதலிய அனைத்தும் வெளிவரும்.அவனால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அவன் வெளிப்படுத்தாத தான் மட்டும் நிம்மதி  இழந்து தனிமையில்  உணரும்  உணர்வுதான் பொறாமை.
பொறாமை பற்றி ஹிந்தி கட்டுரை ஆசிரியர் ஆசார்ய ராமச்சந்திர சுக்ல என்பவர் 
பொறாமை பற்றி  கூறுகிறார் :---
மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு மனிதர் மனதில் துன்பம் ஏற்படுவதுபோல்,
மற்றவர்கள் சுகத்தைக்கண்டு ஒருவர் மனதில் ஏற்படும் துன்பமே பொறாமை.

பொறாமை மனதில் ஏற்படும் போது மூன்று வித துன்பங்கள் வெளிப்பட முடியும்.
  1. அந்தப்பொருள் நம்மிடம் இருந்தால்,
  2. அப்பொருள் அவனிடம் இல்லாமல் நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்கும்.
அப்பொருள் அவனிடம் இல்லாமல் போனால்,தொலைந்து விட்டால் நல்லது.

கோபப்படும் மனிதனிடம் மனிதன் கோபப்படலாம். ஆனால் பொறாமைப்படும் மனிதன் மேல் பொறாமைப்பட முடியாது.

punch dialogue aluththum uruththum vaakkiyangal

ஆலயம் தொழுவது சாலவும் நன்று  என்ற ஆன்றோர் வாக்கு,
ஆனந்தமளிக்கும்,
ஆத்ம சுகமளிக்கும் ,
 உள்ளத்தில் அமைதி பிறக்கும்.
அனுபவ பூர்வ எனது அநூபூதி  இது.
அகவை கூட கூட
 இந்த உணர்வு மேம்பட்டாலும்,
ஆலயங்களில் கூட்டங்கள் அதிகரித்தாலும்,
தவறுகள் அங்கங்கு தெரிய அறிய வந்தாலும்,
ஆன்றோர் வாக்கு பொய்ப்பதில்லை.
ஆலயமில்லா ஊரில் ,குடியிருக்க வேண்டாம்
என்ற ஆன்றோர்  வாக்கு, சத்ய வாக்கு,
அறிவுள்ள நரன்,நரிபோன்று இருப்பதால்,
அறத்திற்கு எதிரான ஆணவத்தால் அழிவதால்,
ஆலயங்கள் பெறுகிவருகின்றன சாலை தோரும்,
நடைபாதை ஆலயங்கள்,அங்குள்ள முடக்கக் கண்ணி,
திருவீதி அம்மன் ,காளிஅம்மன், மாரியம்மன்,
பயங்கர உருவமுள்ள பிரத்தியங்கரா தேவி,
நரசிம்ஹன்,கருப்பணசாமி,முனிசாமி,மாடசாமி,
சப்தகன்னிகள்,பயங்கர சூலாயுதங்கள்,வேலாயுதங்கள்,
அப்படி இருந்தும் ஊழல்கள்,அநீதிகள்,
அதனால்தான் ஆண்டவன் துதி,நாட்டைக்காப்பற்ற,
கலியுகத்தில் கண்முன் இறைவன் தண்டனைகள்.
அரசன் அன்று என்பதற்குப் பொருள்,
அரசன் அல்ல அநீதிக்குத்  தண்டனை தருபவன்,
ஆண்டவனே!ஆண்டவனே!ஆண்டவனே!
அதனால் தான் அரசன் அன்று!!(அல்ல)
 கொல்வான் ஆண்டவன் நின்று
நினைத்தவுடன்,திருந்த  வாய்ப்பளித்து,
அதனால்தான் அவன்
 அருள் பெற்றவனால்
அனைவரும் விரும்பும்
 பஞ்ச் டயலாக்  ----
ஆண்டவன்  நல்லவங்களை  சோதிப்பான்,
கைவிட மாட்டன்,
கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான்
கைவிட்டு விடுவான்.
சிந்திப்பீர்!! செயல் படுவீர்.!!