மனிதன் மன நிறையுடன் வாழவேண்டும். ஆனால் மனிதனின் மனநிறைவு
என்ற இடம் முற்றுப்புள்ளி இல்லாமல் இருக்கிறது.
அவனிடம் இல்லாததை மட்டும் அவன் muthalil தேவைக்கேற்ப பெற முயற்ச்சிக்கிறான்.
ஆனால் அவன் தேவைkal
அதிகரித்து நிம்மதி இன்றி இன்னல்படுகிறான். இதற்கு மைதாசின்
கதை புகழ் பெற்றது. அவன் கதையின் சாரம் ஆண்டவன் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறான்.ஆனால் மனிதனின் ஆசைகள்,விருப்பங்கள்,எண்ணங்கள் நிலையின்றி தற்காலிகமாகி
அவனை மன நிறைவற்றவனாகவே ஆக்குகின்றன.
சப்பட்டை மூக்குள்ளவள் இறைவனை வேண்டி பெரிய மூக்கு பெற்று
அதனால் தன் அழகு கெட்டுவிட்டது என மீண்டும் இறைவனை வேண்டி மூக்கிழந்த கதையும் உண்டு .
மீண்டும் மீண்டும் பழம் கதைகள் புதிய இளம் தலை முறையினருக்குத்
தேவைப்படுவதாகவே உள்ளத்தால் ஏற்கப்படுகிறது.
இறைவன் ஆட்டுக்குக் கால் அளந்து வைப்பது போல் மனிதனின்
ஆரம்பகால ஆசைகள் நிறைவேறுகின்றன.
பல சந்நியாசிகள் தடம் புரள்வதும் இப்படித்தான்.