சனி, ஜூன் 01, 2013

பழையன கழிதல் ,புதியன புகுதல்,

கூட்டுக் குடும்பம்  ஆனந்தமே!-ஆனால்

இன்றைய இளம் தலை முறையினர் ,

கல்வியில் முதுகலைப்பட்டம்.

ஆனால் , பொறுமை என்பதே 

மழலையர்    பட்டம்.

பிடிவாதம் ,படித்த செருக்கு 

வேலை நல்ல ஊதியம்.

உறவினர்களுக்கு உதவுவதை விட 

பெற்றோர்களுக்கு சிலவு செய்வதை விட ,

சொந்த தம்பி தங்கைக்கு உதவு வதைவிட,

ஐந்து நக்ஷத்ர ஹோட்டல் ,

ரிசார்ட்  ஆடம்பர சிலவில் 

ஆனந்தம்.

தனித்து வாழ்ந்து  தன குழந்தைகளை ,

மழலையர் காப்பகத்தில் மாதம் ஐயாயிரம் 

சிலவளித்து     ,பெற்றோர் உறவினர்களை 

அரவணைக்காமல் ,தனி ஆனந்தம்.

விளைவு   காதல் ,விவாகரத்து, பிரிந்து  வாழ்தல்,

புரியாமல் வாழ்தல்  இன்றைய இளம் தலைமுறையினரின் 

வாழ்க்கை வினோதம்.

அனைவருக்கும் வேலை,ஆணும் பெண்ணும் 

சம்பாதிப்பதால் வருமானத்திற்கு குறைவில்லை.

சந்தோஷம் என்பது தான் வெளிவேஷம்.

வீடு பெரிது.உள்ளத்தில் ஒரு வெற்றிடம்.

அனைத்தும் இருந்தும் 

no  peace  of mind  தான்.

நிமிடத்திற்கு  ஒரு சண்டை,

ஒரு நொடியில் சமாதானம் 

இல்லையேல் தனித்து பிரிந்த வாழ்க்கை.

அல்லது மறுமணம்.//.விவாகரத்து.

பொருந்தாக் காதல்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.

என்ற விபரீதம்.

கல்வி அறிவு பெருகுவததென்பதில் 

பண்பாடும்  காக்கப்படவேண்டும்.

பொறுமை,தியாகம் ,குடும்பபாசம்,

இல்லா உயர்கல்வி 

தேசபக்திக்கும் ஊறுவிளைவிக்கும்.

இளைய தலைமுறையினர் பிரிந்து வாழும் சூழல் 

இயற்கையாகவே அமைந்துவிட்ட நிலை.

அண்ணன்,தம்பி வெவேறு நாட்டில்,

பெற்றோர் பாடு பெரும்பாடு.

என் குழந்தைகள் வெளிநாட்டில்,

வீடுகள் இருக்கின்றன.

விருந்தினர்கள் வருவதில்லை.

விடுமுறை இல்லை.

ஓரிருநாட்கள் விடுமுறை 

ஓய்வுக்காக.

இன்றைய தலை முறையினருக்கு 

வரப்பிரசாதம் 

வலை தளம். மின் அஞ்சல் 

சந்திப்பு ;பேச்சுவார்த்தைகள்.

அதற்கும் நேரம் வேண்டும்.

இந்தியா போன்ற நாட்டில் 

மின் தட்டுப்பாடு,வலைதள சேவை 

இல்லாத ஊர்கள்.

மடிகணினி இலவசம்.

ஆனால் அதை பயன்படுத்த முடியா நிலை.

இருப்பினும் தொலை தொடர்பு 

கைபேசி மூலம்.

இன்றைய தலைமுறையினரின் 

மகிழ்ச்சி ,நிம்மதி,சந்திப்பு ,பேச்சு எல்லாமே 

கைபேசி. அறிவியல் விந்தை.

மூத்த குடிகளின் முணுமுணுப்பு.

என்னடா வாழ்க்கை. 

இளைய தலைமுறையினருக்கு 

இணையில்லா ஆனந்தம்.

பழையன கழிதல் ,புதியன புகுதல்,

இதுவே இன்றைய தலைமுறை ஆனந்தம்.