தியானம்
தியானம் மனிதனை தெய்வமாக்குகிறது.
மனிதன் விலங்கினின்று தோன்றியவன்
.அவன் பால் விளங்கியல்புகள் மலிகின்றன.
அம்மலிவு சுருங்கி அருகுதல் வேண்டும்.
இதற்கு வழி தியானம்.
என்று திரு வி.கல்யாணசுந்தரம் வழிகாட்டுகிறார்.
தியானம் மனிதனிடத்துள்ள விலங்கியல்பைக் களைய வல்லது.
புற மனத்தை ஒடுக்கி , நடு மனத்தை எழுப்பி ,அடிமனத்தை விழிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
தியானம் மனிதனை அமைதித் தெய்வமாக்கும்.
தியானத்திற்கு ஒரு கொழுகொம்பு தேவை.
அக்கொழு கொம்பு விலங்கியல்பைப் பெருக்குவதே.
கருவி காரணங்களை எரிப்பததாய் ,
மூர்க்கத்தை வளர்ப்பதே இருக்கக்கூடாது.
அக்கொழு ,மனத்தைப் பண்படுத்துவதாய்,
அன்பை விளை விப்பதாய்
அமைதியை ஊட்டுவதாய்,
இருத்தல் வேண்டும்.
அதுவே பரம்பொருள்.
வாழ்க்கை வழி.
திரு வி.கல்யாணசுந்தரனார்.