வெள்ளி, அக்டோபர் 11, 2013

அதனால் தான் இல்லறம் நல்லறம். இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.

தூக்கம் வரவில்லை
,துக்கத்திநாலா?
துன்பத்திநாலா?
வறுமையினாலா?
எதுவுமே இல்லை .?
இளமையா?பிரிவா?
எதுவுமே இல்லை.
அகவை கூடியதால்
அழைப்புமணி பயமா?
அதுவும் இல்லை.
எதுவுமே இல்லை
ஆனால் ,தூக்கந்தான்
வரவில்லை.
பழைய நினைவுகள்,\.
இருபத்தேழு ஆண்டுகள்
அன்னை-தந்தை கண்காணிப்பில்,
முப்பத்தாறு ஆண்டுகள் மனைவியின் அரவணைப்பில்
இன்றும் அவள் பாதுகாப்பில்.
அகவை எனக்கு இருபத்தைந்து.
அவளுக்கோ இருபது.
மாமன் மகள் தான் ,
அம்மாவிற்கு அண்ணன் மகள்தான்.
வந்தவளின் மனதில் வளர்த்த ஆசைகள்
 என்ன என்னவோ;!!??
எண்ணாமலேயே என்னவளை
என்னடிமை ஆக்கி வைத்தேன்.
இன்றுவரை எதுவும் அவள் கேட்டதில்லை.
கேட்காமல் எல்லாம் கிடைத்துவிட்டதென்பாள்.
அன்பிற்குப்பரிசாய் முத்துக்கள் ,வைரங்கள்,தங்கங்கள்
அனைத்தும் சேர்ந்த விலைமதிக்கமுடியா
வாரிசுகள் மூன்று.
தாயைப்போல பிள்ளைகள்,அதிர்ந்து பேசா அன்புகள்.
நான் என் குழந்தைகள் இப்படித்தான் ஆகவேண்டும் என்ற
திட்டங்கள் தீட்டவில்லை;
வளர்ந்தனர்.வளர்த்தாள் அவள்.
என் சக்திக்கு என்பதைவிட திட்டமில்லா உழைப்பு.
இறை நம்பிக்கை.
மும்முறை இறந்து உயிர்பெற்று வாழ்கிறேன்.
எம்முறையும் என்னிடம் அவள் கலங்கியதும் இல்லை;
மும்முறையும் அவள் பட்ட வேதனைகள்  எதுவும்
பேசியதும் இல்லை;எந்திர கதியில் இயக்கம்;
அதிலே பிறந்த ஊக்கம்;
வளம்பெற வாழ்கிறேன்.


அகவை கூடினாலும் அவளது அரவணைப்பும்
அன்பும் இன்றும் கூடிக் கொண்டிருப்பதால்;
இல்லறம் இல்லத்தரசியின் இனிய இசைவில்.
அதனால் தான் இல்லறம் நல்லறம்.
இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.