அன்பும் அறிவும் ஆற்றலும்
நேசமும் பாசமும் தானமும்
தர்மமும் தியாகமும் பற்றற்ற
தன்மையும் பணிவும்,பொறுமையும்
சாந்தமும் சஹிப்புத்தன்மையும்
பரோபகாரமும் தன்னலமற்ற
எளிய வாழ்க்கை முறையும் ,
ஆடம்பரமற்ற தன்மையும்,
ஆத்மதிருப்தியும் அஹிம்சையும்,
விருப்பமும் வெறுப்பும் அற்றநிலை ,
ஆசை -பேராசையற்ற நிலை,
இன்னா -இனியவை யில் நடு நிலை
ஆன்மீக மார்க்கம்.
ஆனால் இன்று
ஆன்மீகத்தில் ஆடம்பரம் ,
ஆஸ்திகள் இல்லை என்றால்
ஆஷ்ரமங்களில் இடம் இல்லை.
தங்கமும் வைரமும் வைடூரியமும் ,
கோடிக்கணக்கில் பணமும்
பதுக்குமிடங்கலாகவும் இருக்கின்றன .
பத்துக்கும் செல்வங்களால் யாது
பயன்.
ஆயிரக்கால் மண்டபங்களும் ,அழகுசிற்ப மண்டபங்களும்
கடைகளால் மறைக்கப்பட்டு
வணிக ஸ்தலங்களாக மாறும் நிலை.
லௌகீகமா அலௌகீகமா என்றால்,
லௌகீகமே பிரதானம்.
வழிபாடு ஐந்து நிமிடம் ,
கடைத்தெருவில் ஐந்துமணிநேரம் .
கடவுளின் கருணை கிட்டுமா?
உள்ளத்தில் சஞ்சலம் தீருமா?
உடல் ஆரோக்கியம் பெறுமா?
உள்ளம் அமைதி பெறுமா?
வாழும் கலை மறந்து,
பொருளாசை வளர்க்கும் மையமாக
மாறும் வணிகஸ்தலங்கள்
ஆலயங்கள் என்றால்
ஓம் ஓம் ஓம்
சாந்தி !சாந்தி!சாந்தி !
எங்கே?எங்கே?எங்கே?