புதன், மே 08, 2013

ஆடம்பர பக்தி என்பது முக்திக்கு வழி இல்லை.

  மனித அறிவு  என்பதை  நம் முன்னோர்கள்

,ரிஷிகள் நன்கு ஆராய்ந்து

நமக்கு விளக்கி மெய்ஞானத்தைக் காட்டினர்

. ஆனால் நாம் இந்த உலகில் கிடைக்கும் சுகம் தான்

 பெரிது என்று நினைத்து பல துன்பங்களை  அனுபவித்து

துன்பங்களுக்கு இடையில் இன்பம் காண்கிறோம்.


எப்பொழுதும் இன்பம் அளிப்பதற்காகவே  ஆன்மீக அறிவு.

துன்பங்களை அனுபவித்துக்கொண்டே இன்பங்கள் தருவது


அறிவியல் அறிவு துன்பங்களுக்கு இடையில் இன்பங்கள் தருவதுபோல்

ஒரு மாயை. அது ஏன்? என்பதற்கு கபீர் தாசர் ஒரு விளக்கம் தருகிறார்.

அது என்ன?

 பெரிய பெரிய ஞானிகள் தரா  விளக்கம்

 என்று நமக்குத் தோன்றும்.

ஞானிகள் தரும் விளக்கத்தை படித்தோரும் படிக்கா தோரும் எளிதாக

புரிந்து தெளிவடையவே  எளிய விளக்கங்கள் தரும் சித்தர்கள்

பாடல்கள்;பாரதியார் போன்ற யுகக் கவிஞர்கள்.

சில திரைப்படப்பாடல்களும் மெய்ஞானத்தை விளக்குகின்றன.

  ஆனால் அனைத்துமதங்களிலும்  கூறும் ஒரு மாயை/,சைத்தான்,/சாத்தான்

உலகை ஆட்டிவைக்கிறது.

அந்த தீய சக்தியிலிருந்து வையத்தைக் காக்கவே ஆன்மிகம்;பக்தி மார்க்கம்.

எப்படிப்பட்ட அறிவியல் வாதிகளும்  இதை மறுப்பதில்லை.

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் ,

அவர்களால்  மரணம் என்று நாள் குறித்தோர்களில் சிலர் நீண்ட நாள்

உயிர்வாழ்வதும்,அவர்கள் ஆரோக்யமான நோயாளிகள் என்பவர்கள் மரிப்பதும்

அவர்களை  ஒரு தெய்வீக சக்தி இருப்பதை ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன.

           அறிவியல் என்பது ஜட அறிவு. அதில் மாற்றங்கள் பெருகிக்கொண்டே

இருக்கின்றன, தேவைகள் அதிகரிக்கின்றன.

பணத்தசைகள் பெருகு கின்றன.மனத்தாசைகள் பெறுகின்றன;

அவைகளால் ஆணவம்,போட்டி ,பொறாமை ,ஏற்றத் தாழ்வுகள் ,சண்டை

சச்சரவுகள் பெருகி வருகின்றன; அமைதி கெடுகிறது; இவை எல்லாம் உலகின் அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன.

ஆனால், பர அறிவு ,மெய்ஞானம்  என்பது சத்தியம்,நேர்மை,தியாகம்,பிறருக்கென வாழ்தல்,ஆணவத்தை அளித்தல்,
மனிதர்களிடம்  பரஸ்பர அன்பை ,பரோபகாரத்தை ,கோபத்தை,காமத்தை,

அடக்க வழிகாட்டுகிறது.

   ஆனால் இன்றைய ஆன்மிகம்,ஆஷ்ரமம்  லக்ஷ்மி தேவிக்கே முதலிடம் என்று  ஜட அறிவை வளர்க்கிறது.ஆஷ்ரமங்கள்,ஆலயங்கள்
பொன்னுக்கும் பொருளுக்கும் பிரதானத்தை அளித்து  பக்தி மார்கத்தை

மாசு படுத்திவருகின்றன.
குரு  என்பவர் இன்று ஆசிரியர் என்று மாறி  வணிகர்களாகி வருகின்றனர்.

பள்ளிகள் என்பது வணிக ஸ்தலங்களாகவே  மாறிவிட்டன.

