இறைவன் படைப்பில் பல அற்புதங்கள்.
இயற்கையின் விந்தைகள்
இதயத்திற்கு ஒரு இன்பம்.
மனதிற்கு ஒரு அமைதி,
இன்றைய உலகம் எப்படி உள்ளது?
மற்றவர்களுக்காகவே வாழும் சிலர்.
நாட்டிற்காக வாழும் சிலர்.
தங்கள் குடும்பம் சுற்றத்திற்காக வாழும் சிலர்.
தங்கள் குடும்பத்திற்கு மட்டும் வாழும் சிலர்.
நேர்மைக்காக சிலர்,
வாய்மைக்காக சிலர்.
நீதிக்காக சிலர்,
தன் மன நிம்மதிக்காக சிலர்,
தனக்காக சிலர்,
தன் சுய நலத்திற்காக சிலர்.
தன் பதவிக்காக ,
தன் வாரிசின் பதவிக்காக .
மற்றவர்களின் உழைப்பில் வாழும் பலர் .
இந்த மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர்கள்
தான் உண்டு ,தன்குடும்பம் உண்டு என
என்று இறைவன் அளித்தது போதும் என்று
கிடைத்ததைக்கொண்டு வாழ்பவர்கள்
எவ்வித பேராசையும் ,உலக இன்பங்களை
அனுபவிக்கவேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் பலர்.
இந்த பலரின் வாழ்க்கை ,ஜனனம், மரணம் எல்லாம்
எப்படி அமைகிறது?
இதைப் புரிந்துகொண்டால் இறைவனாகலாம் .
இந்த கடும் மந்தணமான பணி
மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி.
அதைத்தான் இறைவன் என்கிறோம்.
அந்த இறைவன் ஒருவரே.
ஆனால் பல மதங்கள்.
மனிதர்களை நெறிப்படுத்த.
மனிதர்கள் மனதில் மனித நேயம் வளர்க்க.
மக்களிடம் உள்ள வேற்றுமைகளை ஒழித்து
ஒற்றுமை வளர்த்து
வையகம் வாழ என்று உணர்த்த.
சஹிப்புத்தன்மை வளர.
இந்த உயர் தத்துவம் உலகிற்கு உணர்த்தும் ஒரே நாடு
பரந்த உள்ளம் கொண்ட பாரத நாடு.
விருந்தினர்களை தெய்வமாக போற்றும் நாடு .
राम एक है,रहीम एक है,
मज़हब नहीं सिखाता आपस में वैर रखना
ईश्वर अल्ला तेरे नाम सबको संमति दे भगवान!
हिन्दू मुस्लिम सीख ईसाई ,आपस में है भाई -भाई.
மஹா கவி பாரதி, கவிஞர் கண்ணதாசன்
போன்றோர் அனைத்து மதங்களையும் புகழ்ந்து பாடினர்.
இதனால் தான் நாடு ஊழல்கள் வளர்ந்தாலும்
நாடும் வளர்ந்து வருகிறது.
இளைஞர்கள் அறிவுத்திறனைக்கண்டு
அகிலமும் புகழ்கிறது.
பாரதம் வாழ்க! வையகம் வாழ்க!
வையகம் ஒரு குடும்பம்.
ஆகையால் தான் விவேகானந்தர் ,
இந்திய இளைஞர்களுக்கு
ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இளைஞர்களே!!
இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.
ஜய் ஹிந்த்!