நீ தர்மத்தின் சார்பு என்றால்',
அதர்மத்தை ஏன் படைத்தாய்?
வாய்மையே கடவுள் என்றால்
,பொய்யை ஏன் படைத்தாய்?
பூவை படைத்த நீ
முள்ளையும் ஏன் படைத்தாய்?
உன் திருவிளையாடல்
புரியா மக்கள்,
பாவத்தை செய்து
பரிகாரம் தேடுகிறார்கள்.
அதன் தண்டனை
அனுபவித்தும் ,
தெரிந்தும்
அறிந்தும்
வாழ்கிறார்கள்.
அதற்குத்தான்
தண்டனையா?
அம்ருதம்,
ஆலகால விடம்,
அது புரிந்தும்
மனிதன் செய்யும் தவறுகள்.
விடமருந்தா
மனிதன்
பாவம் செய்வது ஏன்.?
அதற்கே கடவுள்,
வேடிக்கை பார்த்து
தண்டனை.
இயற்கையின் சீற்றம்,
குண்டு வெடிப்புகள்,
நோய்கள்,
விபத்துகள்.
அகால மரணங்கள்.
மனிதன் அறியாமல்
செய்த தவறுகளுக்கும்,
தண்டனை.
அது புரியா
மனிதர்களுக்கு
வேதனை.
எல்லாம்
இறைவன் செயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக