வெள்ளி, நவம்பர் 11, 2011

Thevai oru puratchi - 2

சாபக்கேடு
தேவை ஒரு புரட்சி.
இன்றைய யு கத்தில
மேலை நாடுகள்'
பாரத கலாச்சாரம்
விரும்பி போற்றி,
வரவேற்பு பெற்றுள்ளது.
யோகா என்பதன்
தத்துவம் அறிந்து,
பொருள் ஈட்டும்
கலையாக,
அமெரிக்க மண்ணில்,
நான் கண்ட காட்சி
ஆனால்,
வெளி இடத்தில்
முத்தங்கள் ,
மேல் நாட்டு ஒதுக்கும்,
கலாசாரம்,
இன்றைய
இளைய தலை முறையினர்
நம் முன்னோர்கள்
தட்பவெட்ப நிலை
கருதி காமத்தை 
புனிதமாக,
மறைமுக வெளிப்படையாக
தப்பாமல் கூறினர் .
ஆன்மீகக் காதல்,
பக்தியுடன் காதல்,
ஆண்டவனுடன்
சேரும்
ஆன்மீகக் காதல்,
நம் முன்னோர் வகுத்தது.
இன்று,
காதல்
வெறியாக
மரியாதை இன்றி,
பெற்றோர்,உற்றோர்
உறவுகளைத்
தகர்த் தெரிந்து,
தறி கேட்டு  முறை
கேட்டு,
இளைஞர்  சமுதாயத்தை,
இனிய இல்லறத்திலிருந்து,
இனிய இல்லத்திலிருந்து,
இதயக்குமுறலை,
வெளிப்படுத்தும் காதல்.

மன அழுத்தம்
ஏற்படும் இளைஞர்
விவாகரத்து கோரும்,
இளம் பெண்கள்,
என
இவர்களை,
சமாதானப்படுத்தும்
மன இயல்
வல்லுனர்களுக்கே
ஒரு சவால்.
இளைஞர்
மனம் திடமாகட்டும்.
தற்கொலை,கொலை
என்ற கோழை
மனம் மாறி,
வாழும் தகமையை,
அறியட்டும்.

நாட்டை வளப்படுத்த
பிறந்தவர்கள்,
வீரமாக,
தீரமாக,
வாழட்டும்.
காதல் தோல்வியை,
காமத் தோல்வியை,
கலக்கமாகக் கொள்ளாமல்,
களங்கம்  எனக் கருதி,
காளையை
மறந்து,
காரிகையை
மறந்து,
கடவுளின்
பக்கம்
திருப்ப முயலட்டும்.
அறிவியலில் ஆன்மிகம்
கலக்கட்டும்.
யுவதிகளும்
யுவர்களும்,
ஒரு புதிய ,
யுகத்தை படைக்கட்டும்.

thevai oru puratchi - 1

தேவை ஒரு புரட்சி

ஆகஸ்ட்  பதினைந்து,1947,
ஆகஸ்ட் பதினைந்து,2012.
அறுபத்தாறு ஆண்டுகள்.
இந்திய நாட்டில் ,
ஈடில்லா முன்னேற்றம்.
தொழில் நுட்பப் பூங்காக்கள்,
விண்வெளிப்பயணம்
அணு ஆயுத சோதனைகள்,
அனைத்துத் துறையிலும்,
அன்னியர் புகழும்
அதிசய முன்னேற்றம்.
ஆனால்,
பாரதியார் பாடிய,
பாப்பா பாட்டு,,
ஜாதிகள் இல்லையடி
எங்கே சென்றது?
இறைவன் பெயரால்,
இனக்கலவரம்.
மதக்கலவரம் .
தீவீர வாதிகளின்
குண்டு வெடிப்புகள்.
ஈவு இரக்கமற்ற
அரக்கச் செயல்கள் .
ஜாதி அரசியல்,
ஜாதி சங்கங்கள்,
சமவாய்ப்புகள்,
சம்பந்த மில்லா,
அமைப்புகள்.
பொருளாதார,
ஏற்ற தாழ்வுகள்.
படித்தவர்கள்
பட்டதாரிகள்.
மகிழ்ச்சியற்ற,
போக்குகள்.
காதல்!காதல்!
காதல் போயின்
சாதல் /?சாதல்?
ஆண்கள் மட்டு மின்றி
பெண்களும் மனதில்,
ஒரு சூனியத்தை
சுமக்கும்,
சுதந்திர போக்கு.
குடிமகன்
போதைக்கு அடிமை.
பேதைக்கு அடிமை,
இதுவே மடமை.
தன து  உயிர்
போக்கும் ,தரம்  இல்லா 

போக்கு.
சுதந்திரத்திற்கே /
ஒரு களங்கம்.
கலப்புமணம் ,
பெருகட்டும்.
காதல் மணம்
பெருகட்டும்.
ஜாதீய சீர் திருத்தங்கள்,
மலரட்டும். ஆனால்,
பட்டதாரிகளிடையே,
பொறியியல்
வல்லுனரிடையே,
அமைதியில்லா  சூழல்
சாபக்கேடு.
இதற்கு
மன அமைதிக்கு,
தேவை ஒரு
புரட்சி.!!






