புதன், டிசம்பர் 14, 2011

namathu kadankal

ஆண்டுகள் கூட  அகவை கூடும்.
அகவை கூட வாழ்நாள் குறையும்.
வாழ்நாளில் செய்த நன்மைகள்,
வயதான காலத்தில் அமைதி தரும்.
தீய காரியங்கள் தனிமைப்படுத்தி,
மன அமைதி எரிக்கும்.
கடன் பட்ட நெஞ்சம் கலங்கும்.
கடன் என்றால் மற்றவர்களிடம்
பெற்ற துகை மட்டும் அல்ல.
பெற்ற கடன்,பிறந்த கடன்,
வளர்ந்த கடன்,வளர்த்த கடன்,
வீட்டுக்கடன் ,ஊர்க்கடன் ,
நட்புக்கடன்,நாட்டுக்கடன்,
கடமை யாற்றும் கடன்,
சமுதாயக்கடன் ,
தெய்வக்கடன்,
குரு கடன்,
கல்விக்கடன்,
தாய் தந்தைக்கான கடன்,
இந்தக்கடன்கள் இனிதே
தீர்த்திருந்தால்,
அகவைகூட அமைதிகூடும்.
கடமைகள் தவறியிருந்தால்.
கடமைகளில் கள்ளத்தனம்
இருந்தால் கடைசி அகவையில்
கண்ணீர் அலை துன்ப அலை
மாறி மாறி சிறிய பெரிய அலைகள்
வீசிக்கொண்டே  இருக்கும்.
அதனால் தான் கீதையில்
கடமையைச் செய் பலனை எதிர் பாராதே
என்றார் பரமாத்மா.
ஆசையற்ற செயல் புரியும் மார்க்கம் .
பணம் சொத்து பங்களாக்கள் தோட்டம் 
அனைத்தும் இருந்தாலும்,நீண்ட துயில்
நிச்சயம் வரும்,மீளாத்துயில்,
அப்பொழுது உடன் எதுவும் வராது.
பட்டினத்தார் பட்ட அனுபவம்
பாடிய பாடல்.

26 divine character// sign 26 theivaamsangal lakshanangall

26   தெய்வாம்சம்  ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியது
  1. அபயம்=எவ்வித அச்சமின்றி  இருத்தல்.
  2. சத்த்வசம்சுத்தி   =மனத்தூய்மை
  3. ஞானயோகவ்யவச்திதி:=த்யான யோகத்தில் தொடர்ந்து தத்துவ ஞானம் பெரும் முயற்சியில் நிலையாக இருத்தல்.
  4. தானம் ச =சாத்வீக தானம்.
  5. தம:=புலனடக்கம்.
  6. யஜ்ஞ:=== பூஜை,யாகம்,அக்னிஹோத்ரங்கள் நியமப்படி செய்தல்.
  7. சுவாத்யாய:==வேத சாஸ்திர ஞானங்களை தானே படித்து  மற்றவர்களுக்கும் கற்பித்தல்.
  8. தப :  ச = =சர்வ    தர்மத்தை  கடைபிடிப்பதில் அனைத்து துன்பங்களையும் சகித்துக்கொண்டு  அறத்தில் திடமாக இருத்தல்.
  9. ஆர்ஜவம் -==மன உடல் ரீதியான புலனடக்க நேர்மை
  10. அஹிம்சை=ஒருவருக்கும் மனதாலும் சொல்லாலும் உடலாலும் எவ்வித தீங்கும் தராமை.
  11. சத்யம்==உண்மையையே  பேசுதல்
  12. அக்ரோத:==யாரிடமும் தன் எதிரியிடமும் கோபப்படாமை
  13. த்யாக:==ஆணவம் இன்றி இருத்தல்.
  14. சாந்தி:=மன ஒருமைப்பாடு அமைதி,அலைபாயா மனம்
  15. அபைசுனம் =மற்றவரை  குற்றம் குறை கூறாமை
  16. பூதேஷு தயா ==அனைத்து உயிரினங்களிடத்தும்  இரக்கம் காட்டுதல்
  17. அலோலுப்த்வம்==பற்றற்ற தன்மை .தன்னிடம் வரும்  பொருளிலும் ஆசை இன்றி இருத்தல்
  18. மார்தவம் ===மிருதுவாக இருத்தல்,மென்மை
  19. ஹ்ரிஹி==உலகோடு ஒட்டி அறநெறியுடன் வாழ்தல் அதற்கு ஒவ்வாத செயல் புரிய நாணுதல்
  20. அசாபலம் ==வீண்  வெட்டி  செயல்களை செய்யாதிருத்தல்
  21. தேஜா :=ஒளியும் பொலிவும்
  22. க்ஷமா =மன்னிப்பு
  23. த்ருதி:=கொள்கை உறுதிப்பாடு
  24. சௌசம்=புறத்தூய்மை
  25. அத்ரோஹா=அனைவரிடமும் நட்புடன் இருத்தல்.பகைமை பாராட்டாமை
  26. நாதிமாநித==தற்புகழ்ச்சி இன்மை
மேற்கண்ட தெய்வ குண அடையாளங்களாக பகவத் கீதையின் பதினாறாவது
அத்தியாய ஆரம்பத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியுள்ளார்.

