முப்பெருந்தேவிகளின்
நவராத்திரி விழா
முடிந்ததே.
தேவிகள்
தேடிவந்து
அருள் தரும் நாட்கள்.
பண்டிகைகள் ,
ஆராதனைகள்,
ஆனால்,
அந்த நாட்களில்
பக்தர்களின் பக்தி
வியாபாரிகளுக்கு சக்தி.
இரண்டு நாவல்பழம் ஒரு ரூபாய்.
பூவின் விலை உயர்வோ
பூமியை விட்டு விண்ணைத் தொடும்.
விலைவாசி ஏற்றம் தான்
பண்டிகைகளின் பலன்.
இந்த மூட பக்தி
இறைவனின் அருள்கிட்டவா?
இந்நில உலகின் பொருள் கிட்டவா?
அதிக விலைவாசி ஏற்றி
ஆன்மிகம் வாணிகமாவதால்
ஆண்டவன் தரும் விலை ஏற்றம்.
பக்தி வெளிப்பகட்டாக மாறியதால்,
மின்தட்டுப்பாடு.
கும்மிருட்டு.
ஆலயம் செல்வதால்.
யாகம் செய்வதால்,
தண்டனைகுறையும்;
பாவங்கள் போகும் என்றால்
பதவிகள் போவதேன்.
கோடிகள் பல இருந்தாலும்
நெஞ்சுக்கு நிம்மதி இல்லை.
தொல்லைகள் என்பது
விபத்துக்கள் மூலம்.
நோய்கள் மூலம்.
தோழிகள் மூலம்.
பிள்ளைகள் மூலம்.
தொண்டர்கள் மூலம்.
எப்படியும் வரும்.
தர்மம் தலை காக்கும்.
செய்த புண்ணியங்கள்
பலன் தரும்.
பாவங்கள் தண்டனை தரும்.
இது தேவனின் தீர்ப்பு.
வாழ்க்கையின் அனுபவம்.
அதனால் தான்
இன்னல்கள் சூழும் உலகம்.
அதனாலேயே
பதவிகள் இழக்கும் சூழல்.
மனம் திருந்தும் நேரம்பதவி.
பதவி பெற்ற ஊழல் தோல்வி.
சிந்திப்பீர்!செயல் படுவீர்!
பல்லாயிரம் பேருக்கு நமை செய்யும்
திட்டம் தீட்டுவீர்.
நினைவுச் சின்னங்கள் சில ஆயிரம் போதும்.
மக்கள் நன்மைகளுக்கு பல கோடி.
ஒரு துருப்பிடிக்காத தூண்
இன்றுமுள்ளது.அதுபோதுமே நினைவுச் சின்னம்.
வெள்ளம் சூழ்ந்து தத்தளிக்கும் மக்கள்.
கண்ணீர் சிந்தும் மக்கள்.
சமாதிபுதுப்பிக்க ,வளைவு வைக்க பலகோடி.
அம்மையீர்! சிந்திப்பீர்!
நிரந்தர முதல்வராக
அடுத்த வெள்ளம்
சாலையிலோடாமல்,
கால்வாயில் ஓடட்டும்.
அம்பத்தூர்,ஆவடி,மடிப்பாக்கம்,பள்ளிக்கரணை
மக்கள் பாவிகளா?அங்கு வீடு கட்ட அனுமதி அளித்த
கடன் அளித்த அதிகாரிகளா?அமைச்சர்களா ?
அல்ல இந்த அல்லல்களுக்கு நிரந்தர
நிவாரணம் காணா முதல்வர்களா ?
நல்லது செய்து
நானிலம் காப்பீர்!
வையகம் போற்றும்.
அசோகர் செய்த கொடுமைகள் மறந்து,
மரம் நட்டார்;சாலைகள் அமைத்தார் என போற்றும் உலகம்.
அல்லல்பெரும்மக்கள் துயர் தீர்க்க துரவரம்பூண்ட புத்தர்.
சித்தர்கள்.
முற்றிலும் துறந்த மகாவீரர்.
ஆனால் ,இன்று
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம்.
நாட்டு மக்கள் ஏழைமக்கள்,நடுத்தர மக்கள்
பஸ் படிக்கட்டுகளில் தொங்கி மரணம்.
இந்தியா ஏழைநாடா ?
இரக்கமற்ற தலைவர்கள்,
உலகில் நான்காவது பணக்காரி வாழும் நாடு.
இந்த கோடிகள் வெறும் கோடித் துணிக்கு.