1

maarumo intha avalam? maatruvom.

மாற்றுவோம் இந்த அவலம்

மண்ணில் பிறந்தவர்கள்
மடிவது உறுதி
என்றறிந்தும்
தரணியில்
வாழப்பிறந்தவர்கள்,
தரம் கெட்டு,
மதி கெட்டு,
தற்கொலை ,
கொலை ,
என்ற
தருணர்கள் 
  செல்லும் பாதை,
தாயகம்
வருந்தும்
பாதை.
தாய்-தந்தையர்களை,
தவிக்க வைக்கும்
பாதை;
கள்ளக் காதலுக்காக,
கணவனைக் கொல்லும்,
காரிகை!!!
கண்ணகி,
கற்புக்கரசி
பிறந்த
நாட்டில்.
களங்கம்!!
ஐயா!!
களங்கம்!!
ஒருவரது,
தற்கொலை,
கொலை,
பலரது
வேதனைகள்.
அனைவரையும்,
அலற வைத்து

ஆறாத் துயரத்தில்
மூழ்கடிக்கும்
 குணம்,
படரும் போக்கு,
ஒரு தோற்று நோயாகும்.

அன்றாடப்  பத்திரிகைகளில்,
அதற்கென்றே ஒரு பக்கம்.
கடவுளுக்கும்,
காவல் துறைக்கும்,
ஒரு சவால்.
ஐயோ!!!
இந்த களங்கங்கள்.
எதற்கு?

கல்வி முறைக்கா/
சீர்திருத்த எண்ணங்களுக்கா.?
சமுதாய மாற்றங்களுக்கா?
பகுத்தறிவு   வாதிகளுக்கா?
திரைப்படங்களுக்கா?
சின்ன திரைகளுக்கா.?
ஆங்கில  போதனா
  முறைக்கா/?
எனக்குள் ஒரு எண்ணம்,
அறம் செய விரும்பு ,
ஆறுவது சினம் ---என்ற,
ஆரம்பக்கல்வி,
இன்று காணாமல்,
போனதாலோ/?
சினம் ஆறாமல் போனதோ/??
எதிர்காலம்
எரிமலையாகும்
அபாயங்கள்.
இளைஞர்,
விழித்தெழ
தேவை ஒரு
புரட்சி.
விவேகம் தேவை.
விழிப்புணர்வுகள்.
அறிவியல் முன்னேற்றம்.
தொழில் நுட்ப பூங்காக்கள்.
மன அழுத்தம்.
மண்  ரத்துகள்.
பொருளா/?
தாரமா/?
பொருளாதாரமா?
நெஞ்சம்
பொறுக்கவில்லை .
மாறுமோ/?
இந்த அவலம்.
தேவை ஒரு அறப்புரட்சி.






                                                  (இளைஞர்கள்)

happy new year 2012

புத்தாண்டு வாழ்த்து

இரண்டாயிரத்து  பன்னிரண்டு
புத்தாண்டு,
 இயற்கையின்
 சீற்றங்களின்றி
இன்னல்கள்  இல்லா,
இன்பந்தரும்
ஆண்டாகட்டும்
ஆண்டவன் தரும்
அல்ப ஆயுள் ,மூப்பு ,
நோய் ,மரணம்,
உள்ளத்தின் உளைச்சல்
தப்ப முடியாத
துன்பங்கள் ,
வேதனைகள்
என்பதை
உணர்ந்து தெளிந்து
கள்ள வழி,
கறுப்புப்  பணம் 
ஊழல்
கையூட்டு,
பாவங்களின்
சேமிப்பு ,
தப்ப முடியா,
பதிப்பு,
என உணர்ந்து,
இறைவனளித்த
பணியில்,
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,
நேர்மை
,சத்தியம்,
காலம் தாழ்த்தாமை,
போன்றவை தான்,
பாப விமோசனம்
எனத் தெளிந்து,
உயரிய
எண்ணங்கள்,
உள்ளத்தில்
மிளிர,
ஊக்கம் பெற்று,
ஞானம் பெற்று,
ஆன்மீக ஆண்டாக ,
ஆன்ம சுகம் தரும்
ஆண்டாக,
பார் காக்கும் /
பார் படைக்கும்,
பகவானின் அருள் பொழிய
அனந்த
சுகமளிக்கும்,
ஆனந்தம் பொங்கும்
ஆண்டாக
அமைய
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிரார்த்தனைகள்.










spirituality and peace

அமைதி தரும் ஆன்மிகம்.

அனுதினமும் ஆண்டவனைத் தொழுதால்,
அஷ்டலக்ஷ்மிகளும் ,அஷ்டமா சித்திகளும்,
ஆன்ம திருப்தியும் ,ஆன்ம ஐக்கியமும்,
ஆன்ம அமைதியும் ,ஆனந்தமும் பெறலாம்.

