பட்டதாரிகளும் பாட்டாளிகளும் பணக்காரர்களும்
அறிவியல் விந்தை ப்படைப்புகளும் அதிகரிக்கும்
நாட்களில்
ஆச்சரியப்படும் விஷயம் பண்புகளும் ,பண்பாடும்
மனக்கட்டுப்படுகளும் பிறருக்கு உதவும் மாண்பும்
சிலரிடமே காண்பது.
நல்ல விஷயங்களைவிட
கடி சிரிப்புகள்,நக்கலான விஷயங்கள்
ரசிப்பதும் ஒரிரு வாக்கியங்களில்
அனைத்தும் புரிந்து செயல் படுத்தவேண்டும் என்பதே.
நம் தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் அவ்வாறே வழிகாட்டியது.
ஆத்திச்சூடியும் அவ்வாறே.
எத்தனை நீதிநூல்கள் .பழமொழிகள்.நல்வழிகள்.
இவைகளை அதிக அளவில்
மனப்பாடப்பகுதி இன்றி
பொருள் விளங்க நடத்தினாலே போதும்.
நாட்டில் அமைதி நிலவும்.
மனப்பாடப்பகுதி இன்றி
பொருள் விளங்க நடத்தினாலே போதும்.
நாட்டில் அமைதி நிலவும்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி .
யாது ஊரே யாவரும் கேளீர்.
உயர்ந்தோர் யார்?தாழ்ந்தோர் யார் ?
என்பதை அவ்வையார் போல் யார்
என்பதை அவ்வையார் போல் யார்
மிக எளிதாக விளக்க முடியும்.
ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர்
இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி.
இப்படி நீதி நெறிகள் கூறியும்
இன்றும் மதத்தின் மாநாடு .
அதில் அரசியல் தலைவர்கள் தலைவிகள்
பங்கேற்பதற்கான
பெரும் விளம்பரங்கள் .
வாக்குகள் பெறவேண்டும் என்றால்
மனிதர்கள் மதம் என்ற பெயரால்
வேறுபட்டு இருக்கவேண்டும்!!! .
என்னே உயரிய சிந்தனை.!!!
அதிலும் சிறுபான்மை
என்று ஒரு வாக்கு வங்கி
இனக்கலவரம் .
இன்றைய படித்த இளைஞர்கள்
சற்றே சிந்திக்கவேண்டும்.
அறிவை வளர்ப்பது அறிவியல் ;
நல்ல பண்பை வளர்ப்பது
பண்டைய தற்கால நல் இலக்கியங்கள்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதி.
தயவு செய்து உங்கள் மதத்தை
இறைவனை போற்றுங்கள்.
இது நல்வழிகாட்டும்.
சுயநல மதவாதிகள் சொல் கேட்டு
இனக்கலவரங்களில் ஈடுபட்டு
அப்பாவி இளைஞர்களை பலி ஆக்காதீர்கள்.
நாட்டின் நலம் கருதுங்கள்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.
நம் வரலாற்றில் நாட்டு பக்தியைவிட ஆணவம் .சுயநலம் அதிகம்.
அது நம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடை.
அரசனின் காதல் மோகத்திற்காக உயிர் இழந்த
வீரர்கள் தான் வீரகாப்பியம்.
இந்நிலையில் தான் அன்னியர்கள் ஆட்சி.
நாட்டிற்காக போராடுவோம்.
சுயநல அரசியலுக்கு முடிவுகட்டுங்கள்.
வாழ்க பாரதம்.
நீர் அதன் புதல்வர்.
இந்நினைவு அகற்றாதீர்.(மகாகவி பாரதி.)