திங்கள், ஜனவரி 09, 2012

manithan

மனிதன்

கவி ----நசீர் அக்பராபாதி
உலகின் பேரரசுனும் மனிதன்.
ஏழையும் பிச்சைக்காரனும் மனிதன்.
இரக்கமற்ற பணம் படைத்தவனும் மனிதன்.
அறுசுவை உண்டி ஆனந்தமாய்
 உண்பவனும் மனிதன்.
பிச்சை எடுத்து சாபிடுபவனும் மனிதன்.
ஐயா!
தொழுகை செய்பவனும் மனிதன்.
தொழுகை செய்விப்பவனும் மனிதன்.
மனிதன் தான் குரானையும் படிக்கிறான்.
மனிதன் தான்  
செருப்பைத்  thirudukiraan ,
திருடுபவனையும் கண்டுபிடிக்கிறான்.
மனிதனுக்காக உயிர் தியாகம்
செய்பவனும் மனிதன் தான்.
மனிதனை கொலை செய்பவனும்
மனிதன் தான்.
கொள்ளை அடிப்பவனும் மனிதன் தான்.
கூக்கிரலிட்டு  உதவிக்காக
அளிப்பவனும் மனிதன் தான்,
கூப்பிட்ட குரலுக்கு உதவ
ஒடிவருபவனும் மனிதன் தான்.
காதல் பாட்டுப் பாடுபவனும்
மனிதன் தான்.
பல்லாக்கினுள் அமருபவனும்
மனிதன் தான்.
பல்லாக்குத் தூக்குபவனும்
மனிதன் தான்.
குதிரையில் சவாரி செய்பவனும்
மனிதன் தான்.
குதிரைக்குப் பின்னால்.
ஹுக்கா-ஜாடி
எடுத்துக்கொண்டு
ஓடுபவனும் மனிதன் தான்.
மனிதனை மதிப்பவனும் மனிதன் தான்.
மனிதனை அவமதிப்பவனும் மனிதன் தான்.

 .
.







tajmahall

தாஜ்மஹால்

ஜனாப்   சாஹர் லுதியாநபி

தாஜ்மஹலை ஷஹ்ஜஹான்
கட்டுவித்து,
தன் காதலை  அமரக் காதலாக்கினான்.

ஆனால்

தாஜ் மகாலை கட்டி

அவன் ஏழையின் காதலை

கேலிச்சித்திரம் ஆக்கிவிட்டான்.

என்னருமைக்காதலியே!!
  தாஜ்மஹால் காதலின்
அன்புச்சின்னமாகத் தோன்றலாம்.
இந்த இறந்த பேரரசரின்
 கல்லறை கண்டு மகிழும் காதலியே!
நீ  உன் இருள் சூழ்ந்த உன் வீட்டினைப்பார்.

உலகில் எண்ண முடியாக் காதலர்கள்,
அவர்களின் காதலும் உண்மையானதுதான்.
ஆனால் வறுமையின்  காரணமாக
அவர்களின் காதல் ஒளிரவில்லை.
தஜ்மஹாலைப்பார்!
இந்த கல்லறைகள் ,
இந்த கோட்டை ,மதில் சுவர்கள்,
அழகுமிளிரும் தூண்கள்.
பூவேலைப்பாடு நிறைந்த ,
சுவர்கள் ,எழில் பூங்காக்கள்,
 வியர்வையும்
மிளிரும் விளக்குகள்,
உதிரமும்
உழைப்பும்
முன்னோருடையது.
இந்த தொழிலாளர்கள்
காதலிக்கவில்லையா?
ஆனால் அவர்களின் நினைவாக
எந்த அடையாளமும் இல்லை.
சிறிய மண் விளக்குகூட இல்லை.
பணம் படைத்தவர்கள்,
பாட்டாளியின் ரத்தம்
உறிஞ்சி
ஏழைகளின் காதலை
ஏளனத்திற்கு
உள்ளாக்கியுள்ளனர்.
என் அருமைக்காதல்,
கண்மணியே,
நாம் இந்த அவமானத்தின்
சின்னம்
தாஜ்மஹாலில்,
சந்திக்க வேண்டாம்.
வேறு எங்காவது
சந்திப்போம்.
.



 .





khudhaa =kadavul

குதா=கடவுள்

உருது கவிதை (தமிழாக்கம்)
அக்பர் இலஹாபாதி

இறைவனின் பெயர் ஒளி.
இறைவனின் பெயர் அன்பு.
இறை நாமம் ஜபித்தால்,
மன வலிமை கிட்டும்.
நாக்குக்கு பேசும்
உரிமை(திறன்) கிட்டும்.
இரவும் பகலும்
இறைவனின் ஆணைப்படியே.
விண்ணின் விண்மீன்கள்
ஏற்பாடும் ஆதிக்கமும்
ஆண்டவனின் அதிகாரத்திலே.
பருவ கால மாற்றமும்
பகவானின் கட்டளையே.
அவன் கட்டளையாலேயே
காற்று வீசுகிறது.
அவன் கட்டளையால்
பழங்களும் தானியங்களும்
விளைகின்றன.
அவன் கட்டளையே
மழை பெய்வதும்.
ஆனால் மனிதன்
ஆணவத்தால்
தன்னையே
உயர்ந்தவனாக
கருதுகிறான்,
மற்றவர்களை மதிப்பதில்லை
மரணம்  நெருங்கும்    போது
வேறுவழி இன்றி,
இருப்பான்.
செயல் நன்காக  இருந்தால்
உயர் இடம் கிடைக்கும்,
அழியும் இந்நில உலகில்
மனிதன் சோதனைக்கு
உட்படுத்தப்படுகிறான்.
நமக்கு தர்மங்கள்
நல்வழி காட்டுகின்றன 
பெரியோரை  
மதிக்கவேண்டும்.
இறைவனிடம்
அஞ்சவேண்டும்.
தீய செயல்களில் இருந்து
தப்பிக்க வேண்டும்.
இறை மார்க்கத்தில்,
செல்லவேண்டும்.



