சனி, ஜனவரி 27, 2018

கடன் அட்டை

வங்கிகளும் கடன் அட்டைகளும்

கடன் அட்டை வாங்காதீர்.

வங்கிகள் கடன் கேட்டு வருவோருக்கு கடன் தருவதில்லை.
கடன் அட்டை வாங்க ,அடிக்கடி தொலைபேசி ,அலைபேசிகள் மூலம் தொந்தரவுகள் செய்கின்றன. அதில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள்
அந்த வலையில் விழுவதுடன் புது காதலி, புது மனைவி என்று ஆடம்பரமான அலைபேசி,
வாஹனம் , ஹோட்டல் என்று அதிகக் கடனாளிகள் ஆகின்றனர். வேலையில்லா பட்டதாரிகள்
கடன் கட்டைக்கு ஆள்பிடிக்க அலைகின்றனர்.
கடன் வசூலிக்க என்று திடகாத்திரமான ஆட்கள்.
இது டாஸ்மாக் விட மோசமான கடன் போதை.
என் நண்பர் , வங்கி செயலரும் கூட,
கடன் அட்டை கடன் பல லக்ஷம் வாங்கி நோய்வாய் பட்டார். மனஉளைச்சல் வேறு.
இந்த கடன் அட்டை தலையில் கட்டும் நபருக்கும் ,
வங்கிக்கும் எவ்வித தொடர்பு ம் கிடையாது.
அவர்கள் சில அன்பளிப்பு என்று சொல்வார்கள்.
கடன் அட்டை வாங்கியபின் அன்பளிப்பு வங்கியில்
பெற்றுக்கொள் என்பர். வங்கி அப்படி எதுவும் கிடையாது என்று முதல் கடன் வாங்கிய பின் சொல்வார்கள்.

இது ஒரு வேடிக்கை கடன் கட்டி முடிந்தபின்னும் கடன் கட்டவில்லை என்று மிரட்டல்வரும்.
அந்த மிரட்டுபவர் தில்லியில் இருந்து ஹிந்தி ஆங்கிலத்தில் பேசுவார்.
அதைப் பொருட்படுத்தி பலர் ஏமாறுகிறார்கள்.
கடன் கட்டாதவர்கள் தப்பிவிடுவார்.
கடன் அட்டை வாங்கித்தான் வாழவேண்டும்.
நாடே கடனில் தான் என்ற தத்துவம் வேறு.
இப்படி நடுத்தரவாலிப ஆண், பெண்களை ஏமாற்றி கொள்ளை அடித்து ,
கடன் திருப்பிசெளுத்தாத , நஷ்டத்தில் ஓடுவதாக காட்டி ஏமாற்றுபவர்களுக்கு , விஜய் மல்லையா போன்றவர்களுக்கு கடன் அளித்து மகிழ்கிறார்கள்.

மற்றோருகொடுமை மினிமம் பேலன்ஸ் இல்லை என்று ஏழைகள் பணத்தை எடுத்துக்கொள்ளும் பகல் கொள்ளை. இது பல ஆயிரம் கொடிகள்.
இதுவும் பணக்காரர்களுக்கு கார்வீடு வாங்க கொடுத்து விடுகிறார்கள்.
இதை வசூலிக்க நீதிமன்றம். எனக்குத்தெரிந்த ஒருவர் வழக்கு பல ஆண்டுகள் நீடித்து கடன் கட்டாமலேயே மரணம். இந்த கடன் கட்டாமல் இருக்க பல அறிவியல் ஊழல் ஆலோசனைகள்.

நாலாயிரம் ரூபாய் கடன் கேட்டால் கொடுக்கமாட்டார்கள்.

கடன் அட்டை வாங்க அழைப்புவிடுதல், ஏஜன்ட் அனுப்புதல் இதெல்லாம் அந்த தொலைக்காட்சிப்பட்டி, வீடு, கார் விற்கும் நிறுவனங்களின் மூலம் அதிக வருமானம்.
இதில் இளைஞர்கள் ஏமாறக்கூடாது என்பதே
எனது வேண்டுகோள். நாம் நமக்காக வாழ வேண்டுமே தவிர மற்றவர்கள் கெளரவிப்பார்கள் என்று சில புகழுக்காக கல்யாணம், வாஹனம் அலைபேசி என்று கடன்வாங்கி நிம்மதி இழக்கக் கூடாது.
ஔவையார்:--
ஆனமுதலில் அதிகம் சிலவானால்,
மானம் இழந்து மதிகெட்டு போன திசை ,
எல்லோருக்கும் கள்வனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் ,


நல்லாருக்கும் போல்லானாம் நாடு.