ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

வாழ்க ஜனநாயகம்.-varippanaththil kaioottu.




நாட்டிற்கு  விடுதலை,
இன்றும்
நடைபாதை வாசிகள்,
குடிசை வாசிகள்,
சமத்துவபுரம்
நாட்டின் ஒதுக்குப்புரத்திலே.
அவர்கள் ஏழைகள்.
பணிபுரிய வர  நடக்கமுடியும்.
நகரப்பேருந்தில் தொற்றிக்கொண்டு,
உயிரைப்பணயம் வைத்து
பயணம் செய்யமுடியும்.
ராஜமார்க்கம் இன்றி.
மழைநீர் சேற்று நீரில் நடக்கமுடியும்.
மின்சார மின்றி சம்சாரம் நடத்தமுடியும்.
அவர்களுக்கு  மின்விசிறி ,
மிக்சி,கிரைண்டர்,
எதற்கென்று தெரியுமா?
ஒட்டுப்போட்ட  நன்றிக் கடனுக்கு.
நவராத்திரி கொலு போம்மை போல்
அடுக்கிவைத்து
அவசர ஆத்திரத்திற்கு ஈனக் கிரயத்தில்
விற்று வயிறு வளர்ப்பதற்கு.
கட்சி
வளம்  பெற,
வரிப்பணத்தில் கொடுக்கும் நேரடி கை ஊட்டு.
இலவச மிதி வண்டிகள்
நகர மாணவர்கள் விற்க பள்ளி அருகிலே தரகர்கள்.
தொலைக்காட்சிபெட்டிகள்,
பார்ப்பதற்கு மின் சாரமில்லை.
விற்றால் டாஸ்மார்க்  இன்ப பானம் அருந்த.
தாலி  மெதுவாக விலைபோகும்.
அடுத்த தேர்தல் கை ஊட்டுக்கு
என்ன இலவசமோ?


,குடிநீர் வசதிசெய்ய  இயலா   அரசு,
ஏழைகள்  வசதியாக வாழவைக்க
விரும்பா அரசு.
கல்விச்சாலைகள் இலவசமாக திறந்து வைத்து,
அவைகளை தரமில்லாமல் செய்து,
தனியார் தான் அனைத்தும்  என்று
கறுப்புப் பணத்தால்
ஆடம்பரமாக வாழும்
கருணை அற்ற அரசு.
இதைப்புரிந்தும்  அவர்களுக்கு விலை போகும்
மக்கள்.
வாழ்க ஜனநாயகம்.



வாழ்க ஜனநாயகம். பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை


நம்  மக்கள் நாட்டு நலம் சிந்திக்கும்  காலம் 


நம் நாடு விடுதலை  அடைந்து   67 ஆண்டுகள்  ஆகியும்  
மக்களிடம்    விழிப்  புணர்ச்சியும்  நாட்டுப் பற்றும் 
கடமை உணர்வும் நேர்மையும் 
பண்பாடும் கலாச்சாரமும் 
குறைந்து கொண்டே வருகின்றன.
இதை அறிவு வளர்ச்சியின்  முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.
பட்டங்கள்  பெறுவது பண்புகள் வளர.
நாட்டுப்பற்று வளர.
நாட்டின் மதிப்புகள் வளர.
ஆனால் 
புற ஆசைகள்  வளர 
ஜன நாயகம்  பண நாயகமாக மாறுகிறது.
நான் குழந்தையாக இருக்கும் போது  
தவறு செய்பவர்கள் வெறுக்கப்பட்டனர்.
அப்பொழுது படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு.
எனது ஆசிரியர்  வறுமையில் வாடினார்.
தனி வகுப்புகள்  கிடையாது.
இன்று தனிவகுப்புக்கு அனுப்பினால் தான் 
பெற்றோர்கள்  திருப்தி அடைகிறார்கள்.
மழலைப் பள்ளியில் இருந்து 
உயர்கல்வி வரை பணம்.
அவன் கெட்டிக்காரன் .
பதிவாளர் அலுவலகத்தில் பணி .
பணம் கொட்டுகிறது.
அவன் காவல் துறை.அவனுக்கு வசூல் தான்.
அவன் சட்டமன்ற உறுப்பினன்.
இவன் பாராளுமன்ற உறுப்பினர்.
கோடிக்கணக்கில் தேர்தல் சிலவு.
தொகுதி சீட்டு வாங்க கட்சி தலைமைப் பீடத்திற்கு 
மட்டும்  கோடி.
நாட்டுப்பற்று நா நயம் என்பது 
நாணயமாக மாறிவிட்டது.
ஊழல் ,கொலையாளிகள் பலர் 
பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் .
நாடு முன்னேறுகிறது.
வேலைவாய்ப்புகள் பெரு குகிறது.
ஆனால் 
சமுதாயம் அமைதி இழக்கிறது.
மின்சாரம் இல்லை.
விலைவாசி உயர்கிறது.
கொலை கொள்ளை ஊழல் அதிகரிக்கிறது.
அடுத்த தேர்தலுக்கு  கோடிக்கணக்கில் 
பணம் சேருகிறது.
மீண்டும் ஜனநாயகம் 
ஜீவிக்கிறது.
கோயில் நிலம்.புறம் போக்கு நிலம் விளைநிலம் 
விலை போகிறது.
பட்டதாரிகள் எண்ணிக்கை  கூடுகிறது.
ஊழலை எதிர்த்து போராட்டம் செய்யும் 
குழுவிலும் ஊழல் தெரிகிறது.
அங்கிருப்போரின்  பேரிலும் 
ஆளும் கட்சியினரின் பேரிலும் ஊழல் அறிக்கை/
பல ஊழல் தலைவர்களின் கூட்டணி ஆட்சி 
தொடர்கிறது.
ஜனநாயகம்  கூட்டணி என்ற போர்வையில் 
ஊழல்  நாயகர்கள் சேர்ந்து 
புதிதாக மலர்கிறது.
வாழ்க ஜனநாயகம்.
பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை 
என்பதை நிர்ணயிக்கிறது.





