ஞாயிறு, ஜனவரி 08, 2012

இறைவன் அனைவருக்கும் ஒருவனே.


ஒரு ஊரில் இப்ராஹீம் என்ற கடவுள் பற்று உள்ளவன் இருந்தான் .  தன் மதத்தில் மிகவும் பற்றுகொண்டவன்.அவன்  வீடு ஊருக்கு  எல்லையில் இருந்தது.அந்த வழியில் வரும் வழிப்போக்கர்களுக்கு உணவளித்து உபசரிப்பதில் மிக மகிழ்ச்சி கொண்டு விளங்கினான்.அவன்  தன் கடவுளின் கிருபையால் தான் உணவளிக்க முடிகிறது
என நினைத்தான்.ஒரு  நாள் ஒரு வயதான முதியவர் அங்கு வந்தார்.அவர் மிகவும் பசியுடன் இருந்தார்.
இப்ராஹீம் உணவளிக்குமுன் தன் இறைவனைத் துதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.வந்த விருந்தினர்களும்  தொழுகையை  செய்யவேண்டும்.
ஆனால் அன்று வந்த முதியவர் தான் வணங்கும் இறைவனை வழிபடுவேன் என்று இப்ராஹீம்  தொழுகையை தான் செய்ய மறுத்துவிட்டார்.

இப்ராஹீம் அந்த பெரிவருக்கு உணவளிக்கவில்லை,பெரியவர் சென்றதும்   அங்கு    பெரியவருக்கு     இன்று     வரை   உணவளித்து காப்பாற்றினேன்   . இன்று  அவர்  வேறு  மதம்  என்று உணவு  அளிக்கவில்லை .
இறைவன் அனைவருக்கும் ஒருவரே  என்ற  தேவ  ஒலி கேட்டது .
இப்ராஹீம் உடனே   முதியவரை   தேடிச்  சென்று  பார்த்தான்  முதியவரும்   இறைவன் ஒருவரே
என்றார் ,இப்ராஹீம் மிக ஆச்சரியப்பட்டான் .
இறைவன் அனைவருக்கும் ஒருவராக இருந்துதான் காப்பாற்றுகிறார்  என்ற உண்மை  தெரிந்தது இப்ராஹிமுக்கு. நமக்கும் அது புரியவேண்டும்.


ULAKANEETI ==LOKNEETI TAMIL-HINDHI

उलका नीति




வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய  வேண்டாம் =अफवाहें  और झगडालू बातें करनेवालों के साथ मत घूमना.

மதியாதார் தலைவாசல்  மிதிக்க  வேண்டாம்.==अनादर  करनेवालों के द्वार पर कदम मत रखना
மூத்தோர்  சொல் வார்த்தைகளை   மறக்க வேண்டாம்.=बुजुर्गों की बातें कभी मत भूलना

முன்கோபக்காரரோடு  இணங்க வேண்டாம்==गुस्सैल  आदमी  के संग मत रहना
வழிப்பறித்து  திரிவாரோடு இணங்க  வேண்டாம்
डकैतों के संग मत घूमना .

சேர்த்த  புகழ் ஆளன் வள்ளி பங்கன் திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே.


अरे मन!!
प्रसिद्ध वल्ली के पति   मयूर के वाहन वाले वेलायुध का यशोगान कर.



.

THURUMBU.

ஆணவம் அழிந்தது

ஹிந்தி கவிதை.


நான் ஒரு கவிஞன் ,

புவி புகழும் புலவன்  ,

என்ற மமதை யோடு,

மாடியின் சாளரத்தில்,

நின்று,
ஆணவத்தோடு,
அகிலம் என் கையில் ,
என்றே  இருந்த நேரம்,
காற்று ஒன்று வீச,
தூசி சிறு துரும்பு,
கண்ணில் விழ
துடித்தேன் ,
பல மணித்துளிகள்.
துரும்பின் எச்சரிக்கை,
என்னைத் திகைக்க
வைத்தது.
ஆணவக் கவிஞரே,
அவனியில்
ஆணவம்   ஒழிய
போதுமே ஒரு துரும்பு.
செயல் மறந்து ,
செயல் இழந்து ,
திகைத்து நின்ற
மணித்துளிகள்.


