பாரதம் எங்கே செல்கிறது?
இந்தியா --தீயவைகள் ஒழியுமா? நாளுக்குநாள் பெருகுகிறது.உள்நாடு-வெளிநாடு என்று பார்க்காமல் பலாத்காரம்
நடக்கிறது. பாலியல் பலாத்கார வயது நிர்ணயம் 18. 16 வயதில் திருமணம் செய்தால் குழந்தை பிறக்குமா?பிறக்காதா?
இளமையில் கல்வி என்பது மறந்து தொலைக் காட்சியில் 3 வயது குழந்தைகளிடம் கேட்கும் கேள்வி ஆன் நண்பர்கர்,பெண் நண்பர்கள் பற்றிதான். கல்லூரிக்கு ஏன் ?மூன்றுவயது குழந்தையின் பதில் காதலிக்க.பெண் நண்பர்கள்/ஆண் நண்பர்கள் வைத்துக்கொள்ள .
காதல் ஆழ்மனதில் இருந்து வரவேண்டும். நமது கலாசாரம் மாறுகிறது.காதலிக்கவில்லை என்றால் 16 முதல் 25 வயது வீண்.
ஆசிட் வீசி தனக்குக் கிடைக்காத பெண் உயிருடன் இருக்கக்கூடாது என்ற கலாச்சாரம்.கொலை,கற்பழிப்பு காதலிக்க பலாத்காரம் .சேது படத்தில் ஆரம்பம்.பணத்திற்காக கற்பழிப்பு. அதை நியாயப்படுத்தும் கதைகள்.
வெளிநாட்டுச் சுற்றுலா வரும் பெண் பயணிகள் ஜாக்கிரதை! என்ற அறிவிப்பு.
இன்றும் இதே நிலை தான் என்றும் இதே நிலைதான் என்றால் நாட்டில் அமைதி எப்போது?கீச்சகவதம்,ராவணவதம்,நடந்து கொண்டே இருக்குமா/?
16 வயதோ 15 வயதோ குற்றம் புரிவோருக்குக் கடும் தண்டனை எப்போது?
சட்ட சபை உறுப்பினர்கள்/அமைச்சர்கள் ஆகியோருக்கு பயப்படாத அதிகாரிகள்
எப்போது/? ஒரு போக்கிரி ஒரு நீதிபதியை அடித்தால் கடும் தண்டனை இல்லை.
மாணவர்கள் காப்பி அடித்தால் தண்டனை இல்லை.
இளம் வயதில் தவறு செய்தால் தண்டனை இல்லை.தவறுகளுடன் வளரும் இளசுகள் முதிரும் குற்றவாளிகள் இல்லையா?
செடியில் நிமிர்த்தாமல் வளைந்த முற்றிய மரத்தை நிமிர்த்தமுடியுமா/?
இளம் கன்று பயம் அறியாது என்பதற்காக இஷ்டப்படி துள்ள விடலாமா?
பாரதம் இந்த தீய அடிப்படையில் வளர்வதால் இன்று செய்திகள் பெரும்பாலும் கொலை;கொள்ளை;போலீஸ் அதிகாரிக்கு அடி-உதை .கற்பழிப்பு,ஊழல் என்பதற்கு பெயர் பெற்றுவருகிறது.
மகமாயை களைந்திட வல்லபிரான்
மகமாயை களைந்திட வல்லபிரான்
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே !
அகம்,ஆடைமடந்தையர் என்று அயரும்
ஜெகமாயை யுள் நின்று தயங்குவதே!