புதன், மார்ச் 07, 2012

penkaldinam.

பெண்கள்  தினம்.
ஹிந்தி கவிஞர்  சுமத்திரா நந்தன்  பந்த்  தன் கவிதையில் பெண்களைப்பற்றி 

உலகில் சுவர்க்கம் என்று ஒன்று இருக்கிறதென்றால் ,
பெண்ணின்  இதயத்தில் தான்.
நரகம் என்று உலகில் இருந்தால் அதுவும் பெண்ணின் இதயம் தான் 
  என்கிறார்.
ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்று ஒரு பாடல்.

பெண்ணின் மகத்துவத்தை ஹிந்து மதத்தில் உணர்ந்து தான் 
முப்பெரும்   பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரன் ஆகிய வர்களை முறையே 

படைத்தல்,காத்தல், அளித்தல் என்ற  தத்துவத்தை அளித்து, உலகில் மனிதன் வாழ அத்தியாவசிய  மான கல்வி,தனம்,வீரம் மூன்றிற்கும்  கலைமகள்,அலைமகள்,மலைமகள் என்ற முப்பெரும் தேவிகளை வழிபடுகிறான்.கிராம தெய்வங்களாக ,மதுரைவீரன் ,முனீஸ்வரன்,
கருப்பணசாமி, என்ற ஆண் தெய்வங்களை வெட்ட வெளியில் காவல் தெய்வங்களாக  வைத்து அம்மன் கோயில்கள் பிரபலமான சக்திவாய்ந்த 
தேவிகளாக வணங்கப்படுகின்றன.
காளியம்மன் கோயில்,மாரியம்மன் கோயில்,நாகாத்தம்மன் கோயில்,பச்சையம்மன் கோயில்,முண்டகக்கண்ணியம்மன் கோயில்,
ரேணுகாதேவி,திருவீதிம்மன்,துரௌபதி அம்மன்,சப்த  கன்னிகள்,அங்கால பரமேஸ்வரி கோயில்,மீனாக்ஷி அம்மன் ,காமாட்சி அம்மன்,அலமேலுமங்கை,
என அம்மன்கள் தான் எத்தனை.

இவ்வளவு முக்கியத்துவம் இருந்தாலும் சமுதாயத்தில் பெண்களுக்கு சற்று 

அடிமையான இடம் தான். அடுப்போதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற வினாதான்.இன்று  பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசினாலும் அவர்கள் 
பலஹீனம் தாய்மை.பெண்களை அபலை என்பர்.பலம் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம்.
ஆனால் பெண்மை ,மேன்மை என்று ஒன்று இல்லை என்றால், தாஜ்மஹால் 
என்ற உலக அதிசய மஹால் கட்டப்பட்டு பாரதத்துக்கு பெருமை கிடைத்து இருக்குமா.

இருப்பினும் ஒரு வருத்தம் படித்த பெண்கள் பொறுமை இல்லாமல் விவாகரத்துக்குத் தயாராகின்றனர்.ஆண்கள் செய்யும் அட்டகாசம்.குடிவெறி,
மனைவிகளை முரட்டுத்தனமாக அடித்தல்,கொத்தடிமை போல் திருமணத்திற்குப்பின் நடத்துதல்,இதெல்லாம் பொறுத்தது போதும் என்று 
பெண்ணினம் பொங்கி எழுந்தால்  அமைதி இல்லாமல் ஆண்கள் தனிமையில் 
அலையும் நிலை ஏற்படும்.
ஆனால் இன்று பல நகரங்களில்  மனைவிகளால்  துன்பப்படும் கணவன் மார்கள் அதிகம். ஆண்களுக்கு  வேலைவாய்ப்பும் குறைவு.ஆண்களைவிட அதிகம் படிப்பவர்கள் பெண்களே.
இன்றைய திரைப்பட கதை நாயகர்கள் அனைவருமே பொறுக்கிகள்.போக்கிரிகள்.சட்டத்தை காக்கும் குற்றவாளிகள்.
ஆகையால்  எதிர்காலம்  இல்லறம் நல்லறமாக இருக்குமா ?என்ற ஐயமே 
நீதிமன்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகமாவது கண்டு ஏற்படுகிறது..




ர.