ORU THULI HINDI KAVITHAI TAMILAAKKAM

ஒரு மழைத்துளி

காரில் இருந்து,
பிரிந்த ஓர்
மழைத்துளி,
மனதில்கலக்கமுற்று,
பல எண்ணங்கள்
தோன்ற
நிலம் நோக்கி
வந்தது

நான் சாக்கடையில்,
விழுந்து,
வீணாவேனோ?
தீச்சட்டியில்
விழுந்து,
தீய்ந்து போவேனோ?
என் வாழ்க்கை
எப்படிபோகுமோ?
ஏதாகுமோ?
நினைத்து நினைத்து,
எண்ண அலைகளால்,
மன பீதியுடன்,
மண்ணின் அருகில்
வரும் போது,
ஒரு அனுகூலக்காற்று.
அதை கடல் மேல்
கொண்டு சென்று,
ஒரு சிப்பியில் ,
சேர்த்தது.
அது விலை மதிப்பற்ற,
முத்தானது.

அவ்வாறே,

அவனியில் பிறந்து
பரந்த உலகில்
கவலைகள் கொண்டு,
இல்லம் துறந்து,
அலையும்மனிதனும்,
அனூகூலவாய்ப்புப்பெற்று,
அவனியில்,
அரும் புகழ் பெற்று,ஆஸ்திகள் ,
அனுபவ அறிவு பெற்று,
அவனியில் வாழ்கிறானே.
 

MULLUM MALARUM HINDHI KAVITHAI TAMILAAKKAM

முள்ளும் மலரும்


மலரும் முள்ளும் ஒரே செடியில்,
கதிரவன் ஒளியும்,சந்திரன் ஒளியும் ,
மாரியின் நீரும்,வீசும் காற்றும்,
அவைகள் மேல் இரண்டுக்கும் ஒன்றே.

ஆனால்,

மலரின் மணம்,
மலரின் மென்மை,
மது தரும் மாண்பு,
வண்டுகளிடம்
காட்டும்
அரவணைப்பு,
மனம் பெறும்,
மகிழ்ச்சி,
கண்களுக்கு  
குளிர்ச்சி.

அதே  செடியில்.
முட்கள்,
வண்டுகள்
உடலில் குத்தி,
தொடுவோரின்
உடலையும்,
உள்ளத்தையும்
புண்ணாக்கும்.
இன்னல் இயல்பு.

இப்படைப்பு,
இத்தோற்றம்.
இக்குணம்,
யார் குற்றம்??




ulakaneethi

வாழாமல்  பெண்ணை வைத்துத் திரியவேண்டாம்.=(स्त्री) घरवाली   के घर में रहते ,उसे बेकार रखकर ,बाहर   मत घूमना.

மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்லவேண்டாம்=अपनी अर्द्धांगनी पर आरोप मत लगाना.
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்.= बुरे आचरण के खतरनाक  गड्ढे में मत गिरना.
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள  வேண்டாம்.=भयंकर युद्ध में से पीछे मत हटना.
தாழ்வான குலத்துடனே சேரவேண்டாம்=नीच कुलों से मत जुड़ना.
தாழ்ந்த வரைப் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.निम्न कुलों पर दोष मत लगाना.
வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.
अरे मन!!
अति अद्भुत जिंदगी वाली वल्ली के पति मयूर वाहन के ईश्वर षणमुख  का यशोगान करना.

ulaka niti=saansaarik neeti niyam =TAMIL-HINDI


உலக நீதி=सांसारिक नीति-नियम.

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரியவேண்டாம்.=अन्यों के कसरों को कहते-कहते मत घूम.

கொலை-களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்.=हत्या,चोरी-डाका डालनेवाले आदि के संग मत रह   और उनको अपना साथी मत बना

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்.=पत्व्रत  नारियों पर मोह मत रख.

கொற்றவனோடு எதிர் மாறு பேசவேண்டாம்..=शासकों से तर्क मत कर.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.जहाँ मंदिर नहीं ,वहां मत वास कर
.
மற்று நிகர் இல்லா வள்ளி பங்கன்  மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.
अरे मन!अनुपम वल्ली के पति मयूर वाहन के कार्तिक का यशो गान कर.