வேங்கடவன் துணை இருக்க,
வேதனைகள் அகலுமப்பா?
வேலனுக்கு மாமன் அவன்,
வேண்டுவோருக்கு துணைவன் அவன்.
வழிக்குத் துணை அவன்
வாழ்வின் மேன்மைக்குத் துணைவன் அவன்.
இறைவன் ஒருவனே என்றாலும்,
இந்நில வுலகில்,
அவன் தோற்றம்
அங்கிங்கெனாதபடி
பல வடிவம்.
கணபதி என்றொரு இறைவன்.
அவன் தம்பி கார்த்திகேயன்,
அவன் தந்தை சிவன்.
அன்னை பார்வதி.
கல்விக்கு
கலைமகள்.
செல்வத்திற்கு அலைமகள்.
வீரத்திற்கு
மலைமகள்.
என்றெல்லாம்
தெய்வப்பெயர்கள்.
அல்லா என்பர்.
எப்பெயர் சொன்னாலும்,
ஏற்றம் தரும்.
நம்பினோர் கெடுவதில்லை.
நான்கு மறை தீர்ப்பு.
அதனால் தான்
அனைத்து ஆலயங்களிலும்
அலைமோதும் கூட்டம்.
ஆன் மீகபயம்,
அகிலத்தில் உண்டு.
தெய்வம் இல்லை என்றோரும்
தேவன் ஒருவனே என்ற மாற்றம்.
நாத்திக முத்தையா
ஆத்திக கண்ணதாசனாக.
காமுகன் அருணகிரி ,
திருப்புகழ் அருங்காவியக்
கலைஞராக.
மனைவியைப் பிரியா ,
துளசி தாசர் ,
ராமச்சரிதமாநாசம்
படைத்தவராக.
மனிதக் காதல்,
தேவதாசனாக;
அனார்கலி -சலீமாக;
அம்பிகா பதி அமராவதியாக
சோகக்கதைகள்.
பைத்தியமாக அலைவதுதான்
மிச்சம்.
இந்த கிகிளுப்புக்காக
பட்டி மன்றங்களும் இப்படி.
கல்லுரிகளும் இப்படி.
திரைப்படங்களும் இப்படி. சமுதாயமும் இப்படி.
பட்டு அறியும் போது ,
படபடப்புதான் மிஞ்சும்.
பட்டறிவாளர் சொல்வது கேட்டால்,
பண்பும் அறிவும் வளரும்.
அறிவும் அமரத்துவமும் வேண்டுமா ?
கடவுளை வேண்டுங்கள்.
மன அமைதி வேண்டுமா
இறைவன் மேல்,
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவீர்.
கல்லூரியில்,
படிப்பில் தோல்வி உற்று,
உயர் படிப்பிற்கு
வழி இன்றி
பெற்றோருக்கு பாரமாக,
மனச்சுமையுடன்,
இருக்க வேண்டுமென்றால்,
மனிதக் காதலில் ,
கன்னியின் பெற்றோரையும்
கலங்க வையுங்கள்.
மன அமைதிக்கு இறைப்பற்று.
மன வேதனைக்கு சதைப்பற்று.
ஆறறிவு படைத்தோரே,
ஆண்டவன் காதலா? மனிதக் காதலா?
சிந்திப்பீர்!! செயல் படுவீர்!!