புதன், ஆகஸ்ட் 29, 2012

ஜனநாயகம் வாழ்கிறது.


எங்கும் ஊழல்,லஞ்சம் என்பதே பேச்சு,
அதைவளர்ப்பதே அரசின் மூச்சு.
கல்விச் சாலையில் 
ஊழல் வளர்ப்போம்.
கல்லறையிலும் 
ஊழல் வளர்ப்போம்.
ஊழல் பணத்திலே 
ஆட்சி அமைப்போம்.-அந்த 
நீதிபதிக்கும் லஞ்சம் கொடுப்போம்.
நீதி தேவனுக்கு சமாதி கட்டுவோம்.
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுத்த 
மக்கள் பிரதிநிதிகள்.
அதிகாரம் பெற்றுவிட்டோம்.
கல்குவாரி பதினெட்டு 
நூறு கோடி,
ஸ்பெக்ட்ரம் ஊழல் 
பல கோடி.
சுடுகாட்டு ஊழல்.
பிச்சைக்கார அட்டை ஊழல்,
அனைவரும் 
சேரும் இடம் ஒன்றென்றாலும்,
ஓட்டுப்போடும் 
மக்கள் போடும் ஓட்டில் 
எத்தனை தில்லுமுல்லுகள்.
நான் ஒட்டுப்போடசென்றேன்.
என் ஓட்டுப்போடப்பட்டு விட்டது,
என்று  புலம்புவோர் 
எத்தனைபேர்.
இத்தனைஊழல் 
அத்துணை பேரும் 
அறிந்த ஒன்று.
ஆனாலும் 
பாரதத்தில் ஜனநாயகம் வாழ்கிறது.
அமைச்சர்கள்,உறவினர்கள் 
வாழ்கிறார்கள்.
அதிகாரம் பெற்றவர்கள் 
வாழ்கிறார்கள்.
அதனால் 
கிரிக்கட் ஊழலில் வாழ்வதுபோல்,
ஜனநாயகம்  
வாழ்கிறது.