புதன், அக்டோபர் 31, 2012

ஆகையால் பல மொழி அறிவு வாழ கைகொடுக்கும்.

.

        நான்  ஆசிரியர் பணி  ஆற்றத் தொடங்கியது பதினாறு  வயதில்.எனது குடும்ப சூழல்  அம்மாவின் கடும் உழைப்பு   தேசீய நீரோட்டத்தில் இந்திய தொடர்பு மொழி ஹிந்தி பிரசாரம்.இதில்  வாழ்க்கை நடத்த  வருமானம். என் தாயார் தமிழும் சமஸ்கிருதமும் தெரிந்ததால் லக்ஷ்மிவிலாஸ் வங்கி மேலாளர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் அவர்கள் மனைவியின் தூண்டுதலால் ஹிந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.மாதக் கட்டணம் நாலணா,எட்டணா .என் அப்பாவிற்கு  உழைக்கத் தெரியும்.உழைப்பைப் பெறுபவர்கள் ஊதியம் கொடுக்க தயங்குவார்கள்.கொடுத்தாலும் தன் அண்ணன்   குடும்பத்திற்கும்,ஏழை எளியவர்களுக்கும் போய் சேரும்.அதனால்,எனது தாயார் கோமதிஜி  1953இல் இருந்து ஹிந்தி பிரசாரத்தை ஆரம்பித்தார்.நான் பிறந்த பின் பழனி அரசு பெண்கள்  மேல் நிலைப்பள்ளியில்  படித்தார்.
அதனுடன் ஹிந்தி தேர்வுகளும் .
தாயாரின் ஹிந்தி அறிவு எனக்கும் இயற்கையாக வந்தது.
அவருக்கு முதல் அரசு நியமனம் கொம்புக்கார நேண்தல் என்ற கிராமம்.முத்தனேந்தல் என்ற ரயில் நிலையத்தில்  இறங்கி ஐந்து ஆறு மையில்  நடந்து செல்ல வேண்டும்.பேருந்து வசதிகள் கிடையாது.
பின்னர்  சிங்கம்புணரி பள்ளியில் பணி புரிந்தார்.ஹிந்தி ஆசிரியை.அக்கம்பக்கத்தில் ஹிந்தி எதிர்ப்பு. அமைச்சர் மாதவன் அவர் உறவினர்கள் பக்கத்தில்.ஆதரவு.ஹிந்தி அரசுமொழி ஆவதற்குத்தான் அவர்கள் எதிர்ப்பு. ஹிந்தி விரும்பி கற்போருக்கு என்றுமே தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு கிடையாது.அதனால் தான் இன்றும் தமிழக அரசின் எவ்வித உதவியும் இன்றி ஆயிரக்கணக்கில் ஹிந்தியால் பொருளீட்டுவோரும் ,லக்ஷக்கணக்கில் ஹிந்தி படிப்போரும் இன்றும் உண்டு. ஆனால் ஓய்வின்றி ஹிந்தி பிரசாரம் உண்மையாக செய்வோருக்கு வருமானம் இல்லை.
அரசுக்கல்லூரி,பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும்  ஊதியம் அதிகம்.அதுபோல் மத்திய அரசு ஹிந்தி அலுவலர்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் ஊதியம் அதிகம்.
இன்று இந்தி பிரசாரம் பிரசார சபைஇந்தி பிரச்சாரகர்களின்  நலனைவிட,அதாவது லக்ஷக்கணக்கில் மாணவர்களை ஹிந்தி  பயிலவைக்கும்  பிரச்சாரத்தை விட்டு விட்டு,மத்திய அரசுபள்ளிகள், கல்லூரி என்பதில் ஈடுபடுகிறது.முழு நேரத்தில் ஹிந்தி பிரசாரம் செய்தல் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான்.
ஆனால் ப்ரசாரர்களிடமும் ஒற்றுமை இல்லை.
அங்கும் தேர்தல்.வழக்கு.ஊழல். வேலை நிறுத்தம் அனைத்தும்.
எப்படியோ  நான் வளர்ந்தது,ஒரு சமுதாய அந்தஸ்து பெற்றது,உலகப் புகழ் பெற்ற ஹிந்து மேல்நிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியராக ஒய்வு பெற்றது  எல்லாம் ஹிந்தியால் தான்.ஆனால் எனக்கு தமிழார்வம் அதிகம்.
தாய் மொழி தெலுங்கு.படித்தது வளர்ந்தது,ரத்தத்தில் கலந்தது தமிழ்.வருமானம் ஹிந்தி.
ஆகையால் பல மொழி அறிவு வாழ கைகொடுக்கும்.




