'மதி
"மதி "
மதியால் விதியை வெல்லலாம்.
மதி என்றால் நிலவு என்றும் ஒரு பொருள்.
மதிக்கும் மதி என்பது குளிர்ந்து
இருக்கும்.
சுட்டெரிக்கும் சூரியன் போல்
மதி நடந்தால்
மதிகெட்டுப்போகும் .
விதி விளையாடும்.
ஆகையால்
மதி என்ற சொல்லுக்கு
அறிவு,நிலவு என்ற
பொருள் போலும்.
மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம்
எனவே
மதிப்பு மிக்க வாழ்க்கைக்கு மதிவேண்டும்.
வள்ளலார் முருகனிடம்
முதலில் கேட்பது மதி.
மதி வேண்டும்.
நின் கருணை நிதிவேண்டும் என்கிறார்.
"மதம்"என்பதை பேய் என்கிறார்.
அது ஆணவமாகவும் இருக்கலாம்.
தன் மதம் தான் பெரிது
என்ற எண்ணம் வரக்கூடாது.என்றும்
இருக்கலாம்.
இறைவன் மதங்களைக்கடந்தவன்.
மதம் கொண்டவனிடம் இறைவன் இருப்பதில்லை.
மனிதநேய மிக்கவனிடம் இறைவன்
குடிகொண்டிருப்பான்.
மதி மதத்தைத் தணிக்கும்.
மதிக்கு அழகு என்று சொல்வார்கள்
மதியழகன் ,அறிவழகன் ஞான சுந்தரம்
என்று மதிக்கும் பெயர்.
மதி தான் மதத்தை வெல்லும்.
மனித~ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.