கோடீஸ்வரன்.
கூடிக் கூடி
வாக்கு வாங்கி
கோடிக்கோடி
சேர்த்து
மக்களை மடையர்களாக்கும்
மக்கள் தலைவர்கள்.
மாயோனின்
பேரைச்சொல்லி
மக்களை
மயக்கி
கோடிகோடியாய் சேர்க்கும்
சுவாமிஜி கள் .
கோடிக் கோடி
சேர்க்கும்
ஆலயங்கள்
இத்தனை
இருந்தும்
நடைபாதைவாசிகள்,
பட்டினி பட்டாளம்.
கொலை .
கொள்ளை.
கோடி சேர்த்து ஊழல்
செய்தாலும்
நீதி அவர்களுக்கு
சாதகம்.
தண்டனை இல்லை.
இறை வா !!
நீ இருப்பது
மெய்யானால்
மேதினியில்
நல்லோரை வாழ விடு.
நலிந்தோரை
வாழ விடு.
மந்திரிகளை,
ஊழல் செய்வோரை,
கையூட்டு
பெறுவோரை
கலக்கத்தில்
ஆழ்த்திவிடு.
என் வீட்டிற்கு
லஞ்சம் தராததால்
மாநகராட்சி
தண்ணீர் இணைப்பில்லை.
உண்மை
உறங்கினால்
பெரியார் தொண்டர்கள்
தான் அதிகம் ஆவார்கள்.
அ ராஜகம் அதிகரிக்கும்.
கொலைவெறி தலை தூக்கும்.
தர்மம் தலை தெறிக்கும்.
இறைவா!!