புதன், நவம்பர் 28, 2012

பணம் குணத்தைக் கெடுக்கும்

அவசியமானவைகளும்  வணிக  நோக்கமும் 


       மனிதர்   நிம்மதியாக வாழ  நல்லொழுக்கம் அவசியம்.
மனிதர்கள் ஆத்ம  திருப்தியுடன் வாழ ஆன்மிகம் அவசியம்.

மனிதர்கள் நிமிர்ந்து வாழ கல்வி அவசியம்.

மனிதர்கள் ஆரோக்யமாக வாழ மருத்துவம் அவசியம்.

மனிதர்கள் பயமின்றிவாழ காவல் துறை அவசியம்.

குடும்பங்கள் குதுகூலமாக வாழ குடும்ப அமைதி அவசியம்.

இன்றைய  சூழலில்  மேற்கண்ட நான்குமே வணிக நோக்கமாக மாறிவிட்டன.

நல்லொழுக்கங்களை எதிர்கால சந்ததிகள்,
கல்விநிலையங்கள்,சமுதாயம்,பொழுதுபோக்கும் நாடகம்,திரைப்படம் ,
தொலைக்காட்சிகள் மூலம் பெறுகிறான்,

இவைகள் அனைத்தும் தன்னம்பிக்கை தருவதாகவும் ,ஏற்றதாழ்வுகள் போக்குவதாகவும் சமத்துவம் ,சகோதரத்துவம் உண்டாக்குவதாகவும்  அமையவேண்டும் .
அமைதிக்காக  திரைப்படங்கள் சென்றால்,முதல் காட்சியே கொலை,கொள்ளை ,கற்பழிப்பு,கள்ளக்கடத்தல், காவல்துறை அனைத்துமே

நேர்மையைவிட  பணமே பிரதானம்  என்ற போக்கு.

ஆலயங்கள் செல்ல முடியாமல் சிறு நடைபாதைகடைகள் ஆக்கிரமிப்பு

உள்ளே சென்றால் உள்ளம் அமைதி அடைவதற்குப் பதிலாக எத்தனை எத்தனை ஏற்ற தாழ்வுகள்.ஜாதிய,பொருளாதாரம்,வடமொழி ,தமிழ் மொழி வழிபாடு .திருநீறு வழங்குவதில் காட்டும் பாகுபாடு


கல்வி  வாணிகம் படு ஜோர்.அரசாங்கம் தன்  பள்ளிகளை வளர்க்கிறேன் என்று சொல்கிறது .ஆனால் மூடப்பட்ட  பள்ளிகள் அதிகம்.  அதற்கான காரணங்கள் மன சாட்சியுடன் வெளியே சொல்லமுடியாது.பள்ளி நேரங்களில்
பள்ளி வகுப்பறைகளில்   மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள்.
தனியார் பள்ளிகளில் ஆசிர்யர்களும் சேர்ந்து இருப்பார்கள்.

மருத்துவம் அனைவரும் அறிந்ததே

தியாகம்,சேவை மனப்பான்மை  எங்கும் இல்லை .நாடு என்னவாகும்

  இளம்பிஞ்சுகள்  காதலைப்பற்றி பேசுகின்றன.கல்லூரி எதற்கு?எட்டுவயது

சிறுமியின் பதில் காதலிக்க.

பணம்  குணத்தைக் கெடுக்கும்


பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.

கலப்புத்திருமணங்களும்  பெற்றோர்களின்  பர்தவிப்பும்


      ஜாதிகள்   பார்க்கக்கூடாது ,தாராள மனம் வேண்டும் .

குழந்தைகள்  பெற்றால் வளர்ப்பது பெற்றோர் கடன்.

தங்கள்  தேவைகள்,  ஆசைகள்  அனைத்தையும் விட்டு

வளர்க்கும்  பெற் றோர்களுக்கு ,

இன்றைய  குழந்தைகள்  ஆங்கிலம் படித்தபின்

முதலில் பேசுவது வரைவது எல்லாமே இதயபடம்,  ஒரு அம்பு ,

ஐ லவ் யு   தான்.


கலப்பு   மணத்தை   ஆதரிக்கும் அரசாங்கம்,முற்போக்கு வாதிகள் ,

பகுத்தறிவு வாதிகள் அனைவரும் மேடைப்பேச்சு பேசும் வாய்ச்சொல் வீரர்களாகத்தான்  உள்ளனர். அனைவரும் ஜாதிவாரி மக்கள் துகைக் கணக்கை  ஆதரிக்கின்றனர்.

 கலப்புத்திருமணம்  செய்த பின்  பிறந்த குழந்தையின் ஜாதி  இப்பொழுது

பெரிய  பிரச்சனை .அதிலும் அம்மா  ஜாதியா,அப்பா ஜாதியா.

காதல் திருமணம்  ஜோடி  பிரிந்தால் அந்தக்குழந்தை அப்பாவின் பாட்டியால்
வளர்ப்பதில்  எவ்வளவு சிக்கல் .

