தனிமை என்பது எங்களுக்கு அகவை கூடிய பின்.
கூட்டத்துடன் இருந்த எங்களுக்கு தனிமை,
புதிய கலக்கம் தான்.
முதுமையில் தனிமை என்பது,
சக்தி உள்ளவரை சரிதான் . ஆனால்,
உள்ளமும் உடலும் தளர்ந்த முதுமை,
ஆண்டவன் ஞானம் தரும் நேரம்.
காலம் கடந்த ஞானம். என்ன பயன்.
எப்படி இருந்தோம் என்பதை விட அப்படி
இருந்திருந்தால் ,.....பல எண்ணங்கள்
நாம் செய்தது என்ன? சாதனை என்ன?
மீண்டும் நாம் இருந்த நிலை வந்தால்?
ஆண்டவன் பூமி தாங்காது என்றுதான்,
அகவை கூட்டி,மனிதனே வெறுத்து,
ஆண்டவா அழைத்து செல். என்கிறான்
உற்றாரும் பெருசு நல்லாத்தான் இருந்து,
கடமை முடித்து குழந்தைகளை நல்ல நிலைமை யில்
பார்த்து கண்ணை மூடிடுச்சு என்றும்
அப்பாவுக்கு வயதாயிடுச்சு ,
அவஸ்தப்படாம போய் சேர்ந்துட்டாரு. நல்லசாவு.
இந்த இயற்கை இறைவன் லீலை. இதுதான் தத்துவம்.