மன சாட்சி உள்ள அரசியல் வாதிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:

  வேளச்சேரி சாலை குண்டும் குழியுமாக 
பத்துபேருக்குமேல் 
இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் 
படுகாயம்.


மக்களுக்காக மக்கள் ஆட்சி.


நாட்டில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

ஆனால் ,
சிலர் மற்றவர்களை ஏமாற்றி மகிழ்கின்றனர்.
அதில் ஏற்படும்  மகிழ்ச்சி ,
கம்பீரமாக  மேடை போட்டு  சொல்லமுடியுமா/?
கோடிக்கணக்கில் பணம்
வரிகட்டா பணம் வெளிநாட்டு வங்கியில்
சேமிக்கப்பட்டுள்ளது என்பதை
அலங்கார  மேடையிட்டு
அகங்கார  தலைவர்கள்
 முழங்க முடியுமா?
மன சாட்சி  உள்ள  அரசியல் வாதிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:
ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் பொதுமக்களும்  சாக்கடை ஓடும் 
சாலையில் நடக்கின்றனர்.
அந்த சாலை பராமரிக்க பணமில்லை.
 அண்ணா வளைவு கலைஞர் வைத்தது என இடித்து பின்னர் எம்.ஜி.ஆர். திறந்தது என அறிந்து மீண்டும் நிலைநாட்ட கோடி.
சமாதி புதுப்பிக்க  கோடிகள் .
கண்ணகி சிலை இடிக்க ,மீண்டும் வைக்க கோடி .
ஆனால் ,வரி  செலுத்தும்  மக்களுக்கு 
சாலை இல்லை.
குடிதண்ணீர் இல்லை.
மின்சாரமில்லை.
மன்னராட்சியில் தான் ராஜ தர்பார்.
மக்களாட்சியிலுமா  இப்படி/?
மக்களின் வரிப்பணம்
 மக்களின் நன்மைக்கே.
அரண்மனைகட்டவும்,அந்தப்புரம் கட்டவும்  அல்ல.
தலைமைச் செயலகம் மாற்றம்.
துக்ளக் தர்பாரா?
கோட்டூர்புரம்   நூலக மாற்றம்.
எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு,
வரிப்பணம்.
மக்கள் ஏமாளிகள்.
தலைவர்கள் இரக்கமற்றவர்கள்.
மடிப்பாக்கம் சாலைகள் 
பள்ளி செல்லும் குழந்தைகள்  படும் அவஸ்தை.
பாதாசாரிகள் படும் அவஸ்தை.
சுகாதாரக்கேடு.
இதற்கெல்லாம் 
நடவடிக்கை இல்லை.
குப்பை;நாற்றம்;
மகிழ்ச்சியில்லா மக்களின் வரிப்பணம் 
மன சாட்சி இல்லாமல் 
பணப்பெட்டிக்காக.
மரணம் நிச்சயம்.
இயற்கையின் சக்திக்கு 
பயந்து  கிடைத்த பதவியை 
மக்களின் நன்மைக்கு 
பயன் படுத்துங்கள்.

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2012,03:36 IST
சென்னை;மடிப்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னை புறநகரின், பல பகுதிகளில் மீண்டும் பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது "டெங்கு'வாக இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
மடிப்பாக்கம், பெருங்குடி, உள்ளகரம் - புழுதிவாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை உள்ளிட்ட, பல பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை வசதியில்லை. பல இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் சங்கமிக்கிறது. இந்த சுகாதார சீர்கேட்டால் அப்பகுதியில், கடந்த மாதம் பலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. மடிப்பாக்கம் பகுதியில் இரு குழந்தைகள் உட்பட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு "டெங்கு' காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை எடுத்து குணமடைந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களில் மீண்டும் அப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் தலைகாட்டியுள்ளது. துரைப்பாக்கம், சூளை மாநகர், முதல் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் மீனா, 5.இச்சிறுமி, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள, ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கிறாள். இவளுக்கு கடந்த சில நாட்களாக, தொடர் காய்ச்சல் இருந்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஒரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறாள். இச்சிறுமிக்கு "டெங்கு' காய்ச்சலாக இருக்கலாம், என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இச்சிறுமி போல பலர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்சென்னை புறநகர் பகுதிகளில், சுகாதார துறையினர், தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.