எனக்குத்தெரிந்த ஒரு பெண் காதலனைப் பிரிந்து    அப்பா    வீட்டிற்கு  குழந்தையுடன்  வந்து  பட்ட பாடு தற்கொலையில் முடிந்தது.

இன்று  குழந்தைப் பருவத்தில்    இருந்தே  காதல் என்பதும்,அப்பாவை மதிக்கக் கூடாது  என்பதும்,யாரும் தேவை இல்லை  எப்படியும் பிழைக்கலாம்  ஒரு
தவறான  மனோபாவம் என்ற   தொற்று நோய் வளர்ந்து   பலரை  நிம்மதி இழக்கச்  செய்கிறது.  பலரை கொலை  காரர்களாக்குகிறது. பலர் வாழ  வேண்டிய  வயதில் பரலோகம் அனுப்புகிறது.

இன்று  குட்டி -  சுட்டி விளம்பரம் விளம்பரம்.ஒரு 7-8 வயது  சிறுமியிடம் ஒரு வினா ---காலேஜ்    சென்று  என்ன செய்வாங்க?
 விடை --காதலிப்பார்கள் .
விடை கேட்டு  சிரிப்பு.

 குஷ்பு  பேசியதற்கு  நீதி மன்றம் மன்றம்..போராட்டம் .

  நம் தமிழர் பண்பாடு இப்பொழுது மௌனம்.

பெற்றோர்கள் ஒரு எந்திரம் .குழந்தை  பெற்று வளர்ப்பது.

இந்நிலை   உருவாக்கும்  பெரிய திரை ,சின்னத்திரை  அவர்கள் தனிப்பட்ட

வாழ்க்கை  நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது .

 அவர்களும் நீதிமன்றம் செல்கிறார்கள்.

எதிர்கால இளைஞர்கள், நிம்மதி இன்றி இருக்கும் சமுதாய  சூழல் உருவாகும்.

பெற்றோர்கள் நிம்மதி இழப்பார்கள்.




 

ஆசிரியராக விரும்பாததற்கும் யார் காரணம்?

பெற்றோர்கள்  தங்கள் குழந்தை களுக்கு  அன்பு என்ற பெயரில் அதிகம்  சலுகை அளிப்பதால் ,
இன்றைய காலங்களில்  அவர்கள்  அதே அன்பை  வெளியிலும் எதிர்பார்க்கின்றனர்.என் மாணவன் 
ஒருவன்  என்னிடம் என் பெற்றோர்கள் என்னிடம் கண்டிப்பாக நடந்து கொள்வதோ,அடிப்பதோ,
திட்டுவதோ கிடையாது .எந்தவித அறிவுரையும் கூறமாட்டார்கள்.நீ தானாகவே தெரிந்து கொள் என்பார்கள் 
அதையே   நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்பான்.அவனுக்கு எல்லாவிதத்திலும் பெற்றோர்கள் சலுகை.
படிக்கவில்லை என்றால்  நாங்களே கவலைப்படுவதில்லை.நீங்கள்  ஏன்  அவனை கஷ்டப்படுத்துகிறீர்கள்.
அவன்  உட்கார்ந்தே பல தலை முறைக்கும் சாப்பிடலாம்.என்பர்.ஆசிரியர்களும் நமக்கு ஏன் சார் வம்பு என்று 
விட்டுவிடுவார்கள். இதில் பாதிக்கப்படுவது சில ஏழை மாணவர்கள் .அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளின் 
தேர்ச்சிவிகிதம் .  மேலும்  இதே பெற்றோர்கள்  தனியார் பள்ளிகளில் நேரடியாக ஆசிரியர்களை  சந்திக்கவோ / தரக் 
குறைவாக  பேசவோ முடியாது.ஆனால் ,அங்கு ஆசிரியர்கள் பயந்தே இருக்கவேண்டும்.விடுப்பு எடுக்க முடியாது.
ஆசிரியர்கள்,மருத்துவர்கள் காவல்துறையினர் மூவரும்  தன்னல  மில்லா  உழைப்பு தியாகம் செய்யவேண்டும்.அதற்கேற்ற 
மதிப்பும் ,மரியாதையும் ,பொருளாதார வசதியும் தரப்படுகின்றதா என்றால் அது  கிடையாது .50,000 ஊதியம் பெறும் 
பள்ளி ஆசிரியர்களால் தேர்ச்சி விகிதம் காட்டமுடியா நிலை.நிரந்தரமற்ற குறைந்த ஊதியம் பெரும் ஆசிரியர்கள் தேர்ச்சிவிகிதம் காட்டுகிறார்கள்.சில  கல்லூரிகளில்
துறைத்தலைவர்கள் (H.O.D) மாதம் 10,000/-ஊதியம்.
கல்வித்துறை  ஆசிரியர்கள் தரம் குறைவதற்கும், தரம் மிக்கவர்கள் ஆசிரியராக விரும்பாததற்கும்  யார் காரணம்?