நமது நாட்டில் தெய்வ நம்பிக்கை
அதிகம் இருப்பது நல்ல விஷயம் என்றாலும்
,அந்த நம்பிக்கை சுயநலத் தோடு
பொதுநலம் குறைந்து காணப்படுகிறது.
நம் நாட்டின் வரலாற்றில் மக்கள் நலத்தைவிட
மன்னர்கள் தங்கள் நலத்தைத்தான் பாதுகாக்க
மாடமாளிகைகளும்,சமாதிகளும்
கட்டிவந்தனர்.
மக்கள் நலமாக வாழ அனைத்துத்தரப்பு
மக்களும் முன்னேற வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
கல்வி அனைவருக்கும் தர முன் வரவில்லை.
சிலரை அடிமைத் தொழிலுக் காக
அறியாமை என்ற சமுத்திரத்தில்
மூழ்கி இருக்க முழு முயற்சி செய்தனர்.
அதன் விளைவு
நமது நாட்டு இந்துக்ககள் மதம் மாறிய அளவுக்கு
எந்த நாட்டிலும் ஏற்பட்டதில்லை.
நம்நாட்டில் செல்வம் இன்றும் குறையவில்லை.
ரோடுகள் மேடுபள்ளமாக இருந்தாலும்,
ஏரிகள், குளங்கள் தூர்வாரி நீர் சே மி க்காவிட்டாலும்
வளைவுக்கு ஒருகோடி,
சிலைஎடுக்க,வைக்க
சில பகுதிகளில் மட்டும் சாலைகள் மீண்டும் மீண்டும்
பராமரிக்க
கோடிக்கணக்கில் பாழடைந்து கிடக்கும் கட்டிடங்கள் கட்ட
பணம் இருக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் இடங்களில் சாலைகள் அமைக்க
முடியாது.
வாழ்க பாரதம்.