  1.    

hindi tamil spoken tamil

maama inru madurai pokiraar.(WRITTEN ) maama innaikki madhura poraar.(spoken)
maamaa aaj madhurai jaate hain.
मामा  इनरु मधुरै पोकिरार.     मामा इन्नैक्कू मदुरै पोरार. மாமா இன்று மதுரை போறார்.
மாமா இன்னைக்கு மதுரை போறார்.
கோபாலன்  இந்த வீடு ஒரு கோடி ரூபாய் என்று சொன்னான்.
गोपालन ने कहा कि इस घर का दाम एक करोड़ रूपये हैं.
गोपालन इंत वीडु ओरु कोडी नु चोन्नान.



हर

2012 prayer.

2012 ஆங்கிலப் புத்தாண்டு ,
ஆனந்த மாக,
அன்பு நிறைந்ததாக அமையவும்,
அராஜக
அதிகாரிகள்,
அரசியல் வாதிகள்,
ஆன்மீக வாதிகள்,
அர்ச்சகர்கள்,
கருப்பு வணிகர்கள்,
கருப்புப்பணம் சேர்ப்பவர்கள்,
கள்ளச்சந்தை
வியாபாரிகள்,
கடத்தல்காரர்கள்,
கடமை தவறியவர்கள்,
கற்பிக்காமல் ஊதியம் பெறும்
கல்வி நிலையங்கள்,
ஆசிரியர்கள்,
போலி மதிப்பெண் தயாரிப்போர்,
பணம் பெற்று மதிப்பெண் பெறுவோர்,
தர மில்லா  மாணவர்களுக்கு,
சான்றிதழ்  வழங்குவோர்,
கற்பழிப்போர்,
அதர்மத்திற்கு  வழிவகுப்போர்,
வழிப்பரியாளர்கள்,
தெரிந்தே தவறிழைப்போர்,
அறிந்து தவறு செய்து ,
தண்டனை பெற்றும்
திருந்தாத பாவிகள்,
கொலை செய்து கொள்ளை அடிப்போர்,
தானியங்கி வங்கிப் பணம் பெரும் ,
அட்டை மோசடி செய்வோர்
என அனைவரையும்
ஆண்டவன் தண்டிக்க,மனம் திருந்த,
முதல் தேதி ௨௦௧௨ ஜனவரி முதல்,
பிரார்த்திப்போம்.தினம் ௫ நிமிடங்கள்.
ஆண்டவன் சமதர்மர்  என்றால்
போலிச்சாமியார்கள்  தண்டனை பெறட்டும்.
நாட்டில் நல்லவர்,நேர்மையாளர்,உண்மையாளர்கள்,
அநிதீயை கண்டிப்போர், அனைவரும்
உயர்ந்து மனநிறை வாழ்க்கை வாழ பிரார்த்திப்போம்.