உள்ளம் மனித உள்ளம்,
உலகில் அறியமுடியாதது.
புரிய முடியாதது.
நல்ல உள்ளம் எப்படி இருக்கும்?
அது மனிதனின் வளர்ந்த விதம்.
சூழல்,ஆசை, அவன் உற்றார்,உறவினர்,
கல்வி,மனதின் இயற்கை குணம்,
பரம்பரை,நட்பு,என்ற அடிப்படையில்
மாறும்.
அமைதியும் பொறுமையும் ஒருவனுக்கு இயற்கையாக அமையும்.
சிலரின் முகம் அமைதியாக இருக்கும்.
பேச்சு தித்திக்கும்.
அவன் பெரும் உதவியாளன் போல் தோன்றும்.
அப்படிப்பட்டவனின் செயல்கள் சுயநலத்தின் ஆணிவேராக இருக்கும்.
சிலரைக் காணும்போதே மரியாதை தோன்றும்.
சிலரைக் காணும்போதே ஏளனம் செய்யத்தோன்றும்.
சிலரைக் காணும்போதே வெறுப்பு தோன்றும்.
சிலரிடம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் .
சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
ஒரே சொல் ஒருவர் கூறும்போது ஆறுதலாக இருக்கும்.
அதே சொல் மற்றொருவர் சொல்லும் போது கேட்கவே பிடிக்காது.
சிலரைப்பார்க்கப் பிடிக்கும்.சிலரைப்பார்க்கவே பிடிக்காது.
சிலரிடம் உதவி கேட்கத் தோன்றும்.சிலரிடம் கேட்கத் தோன்றாது.
சிலரின் முகம் தெய்வீகமாக காட்சி அளிக்கும்.
சிலரின் முகத்தில் வில்லத்தனம் தோன்றும்.
உதவி செய்பவர் யார்?புரியாது.
சிலரிடம் கேட்காமலேயே உதவி கிட்டும்.
சிலரிடம் கேட்டாலும் கிட்டாது.
சிலர் நட்பு பாராட்டி,வெறுப்பு காட்டுவர்.
சிலர் ஏமாற்றவே நட்பு பாராட்டுவர்.
தேவைப்பட்டால் தலையில் வைத்துக் கொண்டாடுவர்.
காரியம் ஆனதும் உதறிவிடுவர்.உயிருக்கே உலைவைப்பர்.
அது மனைவி ஆகவும் இருக்கலாம்.மகனாகவும் இருக்கலாம்.
மகளாகவும் இருக்கலாம்.மருமகளாகவும் இருக்கலாம்.
நண் பனா கவும் இருக்கலாம்.
பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று
அனைவருக்கும் நல்லது செய்யும் மனம் படைத்தோரும்
நானிலத்தில் உண்டு.
சூழ் நிலைக்கேற்று அனைவரையும் கவர்ந்து ஏமாற்றுவோரும் உண்டு.
நன்மை செய்தே தீய பெயருடன் மற்றவர்களின் வெறுப்புடன் வாழ்வோரும் உண்டு.
தீமை செய்தே நல்ல பெயருடன் வாழ்பவரும் உண்டு.
ஒரு வீட்டில் மிகவும் உழைத்து அனைவரின் தேவை அறிந்து
தன்னலம் கருதாமல் இருப்பவர்களை,அவனால் ஆதாயம் பெற்றவர்கள் வெறுத்து ஒதுக்குவதும் உண்டு.
உற்றாருக்கும்,ஊருக்கும் ,உலக நடைமுறை நீதிக்கும் பயந்து உண்மை மறைப்பவரும் உண்டு.
தன்னலமே பெரிது என்று சத்தியம்,நேர்மை நாணயம்,அன்பு,என்று அனைத்தையும் குழி தோண்டி புதைப்பவர்களும் உண்டு.
அன்பு காட்டி காரியம் சாதித்தவுடன் ,வெறுக்கும் மனைவியும் உண்டு,
தன் தாயார்வீட்டின் தவறுகளை,இழிசெயல்களை மறைத்து,
செய்யும் நன்மைகளை மறைத்து,சிறிய தவறுகளையே பெரிது படுத்துவோரும் உண்டு.
மனிதர்கள் தான் அவர்கள் குணம் தான் அறியமுடியாது.
எல்லாம் ஆண்டவன் செயல் என்று பற்றற்ற முறையில் எதையுமே கண்டுகொள்ளாமல் வாழ்பவர்கள் ஞானிகளாவார் .
தாமரை இல்லை தண்ணீர்போல் ஒட்டாமல் வாழ்பது தான் ஞான நிலை.
அந்நிலை அடைந்தால் துறவறம் தான்.
உலகில் வாழ்ந்தால் உண்மை இது என்று உறுதியுடன் கூறமுடியாது.
நேர்மை இதுதான் என்று கூறமுடியாது.
தவறுசெய்பவர்கள் தாயாகவும் இருக்கலாம்.தந்தையாகவும் இருக்கலாம்.
சகோதரர்களாகவும் இருக்கலாம், இருக்கலாம் அதை வெளிப்படுத்த
துணிச்சல் வேண்டும். அது எத்தனை பேருக்கு வரும். உலகில் பெற முடியாது.