இவ் உலகு   அழியும் உலகு.
இன்னல்களும் பல ,இடையூர்களும் பல.
உள்ளத்தில்  உணர்வுடன், உரிமை மனதுடன்,
உலக நாதனைத் தொழுதால்,
உணரலாம் பேரானந்தம் தனை.
ஊனமுற்றோர் பலர் ,ஊமையானோர் பலர்,
ஊர்ந்து செல்வோர் பலர்
,ஊனக்கண்  உடையோர் பலர்.
ஊரார் பேச்சுக்கு ,ஊர் மக்கள் ஏச்சுக்கு ,
ஆளானோர் பலர்,
எள்ளி நகையாடுவோர் பலர்.
ஏளனப் பேச்சு பேசுவோர் பலர்.
எண்ணி ஏற்றம் தரும் ,
என்றும் இறைவனை நிலைத்து
வழிபடுவோர் சிலரே.
ஏக்கமுடன் பிறர் நலமுடன்,
இருப்பதைப் பார்த்து,
ஏங்கும் தன்மை உடையோர் பலர்.
எக்கணமும் இறைவனைப் பணிந்து ,
எவ்விதச் சலனமுமின்றி ,
வாழ்வோர் சிலர்.
ஐக்கிய மனதுடன் ,
ஐயமின்றி வாழ்ந்து ,
ஐம்புலன் அடக்கி,
ஜகத் ரக்ஷ்சகனை
ஒப்பில் உலகில் ,
ஓங்கு புகழ் பெற்று,
ஒப்பில் இறைவனின்,
அருள் பெறுவோர் சிலரே.
அவுடதமாக   விளங்கும் ,
ஆன்மீக வழியில்,
அமைதி பெற்று வாழ்வோர் ,
வையகத்தில் உலகை வென்று
வாழ்வாங்கு வாழலாம்.





,

pothuth thervu maanavarkalukku

ஐம்புலன்கள் அடக்குங்கள்

பொதுத் தேர்வு,
எழுதும்
மாணவர்களுக்கு,
இது வளரும்
பருவம்.
குரல் மாற்றம் ,
உருவ மாற்றம்
என
மனப்
போராட்டம்
தரும்
மாய நிழல் தோற்றங்கள்.
இந்து மத மாயை,
இஸ்லாமிய
சாத்தான்,
கிறிஸ்தவ மத,
தீய சக்தி,
மதங்கள்
காட்டும்
நெறி.
இதைப்புரிந்து,
அறிந்து,
மனமடக்கி,
புலன் அடக்கி ,
படிப்பில்
கவனம் செலுத்த,
உணர்ச்சி களை
கட்டுப்படுத்துங்கள்.
வள்ளுவர் குரல்,குறள்

ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்புடைத்து.,




pongal pandikai

பொங்கல்

பண்டிகைகள் பல,
பாரத நாட்டில்.
அசுரர்களை அளித்த ,
ஆனந்த பண்டிகைகள் .
நரகா சூரனை
அழித்த
தீபாவளி.
இராவணனை
அழித்த இராம லீலா.
ஹோலிகாவை ,
எரித்த ஹோலிபண்டிகை.
மகாபலி ,
மூன்றடி நிலம்,
அளித்து,
முக்தி பெற்ற,
ஓணப்பண்டிகை.
தீயவைகளை

அழித்த
தெய்வ அவதாரங்கள்
ஜன்ம ஜெயந்தி
என
பாரதப் பண்டிகைகள்.
ஆனால்,
தமிழர்கள்,
பண்டிகை,
உழவின்
பெருமையை ,
உழைப்பின் ,
உயர்வை,
மனித
உயிர் வாழ
உணவை
விளைவித்த,
இயற்கையை
போற்றும்
பொங்கல்
திருநாள்.
பழையன
கழிக்க,
போகிப்பண்டிகை.
புத்தரிசி
பொங்கல்,
ஞாலம்
காக்கும்
ஞாயிருக்குப்
படைத்து,
கார்மேகம்
காட்டி,
நிலதாகம்
தீர்த்து,
கதிர்கள்
தானியம்
செழிக்க
கதிர் வீசும்,
கதிரவனுக்கு,
நன்றி சொல்ல
பொங்கல் பண்டிகை.
உழைப்பிற்கு
ஈடு கொடுத்து,
உழைத்த
மாட்டின் மாடுகளுக்கு,
நன்றி
சொல்ல,
மாட்டுப்பொங்கல்.
உழைப்பின்
உயர்வை,
உழவனின்
பெருமையை
உயர்த்த,
உழவர் தினம்.
மனித
ஆற்றலுக்கு,
மாண்பு தரும்,
பொங்கல் பண்டிகை.
இந்த நன் நாளில்,
இன்பம் பொங்கட்டும்.
மனித நேயம்
பெருகட்டும்.
மனித
ஆற்றல்
ஆக்கமளிக்கட்டும்.
உழைக்கும்
வர்கத்தின்,
ஊதியம்
பெருக,
தமிழகம்
தரணியில்
சிறக்க
"பொங்கலோ"
பொங்கல்
என
கூவி,
மகிழட்டும்.