ஹிந்து மேல் நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்ததும் எனக்கு அறிமுகமானவர்களில் முக்கியமானவர்கள் தமிழாசிரியர் கே.ஆர்.ஜி.எஸ்..என்னுடன் வெஸ்லி மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஹிந்தி ஆசிரியர் ஓ.ஆர்.ராஜகோபால் அவர்களின் உறவினர்.
ஒ.ஆர்.ஆர். என்னைப்பற்றிக் கூறியதாகவும் நான் நேர் காணல் வந்த போது விடுப்பில் இருந்ததாகவும் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஆர்.எஸ் அவர்களிடம் கூறியதாகவும் சொன்னார்.அவரின் அறிவுரைகள்,உதவிகள் மறக்க முடியாது. ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு உதவினார்கள்.அவர்கள் எனக்கு தைரியம் அளித்தனர்.ஹிந்து பள்ளி ஆசிரியர்கள் சங்கம் நாடகங்கள் நடத்தி பள்ளி வளர்ச்சிக்கு நிதி சேர்த்தது. ஆசிரியர்களும் யாத்திரை செல்வர்.
அதில் ஆண்டுதோறும் திருப்பதி செல்வதை என்னால் மறக்கமுடியாது.
திருப்பதியில் நான் தெய்வ சக்தியை உணர்ந்தேன்.திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. தேர்வு எழுத சென்றபோது தான் எனக்கு எழுமலையான் தரிசனம் முதல்முதலாக.பல்கலைக்கழக தேர்வு நுழைவுச் சீட்டு என்னை நேரடி தரிசனத்திற்கு ராஜகோபுரத்தில் இருந்து செல்ல வழிவகுத்தது.இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும்போது தான் அந்த அதிசய நிகழ்வு.பெரும் கூட்டம்.நாங்கள் சென்ற ஆண்டு சென்றவர்கள் தேர்வு நுழைவுச் சீட்டு காண்பித்து தரிசன அனுமதி கேட்டோம். அப்பொழுது ஒருவர் நுழைவுச் சீட்டு இருந்தால் நேரடி தரிசனம் என்றார்.உடனே அந்த சட்டம் எங்கே?என்று தகராறு ஏற்பட்டு உள்ளே செல்ல விடவில்லை.அப்பொழுது ஒருவர் என்னை அழைத்து என்னிடம் வி.ஐ.பி. பாஸ் உள்ளது. வாருங்கள் என்று நேரடியாக அழைத்துச்சென்று தரிசன் முடிந்தபின் என் பெயர் வெங்கடாசலபதி. இங்கு அனைவருக்கும் உணவு தானியம் வழங்கும் ஒப்பந்தக்காரன் .அனைவரையும் காக்கும் பொறுப்பு .என்று சொன்னவர் மறைந்து விட்டார். எனக்கு தேர்வு முடிவுகள் வந்த மாதமே உடனடியாக ஹிந்து மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி ஹிந்தி ஆசிரியர் நியமனம். ௧௯௮௦இல் இருந்து ௨௦௦௫ வரை ஆசிரியர் சங்க திருப்பதி சுற்றுலாவில் கலந்து ஏழுமலையான் தரிசனம்.அதுவும் ஓரிரு ஆண்டுகள் தவிர நடந்து சென்றே தரிசனம்.
என் மாமா எதிர் பாராதவிதமாக சாலையில் மரண ம் அடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் பிணவறையில் இருப்பதாக செய்தி. அவர் தான் என் தகப்பனார் முதல் ஆண்டு திவசத்திற்காக பழனிக்கு அனுப்பிவைத்தார். அவரின் இந்த மாற செய்தி பழனிக்கு வந்ததும் என் மனைவிக்கு அதிர்ச்சி.ஒரு கை,ஒருகால் செயல் இழந்த நிலை.அப்பொழுதுதான் டாக்டர் வேல்முருகேந்திரன் அவர்களைச் சந்திக்க பள்ளி செயலர் ஸ்ரீனிவாச கோபாலன் அறிவுரை வழங்கினார்.அந்த நிலையில் ஒரு உத்வேகம் மனைவி குழந்தைகளுடன் நடந்தே எழுமலையான் தரிசனத்திற்குச் சென்றேன். குழந்தைகள் ,மற்ற பாதயாத்திரிகர்கள் அனைவருக்கும் என் மேல் கோபம்.அந்த தரிசனம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் எனது ௨வது மகனுக்கு கால் வலி.அனைவரும் சேர்ந்து மீண்டும் நடந்து வருகிறோம் என்று பிரார்த்தனை செய்ததும் கால்வலி போயே போச்சு.அடுத்த ஆண்டு நான் சொல்லாமலேயே அனைவரும் மகிழ்ச்சியாக நடந்து சென்றோம்.அது தான் தெய்வ சங்கல்பம்.ஒரு புத்துணர்வை உணர்ந்தோம்......தொடரும்