வாழ்க ஜனநாயகம்.


மக்கள்   நலம் 

மக்கள் நலம் விரும்பும் மக்கள் பிரதிநிதிகள்
  ஒரு புதிய குடி இருப்பு 

உருவாகும் பகுதியில்
  உடனடியாக சாலை வசதிகள்,
குடிநீர் வசதிகள்
 மின் மின் வசதிகள் 
,சுகாதாரம்,கழிவுநீர்  வெளியேறும் வசதிகள் போன்றவற்றை 
செய்ய முழு முயற்சி எடுக்கவேண்டும்.

வரிகள் மட்டும் வாங்கி சிலை வைக்க ஒரு அரசு சிலவு செய்கிறது.
அதற்கு சில லக்ஷங்கள்.
மற்றொரு அரசு சிலை எடுக்க சில லக்ஷங்கள் 
சிலவு செய்கி றது.
ஐந்தாண்டுகளுக்குப்பின் மீண்டும் சிலை வைத்த அரசு 
ஆட்சிக்கு வருகிறது.
மீண்டும் சிலை வைக்க சில லக்ஷங்கள் சிலவு செய்கிறது.
இது எல்லாம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சுகாதாரமற்ற 
பகுதிகளில் வாழும் மக்கள் வரிப்பணம்.
சமாதிகள் புதுப்பிக்க லக்ஷக்கணக்கில் பணம்.
குடை வைத்த சிலவு,
குடை அகற்றி சீர் படுத்த சிலவு,
ஆயிரக்கணக்கில் மக் கள்   செல்லும்  சாலைகள் 
மேடு,பள்ளம் ,கழிவு நீர் ஓடும் சாலைகள்,
உண்மையில் ஜனநாயகத் தலைவர்கள் ஆத்மா  ஷாந்தி அடையுமா?
ராம்நகர் வாசிகள்,குபேர் நகரவாசிகள் எவ்வளுவு வேதனை உடன் வாழ்கிறார்கள்.
நாடு வளம் பெற மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும்.
ஒருபகுதியில் பூங்காவிற்கும் சாலைக்கும் அழகுபடுத்தி, 
ஒருபகுதி மக்களை குண்டும் குழியும் சாக்கடை நீரும் உள்ள பகுதியாகவைத்து.
ஓட்டுமட்டும் பெரும் அரசுக்கும் 
ஜனநாயகம் என்ற பெயர்.
சட்ட மன்றம் மாற்ற,மீண்டும் மாற்ற, இடிக்க, கட்ட சிலவு.
அடிப்படைவசதியில்லாப் பகுதி அப்படியே .
கழிவுநீர் ஓடும் துர்நாற்றத்துடன்.
வாழ்க ஜனநாயகம்.
மக்கள் ஒருநாள் விழித்தெழ 
பகுத்தறிவு வேண்டும்.
ஆயிரக்கண க்கில் வாழும் குடி இருப்பு 
பகுதி மக்கள்   தங்கள் அடிப்படை வசதிக்குப் 
போராடவேண்டும்.
சுதந்திர நாட்டில் மீண்டும் வரிகொடா இயக்கம் வேண்டும்.

வரி வசூலிக்கும் அரசு தண்ணீர் விநியோகம் செய்யாமலேயே 
தண்ணீர் வரி வசூலிக்கிறது.
மன சாட்சி இல்லா, அரசு,அமைச்சர்கள் .அதிகாரிகள்.
இதைக்கேட்கத் தயங்கும் மக்கள்.
மன்னர்கள் காலத்தில் மன்னர்கள் சுகபோக வாழ்க்கை.
ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள்.
வாழ்க ஜனநாயகம்.