பெரியவர்கள் சொன்னார்கள்,
ஆங்கிலேய ஆட்சி
இந்தியர்களை இணைத்தது என்று.
இந்தியர்கள் இந்திய மொழியால்,
இணைந்தது என்று ,
இராமாயணம்,மகாபாரதம்,
சிவன்,விஷ்ணு,கணேஷன்,முருகன்,-அனைத்து
ஆன்மிகம் ,
சமணம்,ஜைனம் இணைத்தன -என்றாலும்
சிந்தனை செய்ததில்,
அந்த ஆன்மிகம் இணைக்கவில்லை.
காரணம் வடமொழி உச்சரிப்புக்கு ,
மகத்துவம் அளித்து,
அக்ஷரம் தப்பினால்,
அபசாரம் என்றது.
மனித வர்கத்தின் நாலில்
மூன்று பங்கை
அறியாமையில்
அழுத்தியது.
இன்று,
ஆங்கிலப்புத்தாண்டில் ,
வாழ்த்துக்கள்
எங்கிருந்தோ
எல்லாம் வருகின்றன.
தமிழ் புத்தாண்டு சர்ச்சையில்,'
சிக்கி இரண்டு பட்டு,
தை,தை என்றும்,
சித்திரை ,சித்திரை என்றும்,
நித்திரையில்.
சிரிப்புக்கும்,வேற்றுமைக்கும்
வழிகாட்டி சைவம்
வைணவம் போல்,
வடகலை
தென்கலைபோல்,
நாமம்
பட்டைபோல்,
சீமைச்சரக்கு,
நாட்டுச் சரக்குபோல்,
மமதையில்,போதையில்,
தள்ளாடுகிறது.
நாட்டின் முன்னேற்றத்தில்.
இவைகளும் தடையோ என,
எண்ணத்தோன்றுகிறது.
ஆங்கிலப்புத்தாண்டு ,
அறிவுமிக்க இன்றைய ,
இளையர்களை ஈர்ப்பதில்,
தன்னிகரற்று விளங்குகிறது.
யதார்த்த நிலைதான்.
,
நம் தலைவர்கள்
தாய்மொழி பேசி,
வேற்றுமை
விதைக்கின்றனர்.
ஆங்கிலம்
ஆன்மிகம் வளர்த்து,
ஆடம்பர இவ்வுலக
வாழ்க்கைக்கு,
பொருளாதாரம்
தந்து,
பொருளுள்ள வாழ்க்கை,
பாரில் தருகிறது.
பார்த்தேன். சிந்தித்தேன்.
ஆங்கிலப்புத்தாண்டு வரட்டும்.
வாழட்டும் .
தமிழக தலைவர்களின்
ஆணவம்,
வேற்றுமைகள்,
செய்த
சிலவையே
கண்ணகி சிலை வைத்தல்
அகற்றுதல்
சிறு உதாரணம்.
இன்றைய பெண்ணினம்
கண்ணகியை விரும்பவில்லை.
கட்டிய மனைவியை
கண்ணீரில்,
மூழ்கடித்து,
நாட்டிய மங்கை, ,
மயக்கத்தில்,
பொருளிழந்து,
வறுமையில் வந்த,
கணவனுக்காக,
மதுரையை அளித்த,
ஆணாதிக்கம்.
இன்றைய இளம்பெண்கள்,
கற்பென்னும் பேரில்,
பெண்களை துயரில்
அமுக்கும் போக்கை
மாற்ற நானும் ,
கணவனை விட்டு,
அழகிய காளையுடன் சென்றால்,
என்ற பகுத்தறிவு சிந்தனை,
ஏற்குமா ஆண்மை.
பொதுமக்கள் பணம்,
நெஞ்சு பொறுக்கவில்லை.
ஆங்கிலம் இன்றைய ,
இளைஞர்களுக்கு,
சுவர்க்கம் தான்.
அதனால் தான்
இன்று பட்டாசுகள் ,
கேளிக்கைகள்,
கும்மாளங்கள்.
தமிழ் புத்தாண்டு
மறக்கும் காலமா/?
மறக்கும் காலமா/?
போர்க்களமா?!1
பொறுத்திருந்து
பார்ப்போம்.
பார்ப்போம்.