,

   




siriya virunthaali--- புதிய சின்னஞ்சிறு விருந்தாளி


சிறிய  விருந்தாளி

அக்தர் சீரானி உருது கவிஞர்

a
எனது வீட்டு விருந்தாளி ,என் சிறு குழந்தை
அதன் மேல் ஒரு குற்றச்சாட்டு.
நீ வந்தாய்.அகமகிழ்ச்சி தான்.
வரவேற்கிறேன்.-ஆனால்
என் அன்பு மனைவியின்
முழு அன்பையும் நீ
கொள்ளை
  அடித்து  விட்டாய்.
நீ அவள் மனதைப்
பறித்துக்கொண்டாய்.
என்மன ஆசைகளை,
 மகிழ்ச்சியை 
எடுத்துக்கொண்டு விட்டாய்.
விருந்தாளியாக வந்து
என் ஆனந்தத்தைக்
கொள்ளை கொண்டாய்.
என்மனைவிக்குச் செல்லமாய்,
எனக்கு விரோதி யாய்,
ஆனாய் நீயே.
என் இல்லத்தரசியின்,
முன்னர் கிடைத்த அன்பு,
நீ வந்த பின்  கிட்ட வில்லை.
என்னை மறந்து
எப்பொழுதும்
 உன்னருகிலேயே
உள்ளாள்
.உன் வருகையால்,
பெரும் புரட்சியே
நடந்து விட்டது.
அவள்
உன்னைவிட்டுப்
பிரிவதே இல்லை.
என்னிடம்
அன்புகாட்டுவதும் இல்லை.
காதல் சமிக்ஞையும்
இல்லை.
என்னிடம் அவள் வருவது
கனவாகி விட்டது.
ஒரே வீட்டில் இருந்தும்,
தனியாக இருக்கப்
பழகிக்கொண்டாள்
உன்னருகிலேயே  இருக்க 
என்னிடமிருந்து பிரிந்து விட் டாள்.
என் படுக்கையும் உன் படுக்கை
ஆகிவிட்டது.
நீவந்ததும்.
வீடு உன் அதிகாரத்திற்கு
வந்துவிட்டது.
பணியாட்களுக்கும்
எனக்கு சேவை  செய்வதை விட
உனக்கு சேவை செய்யவே
விருப்பமாக உள்ளது.
நீ வந்ததும் எனக்கு
வசந்தமில்லாமல்
எனக்கு குழந்தைப்
பருவமில்லாமல்,
எனக்கு வாலிபமும் 
இல்லாமல்,
அனைத்தையும் 
எடுத்துக்கொண்டாய் .
இல்லம் வருவோரும்,
உன் நலம் தான்
விசாரிக்கின்றனர்.--என் 
நலம் விசாரிக்க 
ஒருவரும் இல்லை.
அன்பின் அவதாரமாகி,
என் அன்பையும் சேர்த்துக்கொண்டாய்  .

நீ

புதிய    சின்னஞ்சிறு  விருந்தாளி  

.






viruppangal

விருப்பங்கள்.

வினோதங்கள்.

சிலர் தான்

 விரும்புவதை

தான் விரும்புபவர்களுக்காக

விட்டு விடுகின்றனர்.

சிலர் தன் விருப்பங்கள்

நிறைவேற

தன்னை நேசிப்பவர்களை

துறந்து விடுகின்றனர்
.
சிலரின் விருப்பங்கள்

மற்றவர்களின் விருப்பங்களாக

ஆகிவிடுகின்றன,

சிலருக்கு தான் வெறுப்பதை

விரும்பும் சூழல்

இயற்கையாகவே

அமைந்து விடுகிறது.

சிலர் விருப்பங்கள்

நிறை வேறாதென்று

வாழ்க்கை வாழவேண்டுமா?

வாழ்க்கை முடித்துக்கொள்ளலாமா?

என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

விரும்பும் தொழில்,விரும்பும் மனைவி,

விரும்பும் பெற்றோர்கள்,விரும்பும் நண்பர்கள்.

விரும்பும் வசதி- வாய்ப்புகள்,

கிடைக்கப் பெற்றோர் வையகத்தில் இல்லை.

 பிறப்பு-மரணம் இடையில் வாழ்க்கை.

ஒன்று நிச்சயிக்கப்பட்டது.

அது இறுதி.

நடுவில் உள்ள வாழ்க்கை

போராட்டம்

அதனால்

அதை ஒதுக்கி,

அமைதி தேடி கானகம்

சென்றோர் ஆன்மீகவாதிகள்.

உலகம் உய்ய வனம்

 சென்றோர் உத்தமர்கள்.