1968ஆம் ஆண்டு பள்ளி திறந்ததும்,அம்மா இலவச ஹிந்தி வகுப்புகள் நடத்தினார். நானும் நடத்த ஆரம்பித்தேன்.அதற்கு சபா மூலம் மாதம் 120 ரூபாய் மத்திய அரசு மானியமாக வழங்கினர். அதுவும் ஓராண்டிற்கு ஒரு முறை வரும்.நாற்பது மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும்.நுழைவுக்கட்டணம் ரூபாய் ஒன்று என்ற விகிதத்தில் வசூலித்துத் தரவேண்டும்.சபாவுக்கு வருமானாம். ஹிந்தி போராட்டத்தால் சபாவின் மாணவர்கள் குறைந்த நேரத்தில் நாங்கள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.அப்பொழுது சபாவில் பணியாற்றிய செயலர், அமைப்பாளர்கள் பிரசாரகர்களை சந்தித்து உற்சாகப் படுத்தினர். செயலாளர் தி.பி.வீரராகவன் ஜீ ,அமைப்பாளர்கள் ஈ.தங்கப்பன் ஜீ ,சுமதீந்திரா ஜீ ,எம்.சுப்ரமணியன் ஜி, வி.எஸ்.ராதாக்ருஷ்ணன் ஜி, போன்றோர் சபாவை காப்பதற்குப் போராடினர். எங்கள் வீட்டிற்கும் கல்லூரி மாணவர்கள் ஹிந்தி வித்தியாலயத்தை மூடவேண்டும் என்று ஊர்வலமாக வந்தனர்.நான் மூடிவிடுகிறேன், இங்கு விரும்பி வருபவர்களுக்கே கற்பிக்கிறேன். எனக்கு மாத வருவாய் வேண்டும் என்றேன். மாணவர்கள் சென்று விட்டனர். அன்று மாலையே சில கல்லூரி மாணவர்கள் ஹிந்தி பயில வந்தனர்.
அன்றைய சபா செயலர்கள்,அமைப்பாளர்கள் அனைவரும் எங்கள் சேவையைப் பாராட்டினார். ஆனால் அங்கும் தேர்தல். ஜாதி,போராட்டம். ஜே,எஸ்,ராமதாஸ் செயலராக வந்ததும் என் தாயாரின் முழு நேர வித்யாலயம் பகுதி நேரமாக மாற்றப்பட்டது. நேர்மையான பிரசாரகர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.சென்ற ஆடு வயதான ப்ரசாகர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தினர். அதற்கு என் அம்மாவிடமே ரூபாய் 600/-கட்டணம் வாங்கி உள்ளனர். அம்மா வயதானதால் , ஆடோவில் தான் செல்லவேண்டும் .இரண்டாயிரம் செலவு. அங்கு பாராட்டி எதுவும் பேசவில்லை. பிரசாரகர்கள் ஊக்குவிக்கப் படவில்லை. ஆனால் ,ஹிந்தி பிரசாரம் மட்டும் நடந்துவருகிறது. பலர் சபாவை எதிர்பார்ர்க்காமல் ஹிந்தி பிரசாரம் செய்கின்றனர்.ஏனென்றால் பொதுமக்கள் விரும்பி படிக்கின்றனர். நிரந்தரமான பிரசாரகர்கள் இன்றியே ,மாநில அரசின் உதவியும் இன்றி லக்ஷக்கணக்கில் மாணவர்கள் ஹிந்தி படிப்பது மகாத்மா காந்தி அடிகளின் தீர்க்க தரிசனம் தான். அவர் சென்னையில் 1918இல் சபாவை ஆரம்பித்தார்.
தொடரும்.