திங்கள், மார்ச் 12, 2012

tharamaana ilakkiyangal

இறைவன்  அருள்

நான் இறையருள் பெற்ற புலவர்கள் வரலாறு படித்தேன்.அனைவரும் ஆண்டிகளாக கோயில்களில் பாட்டுப்படி பல அதிசயங்கள் நிகழ்த்தி உள்ளனர்.
ஆனால் அவர்கள் பொருளுக்கு ஆசைபட்டது இல்லை.ஆனால் பொருள் பொதிந்த பாடல்கள் இயற்றி உள்ளனர். காசுக்காக கண்டபடி கட்டிப்பிடி பாடல்கள் பாடவில்லை.பல யுகங்களுக்கு மனிதன் அமைதியான மன நிறைவான மகிழ்ச்சியான நீண்ட ஆரோக்யமான வாழ்க்கைத் தத்துவப்பாடல்கள் பாடினர்.
எக்காலத்திற்கும் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் பாடினர்.
ஆனால் காலப்போக்கில் அவை பொக்கிஷங்களாக நூலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விட்டன..அவை எல்லாம்  விலை மதிப்பற்ற காவியங்கள் என பாராட்டப் பட்டதால் ஒரு சிலரால் பட்டிமன்றங்களிலும் .மேடைகளிலும் மேற்கோளுக்காக  எடுத்துக்காட்டப்பட்டு சிந்தனைகளைத் தூண்டின.


காலப்போக்கில்  பட்டிமன்றங்களும் திரைப்படப்பாடல்கள் கலாசார மேம்பாடா/
சீரழிவா என்று மாறிவிட்டன.
நல்வழி மறந்து சில நேர இன்பங்களுக்கான பாடல்கள் இன்றைய சமுதாயத்தில் குழந்தைகளைப் பாட வைத்து ரசிக்க ஆரம்பிக்கின்றனர்.
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை //சைவக்காதல்/அசைவக்காதல்
ஆன்மீகக் காதல்/ இலக்கியக்காதல்.
இதில் அழிந்துபோவது ஆண்கள்.சவரக்கத்தி முதல் அனைத்திலும் கவர்ச்சி.
இளம் தலை முறையினர்  அழிந்து பெற்ற குழந்தையை தவிக்க விட்டு மாற்றானை விரும்பும் பெண்கள் உயர்ந்து வருகின்றனர்.பல குடும்பங்களில்
நிம்மதியில்லை.






rajayokam.

உலகில் உண்மை என்பதே உன்னத நிலை அடைந்தாலும் ,பொய் என்பது பண பலத்தாலும் ,அதிகார பலத்தாலும்,ஆணவத்தாலும்,தன்னலத்தாலும், நட்பு ,விரோதம்,குரோதம் ,பாசம் ,நேசம் என்ற மாயையில் தலைவிரித்தாடுகிறது.
அதற்காக கையூட்டு,ஊழல்.சிபாரிசு,,ஜால்ரா ,சூழ்ச்சி,கொலை,கொள்ளை,கடத்தல்,என்ற செய்திகள் நாள்தோறும் பார்க்கிறோம்.என்ன செய்வது./?
இறைவன் இவ்வுலகில் இப்பாவிகளுக்காகவே நோய்,விபத்து,மரணம்,இயற்கையின் சீற்றம்,மழலைப்பேரின்மை,அகால மரணம்,,தோல்விகள்,அவமானங்கள்,பைத்தியம்,குருடு,செவிடு ,அங்க ஹீன அவஸ்த்தைகள்,கோடிக்கணக்கில் பணம் இருந்தும் தீராத நோய்கள் என 
நேரடியாக இன்றி மறைமுகமாக முரசரைந்துகொண்டிருக்கிறான்.

நமது முன்னோர்கள் இதை அவ்வப்பொழுது வேதம்.பகவத் கீதை,குரான் பைபிள் 

போன்றவைகள் மூலம்  பல முறை வலியுறித்தியும்,அன்றாட  இறைவணக்கம் 
மூலமும், உணர  வைத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் கலியுகத்தில் ஆன்மிகம்   என்பது கோயில் உண்டியலில்  பணம் போடுவதும் ,கொலைவெறி  பாடலுக்கு  முக்கியத்துவம்  கொடுப்பதாகவும்  உள்ளது .

இது இன்றைய  கல்யுகத்தில்  மட்டுமல்ல ,இராமாயண மகா பாரத காலத்திலும் 
இருந்துள்ளது.இல்லை என்றால் ராம-ராவணப்போர்,மகாபாரதப்போர் ஏன் வந்தது.கல்லால் அடித்ததும் ,சிலுவையில் அறிந்ததும் ஏன் நடந்தது.
ஆகையால் தான்  
முனிவர்களும் ,யோகிகளும்,சித்தர்களும்,துறைவிகளும்,சிங்கம்,புலி,சிறுத்தை,பாம்புகளும் வாழும் காடே மேல் என்று அங்கு சென்று வாழ்ந்தனர்,அதற்கு மனம் வேண்டுமல்லவா? முற்றிலும் துறக்கும் மனம் ...சித்தார்த்தர் போல்,மகா வீரர் போல்.
ஊரில் வாழும் ஆடம்பர ஆஷ்ராமவாசிகள் பட்டதற நிலையில் இல்லை.
ராஜ யோகம் என்று இதைத்தான் கூறுகின்றனர்.