மனிதத் தன்மை யின் மேன்மை.
பலர் தங்கள் வாழ்க்கை பொருள் இல்லாததால் பொருளற்றது என நினைக்கின்றனர். உண்மையில் பொருளுள்ள வாழ்க்கை பொருளாதார
அடிப்படையில் அமைவதில்லை.பொருளும் புகழும் மனிதனின் குணத்தால்,செயலால் ,திறமையால் தானே வருவது.
இந்த அருங்குணங்களும் பொருளாதாரத்தின் அடிப்படையால் அமைவதில்லை.
அதற்குத்தான் சத்சங்கம் தேவைப்படுகிறது.
படிக்காத,அனாதையான,இந்துப் பெண்ணிற்குப் பிறந்து ,முகலாய தம்பதியாரால்
வளர்க்கப்பட்ட கபீர் சத் சங்கத்தால் அரிய பெரிய கருத்துக்களை வெளியிட்டார்.
துளசிதாசர்,அருணகிரிநாதர் ,கண்ணதாசன் போன்றோர் பெண்ணாசையால் அறிவிழந்த போது ஆன்மிகம் அவர்களை உயர்த்தியது.
பட்டினத்தார்,பர்த்துஹரி போன்றவர்கள் புலம்பல் தங்கள் புறப்பற்றால் ஏற்பட்ட இழப்பைக் காட்டுகிறது.
அகம் என்ற பையில் உயரிய எண்ணங்கள்,சிந்தனைகள்,அனுபவ மனிதர்கள் பட்ட துன்பங்கள்,திருந்திய விதம் ஆகியவற்றை நிரப்பினால் அது வாழ்க்கையை மேன்படுத்தும்.
பொருளுள்ள வாழ்க்கை,மனிதனுக்கேற்ற குணங்கள்,பரோபகாரம்,நேர்மைவாய்மை பொருளாதரமற்ற வாழ்க்கையையும் குறைந்த பக்ஷம் தன வட்டத்திற்கும் ஒரு உயர்வைத் தரும்.