செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

காசினியில் வாழ காசுதானே.


எனது கல்வி 

நான்  படித்த தமிழ் 

எனது ஐந்து வயதில்.

அப்பொழுது தர்மப் பள்ளி.

ஆசிரியர்கள் வறுமை நிலை.

ஊதியம் 
சரியாக வராததால் 
எத்தனையோ ஆசிரியைகள் 
இறைவனடி சேர்ந்த 
வரலாறு  தன்னிச்சையாக.

அவர்கள் சொல்லிக்கொடுத்தது 
அறம்  செய விரும்பு.
ஆறுவது சினம்.
இன்று எனது பேரன் 
ஐம்பதாயிரம் நன்கொடை.
பள்ளிக்கட்டணம்.
சீருடை 
புத்தகம்,
காலணி  என 
எழுபத்தைந்தாயிரம்.
படித்தது 
ஆங்கிலம்.
அந்தப்பாடல் 
பொருள்  தெரியாத 
பொருள் செலவு செய்த 
பொறுப்பற்ற  பாடங்கள் .
ஆறுவது சினம் 
அறியாத கல்வி.
விளைவு 
ஆசிரியை கத்தி குத்து.
ஆங்கிலக்கல்வி 
இயல் வது கரவேல்.
ஈவது விலக்கேல் 
என்று கற்பிப்பது  இல்லை.
பணம் படைத்தோர் கல்வி.
ஆங்கிலம்.
ஏழையின் கல்வி 
தமிழ் .
தேசத்தந்தை 
தாய்மொழிக்கல்வி 
அவசியம் என்றார்.
ஆனால் 
தமிழ் தமிழ் 
என்றவர்கள் 
ஆட்சியில் 
பெயர் தமிழ்.
பெயருக்குத்தமிழ் .
நாற்பது 
ஆண்டுகாலம் 
தமிழ் ஆட்சி.
ஆனால் 
வளர்ந்தது 
ஆங்கிலம்.
திரைப்படப்பாடல் 
take it policy.
 தலைவர் 
தலைவர் மகன் 
மகள் 
அனைவரும் நடத்தும் பள்ளி 
மத்திய அரசுப்பள்ளி.
ஏனென்றால் 
கட்டண க்  கட்டுப்பாடு 
மாநில அரசு கட்டுப்பாட்டுப் பள்ளிகளே 

எனவே 
பல 
 மெட்ரிக்  பள்ளிகள் 
சட்டம் வரும் என்று 
முன்னறிவிப்பு  பெற்று 
சி.பீ.எஸ்.சி.பள்ளிகளாக 
மாறிவிட்டன,
கல்வி காசு இருந்தால்'
காசினியில் வாழ  காசுதானே.