ஒரு மூன்று வயது குழந்தையை பள்ளியில் சேர்க்க பெற்றோர் படும் பாடு

கல்வி   என்பது எவ்வளவு உயர்வானது;நாட்டிற்கு எவ்வளவு இன்றி

அமையாதது   ஆனால்  இன்று  ஆசிரியர் பயிற்சி பட்டம் வாங்கிய

நான்கு லக்ஷம் பேரில் தகுதி உள்ளவர்கள்  ஆயிரத்திற்கும் குறைவு.


 இதைத்தான் கபீர் தாசர்

உண்மையைச் சொன்னால் நம்புவோர் இல்லை;

பொய்யை நம்புவோர் ஏற்போர் அதிகம் ;

பால் வியாபாரி தெரு தெருவாக சென்று விற்கிறான்

மது வியாபாரி ஒய்யாரமாக அமர்ந்து விற்கிறான்;

எவ்வளவு உயர்ந்த கருத்தை எவ்வளவு எளிமை படுத்தி உள்ளார்;

நல்லது என்பது  பிரச்சாரப்   பொருள்;

தீமைகள் பிரசாரமின்றியே பெருகுபவை;

  ஆலயங்களிலும் இன்றைய ஆலயங்கள் ஒரு வணிக ஸ்தலம்;

அங்கு மெய்ப்  பொருளுள்ள பக்தர் களுக்கு   முதலிடம் இல்லை;

கைப்போருளுள்ள பக்தர்களுக்கு முதல் மரியாதை.


இதனால் பக்தர்கள் மனதில் பக்தியை விட,

பர அறிவை விட ஜட அறிவே வளர்கிறது.

இது மக்களுக்கு இன்னல் ,அமைதி இன்மை ,ஆணவம்,பொறமை,,குரோதம்

விரோதம்  தரக்கூடிய பக்தி.

இதற்காகவே  வியாசர்  தன குரு கீதையில்:

शिलाया किम परम ज्ञानं  शिलासंघः प्रतारानः

स्वयं  तर्तुम  न  जानती परम निस्तारयेत  गतम ;

 கல்லால் இறைஞானம் பெறமுடியுமா/

கல் தன்னாலே இயங்க முடியுமா?

கல்லில் வைக்கும் அன்பு ஏமாற்றமே.

சிவவாக்கியர்:

நட்ட கல்லை தெய்வ மென்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றிவந்து  முணுமுணுத்து சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?

************
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை,
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கடந்த பின்

வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்,

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே;


அகஸ்தியர்:

சொல் பிறந்த இடமெங்கே?முப்பாழ் எங்கே?

துவார பாலகரெங்கே முதற்பாழ்   எங்கே?

நல்ல சங்கு கத் எங்கே?வைகுண்டமேங்கே?

நாரணனும் ஆலிலைமேல் துயின்ற தெங்கே?

அல்லல் படும் ஐம்பூத  ஒடுக்கமேங்கே?

ஆறைந்து இதழிரெண்டு முளைத்த தெங்கே?

சொல்லவல்லார்

 உண்டானால்  அவரை நாமும்

தொழுது குரு எனப் பணிந்து  வணங்கலாமே?



திருக்குறள்;

பெறுமவற்றுள்  யாமறிவதில்லை  அறிவறிந்த
மக்கட் பேறல்ல  பிற.


 பர அறிவு என்பதை சிறந்த குருவால் தான் அளிக்க முடியும்.

இறைவனைக் கண்டதாகக் கூறுவோர்  உணர்ந்து அதன் மூலம் எளிய பக்தியைக்  காட்டுவர்.

சுவாமி விவேகானந்தர்  பக்திக்கு முதலிடம் அளித்தார் ;பணத்திர்கல்ல;

ஆரம்ப நிலையில் ஆன்மீக வாதிகள் ஆடம்பர நிலையில் இல்லை.

இன்றைய சூழலில் ஜட அறிவைப்பெருக்கும் ஆன்மிகம்.

இதிலிருந்து மெய்ஞானம் பெற வேண்டும்.

ஆடம்பர பக்தி என்பது முக்திக்கு வழி இல்லை.